டிசி டிசைன் நிறுவனத்தை பிரபலமடையச் செய்த கஸ்டமைஸ் கார் மாடல்கள்!

By Saravana

கார்களை கஸ்டமைஸ் செய்து கொடுத்து புகழடைந்த டிசி டிசைன் நிறுவனம் இன்று சொந்தமாக கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 1990களில் இருந்து தனது பிரத்யேக டிசைன் மற்றும் சொகுசு அம்சங்களால் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியிருக்கிறது டிசி டிசைன்ஸ்.

அனைத்து நிறுவனங்களின் கார்களையும் கஸ்டமைஸ் செய்து அசத்தி வரும், அந்த நிறுவனத்தை வெகுவாக புகழடையச் செய்த சில கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாடா சியரா

டாடா சியரா

கடந்த 1994ல் டிசி டிசைன்ஸ் நிறுவனம் கஸ்டமைஸ் செய்த டாடா சியராதான் அந்த நிறுவனத்தின் கஸ்டமைஸ் திறமையை வெளியுலகுக்கு காட்டியது. சியரா கர்மா என்ற பெயரிலான அந்த கஸ்டமைஸ் மாடல் வாடிக்கையாளர்களிடம் டிசியின் புகழை பரவச் செய்தது.

தேவூ சியலோ

தேவூ சியலோ

1999ல் தேவூ சியலோ காரை டிசி வாம்பையர் என்ற பெயரில் படு நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் கஸ்டமைஸ் செய்து அசத்தியது.

சியலோ கன்வெர்ட்டிபிள்

சியலோ கன்வெர்ட்டிபிள்

இந்த காரை கன்வெர்ட்டிபிளாக மாற்றியதோடு, இதன் டிசைன் இந்திய மார்க்கெட்டில் புதுமையான மாடலாக வந்தது. கார்வெட் காரைப் போன்ற டெயில் விளக்குகள், பிளைமோத் பிராவ்லர் போன்ற முன்புற தோற்றம் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

 டிசி இன்ஃபிடல்

டிசி இன்ஃபிடல்

2002ல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிசி டிசைன்ஸ் காட்சிக்கு வைத்த டிசி இன்ஃபிடல் என்ற இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

டொயோட்டா கார்

டொயோட்டா கார்

டொயோட்டா எம்ஆர்2 காரில்தான் டிசி இன்ஃபிடல் என்ற பெயரில் தனது கைவண்ணத்தை காட்டி மாற்றியிருந்தது.

டிசி கய்யா

டிசி கய்யா

2003ல் டிசி நிறுவனம் டிசி கய்யா என்ற கஸ்டமைஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. மிட்சுபிஷி லான்சர் காரைத்தான் இவ்வாறு மாற்றியது.

 டிசைன் தாக்கம்

டிசைன் தாக்கம்

புகாட்டி, பென்ட்லீ போன்ற கார்களின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையாகக் கொண்டு இந்த காரை வடிவமைத்திருந்தது. இந்த காரில் 22 இஞ்ச் வீல்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

 ஆஹா ஓஹோ அம்பி

ஆஹா ஓஹோ அம்பி

டிசி அம்பிராட் என்ற பெயரில் 2008ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நம் நாட்டின் புகழ்பெற்ற அம்பாசடர் காரை கஸ்டமைஸ் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அம்பாசடரை இப்படியும் மாற்ற முடியுமா என்ற எண்ணத்தை உருவாக்கியது.

3 சீட்டர் அம்பி

3 சீட்டர் அம்பி

3 சீட்டர் காராக மாற்றப்பட்டிருந்த இந்த அம்பிராட் கல் விங் கதவுகள், லாஞ்ச் இருக்கைகள் என அசத்தலாக இருந்தது. ஏராளமான கார்களை மாடல்களை இன்று கஸ்டமைஸ் செய்து அசத்தி வரும் டிசி நிறுவனத்தை பிரபலமாக்கிய மாடல்களில் இந்த அம்பிராய்ட் மாடலும் ஒன்று என்றால் மிகையாகாது.

Source: Cartoq

Most Read Articles
Story first published: Sunday, February 23, 2014, 22:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X