கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோவில் கலக்கலாக ஸ்டேடியத்துக்கு வந்த டோணி!

Written By:

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி கார், பைக் பிரியர் என்பது தெரிந்ததே. உலகின் விலை உயர்ந்த, தனித்துவமான கார், பைக்குகள் அவரது வீட்டு கராஜை அலங்கரித்து வருகின்றன.

குறிப்பாக, எஸ்யூவி கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். இதற்காக, ஹம்மர் எஸ்யூவி ஒன்றையும் அவர் இறக்குமதி செய்து வாங்கினார். இந்த நிலையில், ஹம்மர் உள்ளிட்ட பல கோடி மதிப்புடைய கார்கள் இருந்தாலும், தன்னிடம் இருக்கும் ஒரு எஸ்யூவியை அவர் மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகிறார்.

அதுதான் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் எப்படி சுனாமியாக மாறி எதிரிகளை மிரட்டுவாாரோ, அதேபோன்று மிக மிரட்டலான தோற்றம் கொண்டதாக இருக்கிறது இந்த ஸ்கார்ப்பியோ.

கருப்பு -சிவப்பு என இரட்டை வண்ணக் கலவையுடன் அசத்துகிறது. சமீபத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு டோணி வந்தார். அப்போது இந்த ஸ்கார்ப்பியோவை ஓட்டிக் கொண்டு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த ஸ்கார்ப்பியோவானது கூரை இல்லாமல் மிக வலுவான ரோல்கேஜ்களுடன் ஸ்டைலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கதவுகளும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண ஸ்கார்ப்பியோவில் 7 இருக்கைகள் இருக்கும் நிலையில், இதில் 4 கேப்டன் இருக்கைகளுடன் அட்டகாசமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அதிக இடவசதி கிடைத்துள்ளது.

பின்புறத்தில் டோணியின் இனிஷியல் பொறிக்கப்பட்ட பலகை ஒன்றும் மஹிந்திரா லோகோவுடன் பொருத்தப்பட்டு இருக்கிறது. அலாய் வீல்களும் மிரட்டலான தோற்றத்தை தருகிறது.

இது மஹிந்திரா நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவால் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்கார்ப்பியோ. எனவே, சட்ட ரீதியில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதால், டோணிக்கு பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.

இந்த ஸ்கார்ப்பியோவில் ஏராளமான மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும், எஞ்சினில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. இந்த காரில் 120 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதன்பிறகு ஹம்மர் உள்ளிட்ட பல கார்களை வாங்கி குவித்துவிட்டாலும், இந்த ஸ்கார்ப்பியோவையே அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகிறார். அவர் ஹம்மரை தவிர்த்ததுதான் இப்போது பேச்சாக இருக்கிறது.

 

டோணியின் கராஜில் இருக்கும் டாப் 10 கார்கள் மற்றும் பைக்குகள்- சிறப்புத் தொகுப்பு!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியிடம் ஏராளமான கார் மற்றும் பைக்குகள் உள்ளன. அதில், சிறந்த 10 மாடல்களை தேர்வு செய்து வழங்கியிருக்கிறோம்.

ஒர்க்ஷாப்பில் தூங்கிய ஹார்லி பைக்கை தட்டி எழுப்பி கூட்டி வந்த டோணி!

ஒர்க்ஷாப்பில் இருந்த தனது ஹார்லி டேவிட்சன் பைக்கை சரிசெய்து எடுத்து வந்த விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இது மீள்பதிவு செய்தி.

டோணியின் புதிய ஹெல்கேட் சூப்பர் பைக்-சிறப்பு பார்வை

உலகின் மிக விலை உயர்ந்த பைக் மாடலான ஹெல்கேட் சூப்பர் பைக் ஒன்று டோணியிடம் உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இந்த செய்தி விவரிக்கிறது.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Friday, December 23, 2016, 11:33 [IST]
English summary
Dhoni Skips Hummer And Takes The Customised Scorpio.
Please Wait while comments are loading...

Latest Photos