டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கான கஸ்டமைஸ் பேக்கேஜ்: டிசி அறிமுகம்!

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு டிசி டிசைன் நிறுவனம் புதிய கஸ்டமைஸ் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது.

Written By:

கார் உள்ளிட்ட வாகனங்களை சொகுசு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து தருவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக டிசி டிசைன்ஸ் விளங்குகிறது. மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் விற்பனை நிலையங்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் பல கார் மாடல்களுக்கு சொகுசு வசதிகளுடன் மாற்றிக்கொள்வதற்கான கஸ்டமைஸ் பேக்கேஜை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.

குறிப்பாக, பழைய மற்றும் புதிய டொயோட்டா இன்னோவா கார்களுக்கு டிசி நிறுவனம் வழங்கிய கஸ்டமைஸ் பேக்கேஜ் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கும் புதிய கஸ்டமைஸ் பேக்கேஜை டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் 7 சீட்டர் மாடல் என்பது தெரிந்ததே. ஆனால், டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பேக்கேஜில் பின்புறத்திலான இரண்டு வரிசை இருக்கைகளையும் எடுத்துவிட்டு வெறும் 2 சொகுசு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், 4 சீட்டர் மாடலாக மாறியிருக்கிறது.

இந்த சொகுசு இருக்கைகளை படுக்கை போன்று வெகுவாக சாய்த்துக் கொள்ள முடியும் என்பதோடு, மசாஜ் வசதியும் உள்ளது. ஒவ்வொரு இருக்கையும் மட்டுமே ரூ.2 லட்சம் மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்வரிசை இருக்கைக்கும், பின் வரிசையில் கொடுக்கப்பட்டு இருக்கும் சொகுசு இருக்கைகளுக்கும் சம்பந்தமில்லாத வகையில் தனியாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும், பின் இருக்கை பயணிகள் சொகுசாக பயணிப்பதற்கும், பொழுதுபோக்கிற்காகவும் டிவி திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இருக்கையை சாய்த்து, நிமிர்த்திக் கொள்வதற்கும், பொழுதுபோக்கு சாதனங்கள், ஏசி மற்றும் விளக்குகளை கட்டுப்படுத்துவதற்கான தொடு உணர் சுவிட்சுகள் இருக்கைகளுக்கு மத்தியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அனைத்து சாதனங்களையும் எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

இரவு நேரங்களில் புத்தகங்களை படிப்பதற்கு ஏதுவாக ரீடிங் விளக்குகள், ஓட்டுனரிடம் பேசுவதற்காக மைக் செட் போன்றவையும் பின்புற கேபினில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இரவு நேரங்களில் மெல்லிய ஒளியை உமிழும் விளக்குகளும் உள்ளன.

வெளிப்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. வலிமையான தோற்றத்திற்கு கூடுதல் அலங்காரமும் தேவைப்படாது. பக்கவாட்டில் ஃபுட்ஸ்டெப் கூடுதலாக பொருத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 164 குதிரைசக்தி திறனையும், 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 180 குதிரைசக்தி திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான கட்டண விபரம், எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது போன்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கூடுதல் தகவல்களுக்கு டிசி நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
DC Designs Introduces Customise Package For New Toyota Fortuner.
Please Wait while comments are loading...

Latest Photos