விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

Written by: Azhagar

பெண்களுக்கு பிடித்தமான நிறமாக கருதப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில், விஜய் மல்லையாவின் 2017 VJM10 ஃபார்முலா ஒன் கார் வெளியிடப்பட்டதுதான் இப்போது, இந்த காரை இணையதளங்களில் காய்ச்சி எடுப்பதற்கு காரணம்.

இப்போது சமூக வலைதளங்களில், 2017 VJM10 ரேஸ் கார் குறித்து செய்திதான் ட்ரெண்டாகி உள்ளது. மேலும் காரை குறித்த மாற்று கருத்துகளை ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் தொடர்ந்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்

ஃபோர்ஸ் நிறுவனம் முன்னதாக ஃபார்மூலா ஒன் அணிக்கான காராக க்ரே மற்றும் கருப்பு நிறத்தில் தயாரான ஒரு ரேஸ் காரை சிறிது நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியிருந்தது.

ஆனால் தற்போது ஆஸ்திரிய நாட்டுடன் ஏற்பட்ட ஸ்பான்சர்ஷிப் காரணமாக, காரின் நிறத்தை இளச் சிவப்பு நிறத்தில் மாற்றியுள்ளதாக ஃபோர்ஸ் ஃபாரமூலா ஒன் அணிக்கு தலைவராகவுள்ள விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

2017 VJM10 ரேஸ் காருக்கு எதிர்மறையான கருத்துகளை ட்வீட்டி வரும் ரசிகர்கள், ஃபோர்ஸ் அணியின் விளக்கத்தை ஏற்பதாக இல்லை.

இளஞ்சிவப்பு நிறம் இடம்பெற்றிருக்கும் காட்சிப் பதிவுகளை கொண்டு நகைச்சுவையான ட்ரோல்ஸை உருவாக்கி 2017 VJM10 காருக்கான தங்களது கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

இணையதளங்களை கலக்கி வரும் இந்த ட்ரோல்ஸில் முதன்மையாக இடம்பெற்றிருப்பது, பிங்க் பேந்தர் என்ற சொல்லப்படும் பிரபல கார்டூன் கதாபாத்திரம்.

இந்த கார்டூன் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு, 2017 VJM10 ரேஸ் கார் பிங்க் பேந்தர் போன்று சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படும் என்ற ரீதியில் பதிவுகள் செய்யப்படுகின்றன.

மேலும் புதன்கிழமையான இன்று VJM10 கார் இளச் சிவப்பு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இனிமேல் பிங்க் என்ற நிறம் பிரட்டிபிங் என்று இன்று பதவி உயர்வு பெறுவதாக ட்வீட்டுகள் இணையதளங்களை கலக்கி வருகின்றன.

 

VJM10 ரேஸ் காருக்கு தற்போது எழுந்து வரும் கருத்துகளால், இனி நிச்சயம் ரசிகர்களாகிய நாங்களும், பந்தயங்களில் பங்கெடுக்கும் ஃபோர்ஸ் நிறுவனமாகிய நீங்களும் இனி பந்தயக் களத்தில் சந்திக்கமாட்டோம் என்ற எல்லை வரை VJM10 ரேஸ் காரைப்பற்றிய ட்வீட்டுகள் பரப்பரப்பகின்றன.

VJM10 ரேஸ் காரை குறித்து இதுவரை பதிவுசெய்யப்பட்ட கருத்துகளிலேயே முதன்மையாக எல்லோராலும் பகிரப்படுவது பிரபல ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கோ ஹல்கன்பெர்க்கின் ட்விட்டர் பதிவு தான்.

நிக்கோ ஹல்கன்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் "ஏன் நான் ஃபோர்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறினேன் என்று தற்போது புரிகிறதா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்த விஜய் மல்லையா தனது பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ள 2017 VJM10 ரேஸ் காருக்கான கருத்துகள் ஃபார்முலா ஒன் உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த கருத்துப் பதிவுகள் அனைத்தும் 2017 VJM10 காருக்கான புதிய விளம்பரமாக இருக்கும் என ஃபோர்ஸ் இந்தியா நிறுவனம் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகயிருக்கும் ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட் 750 மோட்டார் சைக்கிளின் படத்தொகுப்புகளை கீழே உள்ள கேலரியில் பாருங்கள்

English summary
As Force India unveiled a new pink livery, Formula 1 drivers, teams and fans have embraced it all with a sense of humour, even new signing Esteban Ocon.
Please Wait while comments are loading...

Latest Photos