ஜூன் முதல் டெல்லியில் அறிமுகமாகும் ஓட்டுநரில்லாத மெட்ரோ இரயில்கள்

இந்தியாவில் ஓட்டுநரின்றி தானாக இயங்கும் மெட்ரோ இரயில் சேவை, நாட்டின் தலைநகரான டெல்லியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

By Azhagar

இந்தியாவிலும் தானியங்கி வாகன பயன்பாட்டிற்கான கட்டமைப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக தனிநபர் பயன்பாடாக இல்லாமல், பொது போக்குவரத்து ஒன்றில் தன்னிலை இயக்கம் பெற்ற வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

நாட்டின் வரவேற்பு பெற்ற மெட்ரோ சேவைகளில் முன்னிலை வகிப்பது டெல்லி மெட்ரோ. இதில் விரைவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ இரயில்களை அறிமுகப்படுத்த டெல்லி மெட்ரோ இரயில்வே நிர்வாகம் முடிவுசெய்து அதற்கான பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறது.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

டெல்லி மெட்ரோவின் மூன்றாவது வழித்தடத்தில் (phase), நொய்டா முதல் கல்காஜி வரையிலான பாதையில் வரும் ஜூன் மாதத்தில் நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ இரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

தானாக இயங்கும் மெட்ரோ இரயில்களுக்கான பணிகள் ஏற்கனவே டெல்லி மெட்ரோ நிர்வாகத்தால் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் வரும் மே மாதத்தில் முடிக்கப்பட்டு, வரும் ஜூன் முதல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் இரயில்கள் டெல்லி மெட்ரோவின் மூன்றாவது வழித்தடத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

டெல்லி மெட்ரோவின் மூன்றாவது வழித்தடத்தில் உள்ள இரண்டு வழிப்பாதைகளில் மொத்தம் 96 கிலோ மீட்டருக்கு ஆட்டோமேடட் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் இதற்காக 516 புதிய கோச்சுகள் அதாவது 86 இரயில்களை வாங்க டெல்லி மெட்ரோ நிர்வாகம் கம்பெனிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

டெல்லியில், தற்போது நடைமுறையில் உள்ள மெட்ரோ இரயில்களை விட தானாக இயங்கக்கூடிய திறன் பெற்ற இரயில்கள் தனித்துவமான பல செயல்பாடுகளை கொண்டுயிருக்கும். இயக்கம், திறன் என பலவற்றிலும் வேறுபாடுகளை பெற்றிருக்கும்.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

மெட்ரோ இரயில்களில் தற்போது அதற்கான ஓட்டுநரை தவிர, மற்ற எல்லா செயல்பாடுகளும் தன்னிலை இயக்கமாகத்தான் உள்ளது. ஆனால் இனி டிரைவரே இருக்காமாட்டார் என்பது சற்று கடினம் என்பாதல், சோதனை ஓட்டத்தின் போது தானாக இயங்கும் திறன் கொண்ட இரயில்கள் கடுமையாக சோதனை செய்து பார்க்கப்படும்.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

மேலும் ஆட்டோமேடட் கொண்ட மெட்ரோ இரயில்களுக்கான கட்டமைப்புகளிலும் சோதனை நடத்தப்பட்டும். இதனுடன் கோச்சுகளில் பயணிகளுக்கான பாதுகாப்பு அமைப்புகளும் கவனிக்கப்படும்.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

தொடர்பு அடிப்படையிலான இரயில் கட்டுபாடுகள் மூலம் தான் மெட்ரோ இரயில்களுக்கான சிக்னல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனுடைய மேம்படுத்தப்பட்ட அமைப்பில் தான் தானாக இயங்கும் மெட்ரோ இரயில்களுக்கான சிக்னல்களின் செயல்பாடுகள் இருக்கும்.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

இந்த இரயில்களின் பிரேக், வேகம் மற்றும் உள்ளிணைப்பு (interconnection) ஆகியவை செயல்பாடுகளுக்கான கட்டுபாட்டு மையம் (OCC) தொடர்ந்து கவனிக்கும். மேலும் டிராக் அமைப்புகள் மற்றும் மின்சார அமைப்புகளும் தொடர்ந்து கண்கானிக்கப்படும்.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

ஓட்டுநரில்லாமல் இயங்கும் டெல்லி மெட்ரோவிற்கான மூன்றாவது வழித்தடத்தில் 9 உயரமான மெட்ரோ நிலையங்கள் (elevated stations) உள்ளன. இதில் தானாக இயங்கும் மெட்ரோவிற்கான கட்டமைப்புகள் தொடங்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் டிரைவில்லாத மெட்ரோ இரயில்...! விரைவில்

ஓட்டுநரில்லாமல் தானாக இயங்கக்கூடிய மெட்ரோ இரயில்கள் வரும் ஜூன் மாதம் பயன்பாடிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், சிக்னல் மற்றும் அதற்கான அமைப்புகள் பெரியளவில் மாற்றங்களை கொண்டுள்ளதால், இந்த மெட்ரோ இரயில்களை அதற்கான வழிப்பாதைகளில் குறைந்து ஆறு மாத காலமாவது சோதிக்க வேண்டும் என்பது டெல்லி மெட்ரோ நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Come June, Delhi metro will be able to travel run without drivers. Passengers travelling between Noida and Kalkaji are likely to be the first one to experience driverless metro train.
Story first published: Thursday, April 20, 2017, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X