சர்வாதிகாரி மகனிடமிருந்து பிடுங்கிய சூப்பர் கார்கள் ரூ.24 கோடிக்கு ஏலம்!

மத்திய கினியா நாட்டின் சர்வாதிகாரியின் மகனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான கார்களை பிரான்ஸ் நாடு ஏலம் விட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மத்திய கினியா எண்ணெய் வளம் கொழிக்கும் ஆப்பிரிக்க நாடாக திகழ்கிறது. தனிநபர் வருமானத்தில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் அந்நாட்டு மக்கள் இன்னமும் வருமையின் பிடியில்தான் வாழ்கின்றனர்.

Supercars

இதற்கு அந்நாட்டை ஆண்டு வரும் சர்வாதிகாரி ஓபியாங் மற்றும் அவரது குடும்பத்தினரின் சர்வாதிகாரப் போக்கே காரணமாக கூறப்படுகிறது. நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை இந்த குடும்பத்தினரே எடுத்துக் கொண்டு ராஜபோக வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இந்த நிலையில், 'பிளேபாய்' என வர்ணிக்கப்படும், சர்வாதிகாரி ஓபியாங்கின் மகன் டியோடோரோவிடம் ஏராளமான சொகுசு மற்றும் சூப்பர் கார்கள் இருக்கின்றன. அவை அரசின் நிதியிலிருந்து சட்டவிரோதமாக வாங்கப்பட்டிருப்பதாக கூறி, மத்திய கினியாவை முன்பு காலனி நாடாக வைத்திருந்த பிரான்ஸ் அரசு பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டதில் 11 கார்களை பிரான்ஸ் சமீபத்தில் ஏலம் விட்டது. 2 புகாட்டி வேரோன், 2ஃபெராரி, ஒரு மஸராட்டி, போர்ஷே கரீரா, 2 பென்ட்லீ கார்கள், ஒரு ரோல்ஸ்ராய்ஸ், ஒரு மேபேக் மற்றும் அஸ்டன் மார்ட்டின் உள்ளிட்ட கார்கள் சமீபத்தில் ரூ.24 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.

இந்த கார்களை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது சட்டவிரோதமானது என சர்வாதிகாரியின் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
The exploits of the dictatorial ruler of the African nation of Equatorial Guinea are well known. The 71 year old Teodoro Obiang Nguema Mbasogo and his family is one of the richest in the world thanks to the rich oil deposits found in the country. The family is also allegedly involved in several cases of public fund theft.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X