புல்லட் ரயிலுக்கு மாற்றான புதிய போக்குவரத்து சாதனம்!

அடுத்த தலைமுறைக்கான அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் வெளியிட்டிருக்கிறார். பேபால் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர் தெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கனவு திட்டத்தை அவர் வெளியிட்டார். தற்போது அந்த புதிய போக்குவரத்து திட்டம் பற்றிய பல விஷயங்களை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 கனவுத் திட்டம்

கனவுத் திட்டம்

சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையிலான மிகவும் போக்குவரத்து நிறைந்த வழித்தடத்தில் ஹைப்பர்லூப் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார்.

செலவு குறைவு

செலவு குறைவு

இதே வழித்தடத்தில் புல்லட் ரயில் கட்டமைப்பு மற்றும் செயல்படுத்துவதற்கு 68 மில்லியன் டாலர் தேவைப்பட்டால், இந்த திட்டத்தை செயல்படுத்த வெறும் 6 மில்லியன் டாலர் இருந்தால் போதும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பன் மடங்கு செலவு குறையும்.

டிவிட்டரில் வெளியீடு

டிவிட்டரில் வெளியீடு

ஹைப்பர்லூப் ஆல்ஃபா ரயிலின் டிசைனை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் மஸ்க். குறைந்த காற்றுழத்தம் உள்ள குழாய் போன்ற அமைப்புக்குள் கேப்சூல் எனப்படும் பஸ் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்படும். அவற்றின் கீழ்ப்பாகம் குழாய்க்குள் மிதந்து செல்லும் குஷன் அமைப்பை கொண்டிருக்கும். இந்த கேப்சூல்கள் காந்த சக்தி மூலம் ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகத்தில் உந்தித் தள்ளப்படும் என்று தனது கனவு திட்டத்தை விளக்கியுள்ளார் மஸ்க்.

 பயண நேரம்

பயண நேரம்

சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையிலான 613.9 கிமீ தூரத்தை விமானம் வழியாக செல்வதற்கு 1 மணி 15 நிமிடங்களும், சாலை மார்க்கமாக செல்வதற்கு 5 மணி 30 நிமிடங்களும், அதிவேக ரயில் மூலம் செல்வதற்கு 2 மணி 40 நிமிடங்களும் பிடிக்கிறது. ஆனால், ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் மூலம் அரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பிற போக்குவரத்து சாதனங்களையும் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானதாகவும், அதிவேகம் கொண்டதாகவும் ஹைப்பர்லூப் இருக்கும். முதலீடும் மிக குறைவு என்பதுடன் நிலநடுக்கம் போன்றவற்றால் கூட பாதிப்பு ஏற்படாத தூண்கள் மீது இந்த போக்குவரத்து செயல்படும்.

 பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

ரோப் கார் போன்று ஒன்றன் பின் ஒன்றாக இந்த கேப்சூல்கள் செல்லும். பஸ் போன்ற ஒரு கேப்சூலில் 28 பேர் பயணம் செய்ய முடியும். ஒரு கேப்சூல் 1,126 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

 வசதி

வசதி

சான்பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையில் பஸ் போன்ற 70 கேப்சூல்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும். ஒவ்வொன்றும் 30 வினாடிகள் மற்றும் 8 கிமீ இடைவெளியில் செலுத்த முடியும். இந்த ஹைப்பர்லூப் கேப்சூல் சூரிய மின்சக்தியில் இயங்கும் என்பதும் மற்றொரு விசேஷம்.

சிறந்த திட்டம்

சிறந்த திட்டம்

ஓர் ஆண்டுக்கு 7.4 மில்லியன் மக்கள் இந்த ஹைப்பர்லூப் மூலம் பயண செய்ய முடியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முழுமையடைவதற்கு 7 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

திட்ட உதவி

திட்ட உதவி

இந்த திட்டத்தை செம்மைப்படுத்தவும், நனவாக்கவும் பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை வரவேற்பதாக மஸ்க் கூறியிருக்கிறார்

Most Read Articles
English summary
A quick introduction about Elon Musk to those who might not know him. Musk is a American billionaire and a seasoned entrepreneur who is well known as the co-founder of PayPal, the man behind SpaceX, the space transport startup and Tesla, the very successful electric car manufacturing company.
Story first published: Tuesday, August 13, 2013, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X