தோனியைப் போலவே ஆடம்பர கார் வாங்கிய ‘ரீல்’தோனி!

Written By:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடித்து ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தோனியைப் போல சாயல் கொண்ட இவர், அவரைப்போலவே கார் ஆர்வம் கொண்டவராகவும் உள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியில் தயாராகி, இந்தியாவின் மாநில மொழிகளிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது ‘எம். எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்த ஒரே படத்தின் மூலம் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது மாறிவிட்டார்.

நமது முன்னாள் ‘கேப்டன்' தோனி ஒரு கார் பிரியர் என்பதும், அவரின் கேரஜில் எண்ணற்ற வெளிநாட்டு கார்கள், பைக்குகள் வரிசைகட்டி நிற்பது நாடறிந்த ஒரு விஷயமே. ஆனால் ரீல் தோனியான சுஷாந்த் சிங் ராத்புத்தும் ஒரு கார் பிரியர் என்பது ஆச்சரியம் அளிக்கத்தக்கதாக உள்ளது. தோனியைப் போலவே இவரும் வெளிநாட்டு கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய மசேரட்டி க்வாட்ரோபோர்டே காரை சமீபத்தில் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் புகைப்படம் எடுத்து அதனை பெருமையாக தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அவர்.

நீல வண்ண மசேரட்டி க்வாட்ரோபோர்டே காரை வாங்கியுள்ள சுஷாந்த் அது குறித்து தனது பேஸ்புக்கில், தான் சிறு வயது முதலே மினியேச்சர் மசேரட்டி கார்களுடன் விளையாடியதாகவும் தற்போது இந்த மிருகத்தனமான காரை சொந்தமாக்கியிருப்பதாகவும் பெருமைபட குறிப்பிட்டுள்ளார்.

மசேரட்டி க்வாட்ரோபோர்டே ஒரு இத்தாலிய ஸ்போர்ட்ஸ் காராகும். ஆடம்பர காரான இது, ஆற்றலிலும் வலிமையான கார் தான். இதன் உட்புறத்தில் இத்தாலிய லெதர் கொண்டு நேர்த்தியாகவும் ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மசெரெட்டி க்வாட்ரோபோர்டே கார் மூன்று இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 410 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3 லிட்டர் டிவின் டர்போ, 530 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் டிவின் டர்போ வி8 பெட்ரோல் இஞ்சின்கள் உள்ளது.

சுஷாந்த் சொந்தமாக்கியுள்ள நீல வண்ண மசேரட்டி கார் 3 லிட்டர் டர்போ டீசல் இஞ்சின் கொண்டதாகும். இது அதிகபட்சமாக 275 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

1.5 கோடி ரூபாய் விலை கொண்ட இந்த மசேரட்டி கார் அதிகபட்சமாக மணிக்கு 307 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. 0-100 கிமீட்டரை 4.7 வினாடிகளில் இந்த கார் எட்டிப்பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய முன்னாள் கேப்டன் தோனியை தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் நடிகர் சுஷாந்த் சிங் ராத்புத் ஒத்து இருக்கிறார். இவரின் வயது 31, பிஹாரைச் சேர்ந்த இவரை பாலிவுட்டில்பிரபலமாவதற்கு முன்னரே இயக்குனர் மணிரத்னம் தன் படத்தில் நடிக்க வைப்பதற்காக சென்னைக்கு அழைத்து வந்து ஆடிஷன் செய்துள்ளார். ஆனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about MSD: the untold story actor sushant singh rajput buys 1.5 cr maserati luxury car.
Please Wait while comments are loading...

Latest Photos