பிஎம்டபிள்யூ காரை தவிர்த்துவிட்டு ஹூண்டாய் கார் வாங்கிய தீபா கர்மாகர்!

Written By:

கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தீபா கர்மாகருக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. ஐதராபாத் பாட்மின்டன் சங்கத் தலவைரும், தொழிலதிபருமான சாமுண்டேஸ்வரநாத் இந்த காரை பரிசளித்தார். மேலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கையால் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தீபா கர்மாகரின் சொந்த ஊரான அகர்தலா நகரில் பிஎம்டபிள்யூ காருக்கான சர்வீஸ் மையம் இல்லை. மேலும், ஓட்டுனர் கிடைப்பதும் கடினமான விஷயமாக இருந்தது. இதையடுத்து, அந்த காரை தன்னால் தொடர்ந்து வைத்துக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதாக தீபா கர்மாகர் தெரிவித்தார். இதையடுத்து, அந்த காரை எடுத்துக் கொண்டு அதற்கு ஈடான பணத்தை ரொக்கமாக வழங்க கேட்டுக் கொண்டார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க, அந்த காருக்கு ஈடான ரூ.25 லட்சம் பணத்தை சாமுண்டேஸ்வரநாத் வழங்கினார். அந்த பணத்தில் தற்போது புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் வாங்கியிருக்கிறார் தீபா கர்மாகர். அகர்தலாவில் ஹூண்டாய் சர்வீஸ் மையம் இருப்பதும், அந்த காருக்கு ஓட்டுனர் கிடைக்கும் சூழல் இருப்பதால் அந்த காரை தேர்வு செய்து வாங்கியிருக்கிறார்.

ஹூண்டாய் எலான்ட்ரா கார் மிகவும் ஸ்டைலான தோற்றமுடைய கார். இதுதான் தீபா கர்மாகரை கவர்ந்ததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல்.

க்ரோம் ஆக்சஸெரீகளுடன் கவர்ச்சிகரமான காராக வந்தது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கவர்ச்சிகரமான டெயில்லைட்டுகளுடன் வசீகரிக்கிறது.

உட்புறத்திலும் மிக தரமான பாகங்களுடனும், நேர்த்தியான அமைப்புடனும் கவரும் வகையில் இருக்கிறது. முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு உள்ளது.

மேப் மை இந்தியா வரைபட தகவல் மென்பொருளுடன் கூடிய நேவிகேஷன் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொாருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் கூடுதல் சவுகரியத்தை அளிக்கும்.

வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு கேபினில் குளிர்ச்சியை தக்க வைக்கும் ட்யூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி போன்ற வசதிகளும் உள்ளன.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான இரண்டு உயிர் காக்கும் காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுதவிர, பிரேக் பவரை சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

அதிக நிலைத்தன்மையுடன் கார் செல்வதற்கு உதவும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சரிவான சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

 

இந்த காரில் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. இது வெளியூர் பயணங்களின்போது தீபா கர்மாகருக்கு மிகுந்த சவுகரியத்தை அளிக்கும். இந்த கார் ரூ.12.99 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து இந்தியாவில் கிடைக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Dipa Karmakar Buys A New Hyundai Elantra.
Please Wait while comments are loading...

Latest Photos