சூதாட்டப் புகாரில் சிக்கியிருக்கும் ஸ்ரீசாந்தின் கார்கள்!

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் ஸ்ரீ சாந்த் இன்று வேறுவிதமான மெகா சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளார். டுவென்ட்டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில்இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்த் சூதாட்டப் புகாரில் சிக்கியிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கொச்சியை சேர்ந்த ஸ்ரீசாந்த்துக்கு வேகமாக பந்துவீசுவதில் மட்டுமில்லாமல் அதிவேகமாக கார் ஓட்டுவதிலும் ஆர்வம் உண்டு. இதனாலேயே அவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரை விரும்பி வாங்கி வைத்துள்ளார். இதுதவிர, அவரிடம் ஹோண்டா சிவிக் செடான் காரும் இருக்கிறது. மேலும், தனது கார் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

ஒரு கோடிக்கும் நெருக்கமான விலை கொடுத்து இந்த காரை வாங்கியிருக்கிறார்.

ஏன் எக்ஸ்6?

ஏன் எக்ஸ்6?

இந்த கார் மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது. வேக விரும்பியான ஸ்ரீ சாந்த் வேகத்தை அள்ளித்தரும் எஞ்சின் கொண்ட காரை விரும்பி வாங்கியிருக்கிறார்.

பாதுகாப்புக்கும் குறைவில்லை

பாதுகாப்புக்கும் குறைவில்லை

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லை. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், உயிர்காக்கும் காற்றுப்பைகள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

இன்னொரு கார்

இன்னொரு கார்

எக்ஸ்6 தவிர ஸ்ரீசாந்திடம் ஹோண்டா சிவிக் காரும் இருக்கிறது. சிறந்த செடான் கார்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கார் சொகுசான பயணத்திற்கு கேரண்டி கொடுக்கும்.

 சொகுசு

சொகுசு

சொகுசான பயணத்துக்கு கேரண்டி வழங்கும் சிவிக் காரை ரூ.15 லட்சம் கொடுத்து ஸ்ரீ சாந்த் வாங்கியிருக்கிறார்.

ஸ்ரீசாந்த் கனவு கார்

ஸ்ரீசாந்த் கனவு கார்

போர்ஷே கார் வாங்குவதை தனது கனவாக கூறியிருந்தார் ஸ்ரீசாந்த்.

அதற்குள்...

அதற்குள்...

இந்த நிலையில், சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். களத்தில் கடுமையான போராளியாக காட்டிக் கொள்ளும் ஸ்ரீசாந்த், நிஜ வாழ்க்கையில் சாந்தமானவராக கூறப்படுகிறார். மேலும், கிரிக்கெட் தவிரவும், விளம்பரங்கள் வழியாகவும் இவர் வருவாய் ஈட்டியுள்ளார்.இந்த நிலையில், சூதாட்டப் புகாரில் சிக்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X