துபாயில் ஆம்புலன்ஸ் சேவையில் ஃபோர்டு மஸ்டாங் கார்கள்!

By Saravana

செல்வ வளம் கொழிக்கும் துபாய் அரசு உலகின் அத்துனை விலையுயர்ந்த கார்களையும் போலீஸ் துறைக்காக வாங்கி சேர்த்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அந்த கார்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு விரைவான மருத்துவ உதவி கிடைக்கும் வகையில், 2 ஃபோர்டு மஸ்டாங் கார்களை வாங்கியுள்ளது. அவை ஆம்புலன்ஸ் வாகனங்களாக பயன்படுத்தப்பட உள்ளன.


முதலுதவிக்காக..

முதலுதவிக்காக..

சாலை விபத்துக்களில் சிக்குவோருக்கு விரைவாக முதலுதவி கிடைக்கும் வகையில் இந்த ஃபோர்டு மஸ்டாங் கார்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களாக பயன்படுத்தப்படும்.

 பிரத்யேக வசதிகள்

பிரத்யேக வசதிகள்

இந்த ஃபோர்டு மஸ்டாங் கார்களில் முதலுதவி சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருக்கும்.

மருத்துவ உதவி

மருத்துவ உதவி

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு இந்த ஃபோர்டு மஸ்டாங் கார்கள் பயன்படுத்தப்படாது. பெரிய ஆம்புலன்ஸ்கள் வரும் வரை முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

4 நிமிடங்களில் உதவி

4 நிமிடங்களில் உதவி

2020ம் ஆண்டில் 4 நிமிடங்களில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதை நோக்காக கொண்டு இந்த முதலுதவி ஆம்புலன்ஸ் சேவையை துபாய் அரசு துவங்கியுள்ளது.

 விரிவாக்கத் திட்டம்

விரிவாக்கத் திட்டம்

இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மேலும் சில கார்களை வாங்கி முதலுதவி தரும் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்த துபாய் அரசு திட்டமிட்டுள்ளது

 மற்றொரு திட்டம்

மற்றொரு திட்டம்

தற்போது அங்கு செயல்பாட்டில் இருந்து வரும் எமிரேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை மூலம் இருதய நோயாளிகளுக்கு அவசர அழைப்பு கிடைத்த 8 நிமிடத்தில் முதலுதவி கிடைக்கும் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

Story first published: Monday, June 30, 2014, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X