பழைய ஜம்போ விமானத்தை வாங்கி சொகுசு விடுதியாக மாற்றிய கெட்டிக்காரர்!!

By Saravana

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த விமான நிறுவனத்திடமிருந்து போயிங் 747 விமானத்தை வாங்கி விடுதியாக மாற்றி வாடகைக்கு விடுகிறார் ஸ்வீடனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.

கடந்த 2006ம் ஆண்டில் அந்த விமானத்தை வாங்கி உள்ளே இருந்த இருக்கைகளையெல்லாம் கழற்றிவிட்டு 27 அறைகள் கொண்ட விடுதியாக அவர் மாற்றினார். தற்போது ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு வாடகைக்கு விடப்படுகிறது.


சுவாரஸ்யத் தகவல்கள்

சுவாரஸ்யத் தகவல்கள்

அடுத்தடுத்த விமான விடுதியின் சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.

பழைய விமானம்

பழைய விமானம்

2002ல் நிதிநெருக்கடியில் சிக்கிய ஸ்வீடனை சேர்ந்த ட்ரான்ஸ்ஜெட் நிறுவனத்திடமிருந்து இந்த போயிங் 747-200 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் வாங்கப்பட்டது.

உரிமையாளர்

உரிமையாளர்

ஸ்வீடனை சேர்ந்த ஆஸ்கர் திவ்ஸ் என்பவர்தான் இந்த விமானத்தை வாங்கி விடுதியாக மாற்றியுள்ளார்.

450 சீட்டர் விமானம்

450 சீட்டர் விமானம்

போயிங் 747 விமானமான அதில் 450 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டது. தற்போது 27 அறைகள் கொண்ட தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

சூட் அறைகள் கொண்ட இந்த விமானத்தில் உள்ள அறைகளில் தங்குபவர்களுக்கு வைஃபை வசதியுடன், டிவி உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு.

காக்பிட்

காக்பிட்

காக்பிட்டும் சொகுசு அறையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்தபடியே ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தின் அழகையும் ரசிக்கலாம். பிற அறைகளை விட இதற்கான கட்டணம் அதிகம்.

கூட்ட அரங்கம்

கூட்ட அரங்கம்

24 மணிநேரமும் இயங்கும் விமான விடுதியில் கூட்டங்களை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளன. விமானத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணம்

கட்டணம்

நாள் ஒன்றுக்கு 50 யூரோ கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காக்பிட்டில் தங்குவதற்கு 170 யூரோ வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வசதிகள் கொண்ட ஜம்போ விமான விடுதியை விமான ஆர்வலர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கி செல்கின்றனர்.

ஆர்வம்

ஆர்வம்

விமானக் கட்டணத்தை விட இந்த விமான விடுதியில் தங்கும் அறைகளின் கட்டணம் குறைவாக இருப்பதால் ஏராளமானோர் தங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக உரிமையாளர் திவ்ஸ் தெரிவிக்கிறார்.

Most Read Articles
English summary
Entrepreneur buys Boeing 747 Jumbo from bankrupt airline and turns it into a 27-room hostel.
Story first published: Thursday, August 28, 2014, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X