2 சொடுக்குகளுக்குள் 0 -100 கிமீ வேகத்தை தொட்ட எலக்ட்ரிக் கார்!

By Saravana

உலகின் அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட வாகனம் என்ற பெருமையை எலக்ட்ரிக் கார் ஒன்று பெற்று வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வெறும் 1.7 வினாடிகளில் 0 - 100 கிமீ வேகத்தை தொட்டு அந்த கார் அனைத்து ரக வாகனங்களையும் விஞ்சியுள்ளது. ஃபார்முலா - 1 கார்களைவிட அதிவேகத்தில் இந்த இலக்கை அடைந்த அந்த எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

டிசைன் டீம்

டிசைன் டீம்

ஜெர்மனியை சேர்ந்த ஸ்டட்கர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த எலக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளனர். க்ரீன்டீம் என்ற பெயரில் இந்த குழுவினர் செயல்பட்டனர்.

 கார் ரகம்

கார் ரகம்

கோ கார்ட் ரக கார் மாடலாக இதனை வடிவமைத்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த காரை E0711-5 என்ற பெயரில் அழைக்கின்றனர்.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

இந்த காரில் 6.62 KWh திறன் கொண்ட 4 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆரம்ப நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 25 மீட்டர் தொலைவுக்குள் தொட்டு சாதனை படைத்திருக்கிறது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

டிசைன் குழுவில் இடம்பெற்றிருந்த பிரிஸ்கா ஷிமிட் என்ற மாணவர்தான் இந்த காரை அதிவேகத்தில் செலுத்தி சோதனை செய்தார். வடமேற்கு ஜெர்மனியிலுள்ள ஜாடே வெசர் என்ற இடத்திலுள்ள விமான நிலை ஓடுபாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கின்னஸ் அமைப்பு பரிசீலனை

கின்னஸ் அமைப்பு பரிசீலனை

இந்த சாதனை குறித்து கின்னஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது. கின்னஸ் அமைப்பு அங்கீகரிக்கும்போது, உலகின் அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட கார் என்ற பெருமையை அதிகாரப்பூர்வமாக பெறும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Their official time of 1.779 seconds is faster than a Formula One race car.
Story first published: Tuesday, July 28, 2015, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X