சொகுசு மோட்டார்சைக்கிள் வாங்கிய துபாய் போலீஸ்!

By Saravana

லம்போர்கினி, அஸ்டன் மார்ட்டின், பென்ட்லீ, ஃபெராரி என உலகின் முன்னணி பிராண்டுகளின் சூப்பர் கார்களை வாங்கி ரோந்து பணியில் பயன்படுத்தி வரும் துபாய் போலீசார் தற்போது சொகுசு மோட்டார்சைக்கிளையும் ரோந்து பணிக்காக வாங்கியுள்ளனர்.

சுற்றுலா மற்றும் வர்த்தக பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த புதிய மோட்டார்சைக்கிளை அவர்கள் வாங்கி மீண்டும் ஒரு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளனர். கேன் ஆம் ஸ்பைடர் என்ற அந்த மோட்டார்சைக்கிளை குறுகிய சாலைகள் கொண்ட பகுதிகளிலும், உள் அரங்க பாதுகாப்புப் பணிகளிலும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மூன்று சக்கர சொகுசு மோட்டார்சைக்கிளின் அருமை, பெருமைகளை ஸ்லைடரில் காணலாம்.


எல்லாமே சூப்பர்தான்..

எல்லாமே சூப்பர்தான்..

கார்கள் மட்டும் என்றில்லை, உலகின் அதிவேக படகையும் ரோந்து பணிக்காக துபாய் போலீசார் சமீபத்தில் வாங்கியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழலை கருதி, எலக்ட்ரிக் பைக்கையும் சமீபத்தில் தங்களது ரோந்துப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

மோட்டார்சைக்கிள் ரகம்

மோட்டார்சைக்கிள் ரகம்

இது டூரிங் ரகத்திலான மூன்று சக்கர மோட்டார்சைக்கிள். விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு சிறந்தது. டூரிங், செமி டூரிங் மற்றும் ஸ்போர்ட் என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.

விலை

விலை

14,899 டாலர் முதல் 22,999 டாலர் விலை வரையில் விற்பனை செய்யப்படுகிறது. துபாய் போலீசார் வாங்கியிருக்கும் மாடல் டூரிங் ரகத்திலான ஸ்பைடர் ஆர்டி மாடல். இது 22,999 டாலர் விலை மதிப்பு கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட சக்திவாய்ந்த ரோட்டக்ஸ் 1330 ஏஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிக பராமரிப்பு தேவையற்ற எஞ்சின். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பயண தூரம்

பயண தூரம்

துபாய் போலீசுக்கு மைலேஜ் பிரச்னை இல்லை. இருந்தாலும், நிறுவனத்தின் ஒருமுறை பெட்ரோல் நிரப்பினால் 406 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். மணிக்கு 100கிமீ வேகம் வரை செல்லும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை கொண்டது. திருடுபோவதை தடுக்கும் வசதியும் உள்ளது.

Most Read Articles
Story first published: Thursday, June 5, 2014, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X