திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் பயன்படுத்தும் கார்கள்!

திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் பயன்படுத்தும் கார்கள் மற்றும் அவரது வாகன ஆர்வம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும், அவர் பெயரில் கார் இல்லாவிட்டாலும் கூட, அவர் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துகிறார். அவரது வாகன ஆர்வத்தையும், அவர் பயன்படுத்தும் கார்கள் உள்ளிட்ட தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ரேஞ்ச்ரோவர்

ரேஞ்ச்ரோவர்

சொந்தமாக கார் இல்லையென்று வேட்பு மனுவில் தெரிவித்தபோதிலும், அவர் சென்னையில் இருக்கும்போது தினசரி உபயோகத்துக்கு, சொந்தமாக ரேஞ்ச்ரோவர் சொகுசு எஸ்யூவியை அதிகம் பயன்படுத்துகிறார்.

விலை

விலை

அவர் பயன்படுத்தும் ரேஞ்ச்ரோவர் அவரது பெயரில் இல்லை என தெரிகிறது. இதன் விலை ரூ.90 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா பிராடோ

டொயோட்டா பிராடோ

சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் டொயோட்டா பிராடோ எஸ்யூவியுடன் ஓர் புகைப்படத்தை வெளியிட்டார். மேலும், அந்த பிராடோவையும் அவர் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறார்.

பிராடோ மதிப்பு

பிராடோ மதிப்பு

டொயோட்டா பிராடோ எஸ்யூவியும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. சொகுசு அம்சங்கள் பலவும் இருப்பதோடு, கம்பீரத்திற்கு பெயர் போனது. முதல்வர் ஜெயலலிதாவிடமும் டொயோட்டா பிராடோ எஸ்யூவியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டெம்போ டிராவலருக்கு மாற்று

டெம்போ டிராவலருக்கு மாற்று

தேர்தல் பிரச்சாரங்களின்போது நீண்ட தூரம் பிராயணிக்கும் அரசியல் தலைவர்கள் பொதுவாக டெம்போ டிராவலர் வேனையே பயன்படுத்துவது வழக்கம். ஏன், கடந்த தேர்தல்களின்போது ஸ்டாலின்கூட டெம்போ டிராவலர் வேனையே பயன்படுத்தினார். ஆனால், இந்த முறை பென்ஸ் வேனில் பவனி வந்தார்.

நமக்கு நாமே பயணத்திற்கு...

நமக்கு நாமே பயணத்திற்கு...

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நமக்கு நாமே சுற்றுப் பயணத்திற்கு முக.ஸ்டாலின் பயன்படுத்தியது கஸ்டமைஸ் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரின்டர் வேன்தான். முதல்முறையாக மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரின்டர் வேனில் வலம் வந்து அனைவரையும் கவர்ந்தார்.

கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

நீண்ட தூர பயணங்களின்போது ஓய்வு எடுக்கும் விதத்தில், உட்புறத்தில் பல்வேறு சொகுசு வசதிகளுடன் இந்த வேன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருந்தது. சாதாரணமாக இந்த வேனில் 13 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் கிடைக்கிறது.

மைக் செட், மேடை

மைக் செட், மேடை

பொதுக்கூட்டங்களில் வேனிலிருந்தபடி பேசுவதற்கு ஏதுவாக திறந்து மூடும் கண்ணாடி கூரை மற்றும் மைக் செட் பொருத்தப்பட்டிருந்தது. அத்துடன், திமுகவின் சின்னமான உதயசூரியனுடன் வலம் வந்து பலரையும் கவர்ந்தது.

வாகன ஆர்வம்...

வாகன ஆர்வம்...

நமக்கு நாமே பயணத்தின்போது, பல நேரங்களில் பேண்ட், ஷர்ட்டில் வந்தார். இதுகுறித்து கேட்டபோது, பேண்ட், ஷர்ட்டில் இருந்தால் இளைஞர் போன்று உணர்வதாகவும், இது இளைஞர்களையும் வசீகரிக்கும் என்று தெரிவித்தார். அதுபோன்றே சுறுசுறுப்பாக செயல்பட்டதுடன், இளைஞர் போன்றே வாகனங்களை ஓட்டி கவர்ந்தார்.

சைக்கிளில்...

சைக்கிளில்...

சொந்த வாகனம் இல்லை என்று தனது வேட்புமனுவில் அவர் தெரிவித்திருந்தாலும், நமக்கு நாமே பயணத்தின்போது, அனைத்து ரக வாகனங்களையும் ஓட்டி பார்த்துவிட்டார். ஆம், மன்னார்குடி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நமக்கு நாமே பயணத்தின்போது முக.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்கூட்டர்...

