ஜூபிட்டர் ஸ்கூட்டரை திரும்பப்பெற அகமதாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Written By:

வாங்கிய பொருட்கள் தரமற்று இருந்தால், அதற்காக சட்டரீதியான அனுகுமுறைகளை பற்றி தெரியாமல் இருந்தது எல்லாம் தற்போது மலையேறி விட்டது. அதற்கான எடுத்துக்காட்டான ஒரு சம்பவம் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது.

ஊடகங்களில் தெரிவித்தது போன்ற மைலேஜ் கிடைக்கவில்லை என்பதால் டி.வி.எஸ் ஜுப்பிட்டர் ஸ்கூட்டரை சரிசெய்து கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என அகமதாபாத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

குன்வென்ட் மெகத்தா என்பவர் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராஜ்காட் பகுதி டீலரிடம் ரூ.52,150 விலையில் ஜுபிட்டர் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அப்பொது அவரிடம் ஜுபிட்டர் ஸ்கூட்டர் விற்கப்பட்டுள்ளது.

குன்வென்ட் மெகத்தா ஸ்கூட்டரை பயன்படுத்த தொடங்கிய பின்னர், விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் கிடைக்க பெறவில்லை. இதற்காக அவர் சர்வீஸ் மையங்களில் சோதனை செய்தும் பார்த்தார், தொடர்ந்து அவர் எதிர்பார்த்த மைலேஜ் வராத காரணத்தால் மெகத்தா ராஜ்காட் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.

இவரது வழக்கை ஏற்று விசாரித்த ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் கிடைக்கபெறும் வகையில் ஸ்கூட்டரை பழுது பார்த்து தரவேண்டும் அல்லது ஜுபிட்டர் ஸ்கூட்டரின் விலையான ரூ. 52,150 தொகையுடன் சேர்த்து 9 சதவீத வட்டியை குன்வென்ட் மெகத்தாவிற்கு கூடுதலாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர் குன்வென்ட் மெகத்தா தொடர்ந்து வழக்கிற்கு டி.வி.எஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில், மெக்தா வாங்கிய ஜுபிட்டர் ஸ்கூட்டரில் மே 2015ம் ஆண்டு மைலேஜ் லிட்டருக்கு 43 கி.மீ வந்ததாகவும், பிறகு செப்டம்பர் 2015ல் மைலேஜ் லிட்டருக்கு 55 கி.மீ கிடைத்ததகவும், 2017 மார்ச்சில் ஜுபிட்டர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 65.51 கிமீ மைலேஜ் வழங்கியதாகவும் டி.வி.எஸ் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுயிருந்தது.

இதனை திட்டவட்டமாக மறுத்த வாடிக்கையாளர் மெகத்தா , அவர் வாங்கிய டி.வி.எஸ் ஜுபிட்டர் ஸ்கூட்டரின் மைலேஜ் சாரசரியாக 45 கிமீ மட்டுமே வந்ததாக நீதிமன்றத்தில் பதில் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் நாடு முழுவதும் வழங்கப்பட்ட 6 தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து இந்த வழக்கில் ராஜ்காட் நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

அதாவது, ஜுபிட்டர் ஸ்கூட்டருக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மைலேஜ் பெற்றுத்தரும் வகையில் வாகனத்தை பழுது பார்த்து தரவேண்டும், அல்லது வாடிக்கையாளர் வாங்கிய விலையை திருப்பி தர வேண்டும் என அதிரடி தீர்ப்பை ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் வழங்கியுள்ளது.

via ET AUTO

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Friday, April 14, 2017, 14:01 [IST]
English summary
Due to the false advertising, Ahmedabad consumer court has directed TVS to buy it back. Click it for details...
Please Wait while comments are loading...

Latest Photos