அடுத்து பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய துபாய் போலீஸ்!

அபுதாபி போலீசார் ரோல்ஸ்ராய்ஸ் காரை சேர்த்திருக்கும் நிலையில், துபாய் போலீசார் மீண்டும் ஒரு உயர்வகை காரை தங்களது கராஜில் இணைத்துள்ளனர்.

ஆம், சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்தான் அது. அதிக மைலேஜையும், பெர்ஃபார்மென்ஸையும் ஒருங்கே தரும் இந்த மாடல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. துபாய் போலீசில் இணைந்திருக்கும் இந்த புதிய கார் குறித்த சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

போலீஸ் கார் வண்ணம்

போலீஸ் கார் வண்ணம்

வழக்கம்போல் பச்சை மற்றும் வெள்ளை வண்ணக் கலவை கொண்ட பெயின்ட் மற்றும் போலீஸ் கார் என்பதை காட்டுவதர்கான டீகெல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பயன்பாடு

பயன்பாடு

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்த காரை நிறுத்தி வைக்க துபாய் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும்.

பவர்

பவர்

பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

பெட்ரோல் மற்றும் பேட்டரி சார்ஜ் மூலம் 500 கிமீ வரை இந்த ஸ்போர்ட்ஸ் கார் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Most Read Articles
English summary
The Dubai police force have fast supercars like Ferrari's, exclusive and limited edition cars like the Aston Martin One-77, superfast road legal car like the Bugatti Veyron, and the latest addition-the BMW i8.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X