ஸ்கூட்டர்...

சைக்கிள் மட்டுமின்றி, 2 கிமீ தூரத்திற்கு ஸ்கூட்டரையும் ஓட்டி பார்ப்போரை வசீகரித்தார்.

ஆட்டோ ரிக்ஷா

ஆட்டோ ரிக்ஷா

ஸ்டாலின் ஆட்டோரிக்ஷாவில் பக்கவாட்டில் கம்பியை பிடித்தபடி ஃபுட் போர்டு அடித்து பயணித்தது சமூக வலை தளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியது.

அதுமட்டுமா...

அதுமட்டுமா...

சிவகங்கையில், நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தின்போது, கரும்பு காட்டிற்கு சென்ற அவர், ஆர்வமாக அங்கிருந்த டிராக்டரை எடுத்து ஓட்டி அங்கிருந்த விவசாயிகளை அசத்தினார்.

பஸ்சில் பயணம்...

பஸ்சில் பயணம்...

வாகனங்களை ஓட்டியது மட்டுமின்றி, அரசு பஸ்சில் பயணம் செய்து பயணிகளிடமும் ஆதரவு திரட்டினார். இந்த நிலையில், முக.ஸ்டாலின் வாகனம் எதுவுமில்லை என்று கூறியநிலையில், அவரது மகனும், சினிமா நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆடம்பரமான ஹம்மர் எஸ்யூவியை பயன்படுத்துகிறார்.

படகையும் ஒரு கை பார்த்தார்

படகையும் ஒரு கை பார்த்தார்

சைக்கிள், ஸ்கூட்டர், டிராக்டர் தவிர்த்து, படகையும் ஓட்டி அசத்தினார். இதிலிருந்து அவரது வாகனங்களை ஓட்டும் ஆர்வத்தை புரிந்துகொள்ளலாம்.

மாட்டு வண்டி

மாட்டு வண்டி

பென்ஸ் ஸ்பிரிண்டர், டொயோட்டா பிராடோ, ரேஞ்ச்ரோவர் என சொகுசு வாகனங்களில் பவனி வரும் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தின்போது மாட்டு வண்டியில் பயணித்ததோடு, அதனை ஓட்டியும் ஆச்சரியப்படுத்தினார்.

ஹம்மர் பிரச்னை

ஹம்மர் பிரச்னை

பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வார் ஸ்டாலின். ஆனால், அவரது மகனும் சினிமா நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வாங்கிய ஹம்மர் எஸ்யூவி பிரச்னை அவருக்கு பெரும் தலைவலியை கொடுத்தது.

தலைவலி

தலைவலி

ஹைதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் வெளிநாடுகளிலிருந்து கார்களை செய்து தரும் புரோக்கராக செயல்பட்டார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், அலெக்ஸிடமிருந்துதான் உதயநிதி ஹம்மர் எஸ்யூவியை வாங்கியிருந்தார். இந்த ஊழலில் உதயநிதியின் ஹம்மர் எஸ்யூவிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆ்வு செய்வதற்காக, சில ஆண்டுகளுக்கு முன் முக.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒப்படைப்பு

ஒப்படைப்பு

உதயநிதி குற்றவாளியாக கருதப்படவில்லை. ஆனால், அவர் வாங்கிய காருக்கு அலெக்ஸ் வரி ஏய்ப்பு செய்தாரா என்பதை தெரிந்துகொள்ளவே இந்த சோதனை நடத்தப்பட்டது. விசாரணையின்போது சிபிஐ வசம் ஹம்மர் எஸ்யூவி ஒப்படைக்கப்பட்டது. ஆனால், விசாரணை முடிந்து அதற்கு மறுநாளே அந்த கார் உதயநிதியிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இதர கார்கள்

இதர கார்கள்

தந்தை கார் இல்லை என்று தெரிவித்தாலும், உதயநிதியிடம் ஹம்மர் தவிர பல கார்கள் உள்ளன. அதில், மஸராட்டி கிரான் டூரிஷ்மோ காரும் ஒன்று. ரூ.1.50 கோடி மதிப்புடைய இந்த காரில் 440 பிஎச்பி பவரை வழங்கும் 4.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

போர்ஷே கேயென்

போர்ஷே கேயென்

ஒரு கோடி மதிப்புடைய போர்ஷே கேயென் எஸ்யூவி மாடலும் உதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கிறார். இந்த எஸ்யூவியில் 500 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

வித்தியாசமான க்ராஸ்ஓவர் ஸ்டைல் மாடலான பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு கார் மாடலும் உதயநிதியிடம் உள்ளது. இந்த கார் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DMK Leader MK Stalin's Car Collection Details Revealed - Shocking!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X