ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் - 8... யுத்தத்துக்கு வகை வகையாக தயாராகும் வாகனங்கள்...!!

By Meena

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் திரைப்படம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிகாவில் தயாரிக்கப்பட்ட அந்த வரிசைப் படங்கள், நாடு கடந்து கண்டங்கள் கடந்து சக்கைப்போடு போட்டன.

அதிரடி ஆக்சன், கார் சேஸிங் காட்சிகள், பிரம்மாண்ட கிராபிக்ஸ், விறு விறு ஸ்கிரீன் பிளே, இவைதான் ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஹிட் அடிக்க முழு முதற் காரணங்கள். மொத்தம் 7 பார்ட்கள் இதுவரை வெளியாகிவிட்டன. அவற்றில் பெரும்பாலான படங்கள் திரையிட்ட அனைத்து நாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது.

கார் சேஸிங்

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு இருப்பதால், படக்குழுவினரும் சளைக்காமல் அடுத்தடுத்த பார்ட்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸின்ப 8-ஆவது எடிசனாக ஃபாஸ்ட் 8 என்ற படம் வெளியாகவுள்ளது.

படு பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் 8-இன் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி தெறி ஹிட்டானது. படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்கு நடுவே, படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வடிவ மாற்றம் அதாவது மாடிஃபை செய்யப்பட்ட கார்கள் பற்றிய படங்கள் வைரலாகி உள்ளது. அதைப் பற்றிய ஒரு சிறு அலசல்....

லம்போ கார்

முதலில் செம ஸ்டைலான ஆரஞ்ச் நிற லம்போகினி மாடல் கார் ஃபாஸ்ட்-8 படத்தில் வருகிறது. அட்ராக்ஷன், ரிச் லுக் என பாத்தாலே செம க்ளாஸான வண்டியாக அது தெரிகிறது.

படத்தில் தெறிக்கவுள்ள ஸ்டண்ட் காட்சிகளில் இந்த லம்போகினி ரவுண்ட் கட்டி அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த காரை படத்தில் ரோமன் பியர்ஸ் (டைரிஸ் கிப்ஸன்) பயன்படுத்தவுள்ளார்.

பீரங்கி வடிவ வாகனம்

அடுத்ததாக ஒரு வண்டி, அதை கார் என்றோ வேன் என்றோ கருத முடியாது. பக்கா ஸ்டன்ட் ஆக்சனுக்கான டாங்கி அது. தேஜ் பார்க்கர் (கிரிஸ் லுடாக்ரிஸ் பிரிட்ஜஸ்) பயன்படுத்தப் போகிற போர் டாங்கி. படத்தில் உள்ள அனல் தெறிக்கும் ஆக்சன் பிளாக்கில் இந்த வண்டியில் பங்கும் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.

ஐஸ் கார்

படத்தின் முக்கிய கதாபாத்திரமான லுக் ஹோப்ஸ் பயன்படுத்தும் ஐஸ் ரேம் வாகனமும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பனிச் சரிவு, மலைப் பிரதேசங்களில் பயணிக்கும் வகையிலான வாகனமாக அது உள்ளது. எனவே, பனி மலையில் ஒரு சேஸிங் சீனை எதிர்பார்க்கலாம்.

டாட்ஜ் கார்

அடுத்து முக்கியமாக நம்ம ஹீரோ வேன் டீசல் பயன்படுத்தக் கூடிய வாகனம். டாட்ஜ் ஐஸ் சார்ஜர் கார், அவரைப் போலவே ஸ்டைலான லுக்கைத் தருகிறது. ஹீரோயின் லெட்டி பயன்படுத்தும் ரேலி ஃபைட்டர் வாகனம், அவரைப் போலவே பார்க்க செம செக்ஸி.

இந்த கார்கள் அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Fast & Furious 8 Vehicles Are Battle Ready - Take A Look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X