மாருதி புண்ணியத்தில் வெளிவந்த பாலிவுட் படம்!

பிராண்டு புரொமோஷனுக்காக விளம்பரங்களுக்கு கோடியாக கோடியாக செலவழிக்க கார் நிறுவனங்கள் தயங்குவதில்லை. ஏனெனில், கார் மார்க்கெட்டில் சர்வதேச நிறுவனங்களின் வருகையால் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளிக்க விளம்பரங்களுக்கு கார் நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால், நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி கார் நிறுவனம் இதற்கும் ஒரு படி மேலே போய்விட்டது.

ஆம், பிராண்டு புரொமோஷனுக்காக ஒரு படத்தை தயாரிக்க பல்க் தொகையை மாருதி வழங்கியிருக்கிறது. சமீபத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸின் அங்கமான ஒய் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "மேரே டாட் கி மாருதி" ஹிந்தி படத்தில் காருக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. எனவே, படத்தில் காரை பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தருமாறு முன்னணி கார் நிறுவனங்களை ஒய் பிலிம்ஸ் அணுகியிருக்கிறது.

இதற்காக நடத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில், அதிகபட்ச தொகை தருவதாக மாருதி தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேரே டாட் கி காடி என்ற பெயரில் எடுக்கப்பட்டு வந்த படத்தின் தலைப்பு மேரே டாட் கி மாருதி என்று மாற்றப்பட்டது. சுவாரஸ்யமான கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

கில்லாடி தயாரிப்பாளர்

கில்லாடி தயாரிப்பாளர்

படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.10 கோடிதான். ஆனால், மாருதியும், சோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் சேர்ந்து ரூ.8 கோடியை வழங்கியிருக்கின்றன.

ஓசி விளம்பரம்

ஓசி விளம்பரம்

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மற்றும் எஃப்எம் ரேடியோ, டிவி விளம்பரம் என இந்த படத்திற்கு மாருதி விளம்பரமும் செய்து கொடுத்துள்ளது. இதற்கு ரூ.2 கோடி வரை மாருதி செலவிட்டுள்ளதாம்.

 மாருதி கார்கள்

மாருதி கார்கள்

மேலும், படத்தில் மாருதி 800, ஸ்விப்ட் மற்றும் எர்டிகா கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுவும், படத்தில் மொத்தம் 2 மணிநேரம் இந்த கார்கள் முக்கிய பாத்திரமாக கருதும் அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எர்டிகா எம்பிவி காருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

படத்தின் கலெக்ஷன்

படத்தின் கலெக்ஷன்

கடந்த 15ந் தேதி இந்த படம் வெளியானது. முதல் வாரத்தில் ரூ.4.5 கோடியையும், மொத்தமாக இதுவரை ரூ.8.12 கோடி வரை கலெக்ஷன் ஆகியுள்ளதாம்.

மகிழ்ச்சியில் மாருதி தரப்பு

மகிழ்ச்சியில் மாருதி தரப்பு

படத்தில் மாருதியின் பிராண்டை உயர்த்தும் விதத்தில் பல உபாயங்கள் கையாளப்பட்டுள்ளதால் மாருதி ஏக குஷியில் இருக்கிறதாம்.

தயாரிப்பளரும்தான்...

தயாரிப்பளரும்தான்...

அச்சு இல்லாமல் தேர் ஓட்டிய கதையாக சொற்ப முதலீட்டுன் படத்தை சக்சஸ் செய்ததில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சந்தோஷத்தில் தயாரிப்பாளர் தரப்பும் குஷியில் இருக்கிறதாம். மேலும், இதுபோன்று, விளம்பர ஒப்பந்தத்தின் மூலம் எடுக்கப்பட்ட முதல் படமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

ஒன்லைன் கதை

ஒன்லைன் கதை

கல்லூரியில் படிக்கும் அழகான பெண்ணை கவர்வதற்காக தனது தந்தையின் காரை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று தொலைத்துவிடும் ஹீரோ சுற்றிச் சுழல்கிறது கதை. தந்தையை சமாளிக்க ஹீரோ செய்யும் சேஷ்டைகளை நகைச்சுவையும் சுவாரஸ்யமும் கலந்ததாக திரைக்கதையை அமைத்து சபாஷ் வாங்கியிருக்கிறார்கள்.

Most Read Articles
English summary
Bollywood seems to be busy in making films related to cars. Now Yash Raj Films youth films studio 'Y-Films' has began the new film titled Mere Dad Ki Maruti. Maruti Suzuki India's latest MPV Ertiga will play a key in this movie.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X