உலகின் அதிவேக வாகனங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு!

நீர், நிலம், காற்று என அனைத்து மார்க்கமாகவும் உலகின் அதிவேக வாகனங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அது குறித்த விரிவாக காணலாம்.

By Arun

நீர், நிலம், காற்று மற்றும் ஆகாய மார்க்கங்களில் உலகின் தலைசிறந்த அதிவேக வாகனங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

உலகின் அதிவேக வாகனங்களின் பட்டியல், தகவல்கள்..!

இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மனிதன் இவ்வுலகில் வேகம், வேகம் என வேகத்தை நோக்கியே செல்கிறான். பைக், கார் மட்டுமல்லாது விமானம், கப்பல், என அனைத்திலும் அதிவேகமாக செல்லும் வகையில் புதிதுபுதிதாக வாகனங்களை உருவாக்கி வருகின்றனர்.

உலகின் அதிவேக வாகனங்களின் பட்டியல், தகவல்கள்..!

வேகத்தை விரும்புபவர்களுக்காக உலகில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் எது என்பது குறித்து கண்டறிந்து அதில் ஒவ்வொரு வகையிலும் எது சிறந்த வேகம் கொண்ட வாகனம், அதன் சிறப்பு என்ன என்பது குறித்து நமது டிரைவ் ஸ்பார்க் வாசகர்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள்: எம்வி அகஸ்டா எஃப்4 ஆர்312

உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள்: எம்வி அகஸ்டா எஃப்4 ஆர்312

நமது பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது, எம்வி அகஸ்டா: இத்தாலியைச் சேர்ந்த உலகின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனம். உலகில் உள்ள மோட்டார்சைக்கிள்களிலேயே அதிவேகமாக பயணிக்கக்கூடியது இந்த நிறுவனத்தின் எஃப்4 ஆர்312 மாடல் தான்.

உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள்: எம்வி அகஸ்டா எஃப்4 ஆர்312

உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள்: எம்வி அகஸ்டா எஃப்4 ஆர்312

மணிக்கு அதிகபட்சமாக 312 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பைக் போனேவில்லே ஸ்பீடு வீக் பந்தயத்தில் அதிவேக சாதனையை படைத்துள்ளது. இதன் 1.0 லிட்டர் இஞ்சின் அதிகபட்சமாக 183 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது ஆடி ஏ4 35 டிடிஐ கார் வெளிப்படுத்தும் ஆற்றலை விட அதிகம் ஆகும்.

உலகின் அதிவேக கார்: ஹென்னஸ்ஸே வெனோம் ஜிடி

உலகின் அதிவேக கார்: ஹென்னஸ்ஸே வெனோம் ஜிடி

அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்னஸ்ஸே நிறுவனத்தின் வெனோம் ஜிடி கார், ஜனவரி 21, 2013 ஆம் ஆண்டு 0-300 கிமீ வேகத்தை 13.63 நொடிகளில் எட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 435.31 கிமீ ஆகும்.

உலகின் அதிவேக கார்: ஹென்னஸ்ஸே வெனோம் ஜிடி

உலகின் அதிவேக கார்: ஹென்னஸ்ஸே வெனோம் ஜிடி

ஆனால் இதே கார் டெஸ்ட் டிரைவிங்கின் போது 0-322 கிமீ வேகத்தை 14.51 நொடிகளில் அடைந்து கோயெஞ்செக் அகேரா ஆர் கார் 17.68 நொடிகளில் படைத்திருந்த சாதனையை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக ரயில்: ஜப்பானின் எல்ஓ சீரீஸ் மக்லேவ்

உலகின் அதிவேக ரயில்: ஜப்பானின் எல்ஓ சீரீஸ் மக்லேவ்

உலகத்திலேயே அதிவேகமாக செல்லும் ரயில் என்ற சாதனையை தன்வசம் வைத்திருப்பது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘எல்ஓ சீரீஸ் மக்லேவ்' ரயில் தான்.

21 ஏப்ரல் 2015ல் அதிகபட்சமாக மணிக்கு 603கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.

உலகின் அதிவேக ரயில்: ஜப்பானின் எல்ஓ சீரீஸ் மக்லேவ்

உலகின் அதிவேக ரயில்: ஜப்பானின் எல்ஓ சீரீஸ் மக்லேவ்

இந்த ரயில் எலக்ட்ரிக் சார்ஜ் செய்யப்படும் சக்திவாய்ந்த காந்த சக்தியால் இயங்குகிறது. 603 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தாலும் சாதரணமாக இந்த ரயிலானது 505 கிமீ வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.

உலகின் அதிவேக ஹோவர்கிராஃப்ட்: யுஹச் 19 பி

உலகின் அதிவேக ஹோவர்கிராஃப்ட்: யுஹச் 19 பி

நீர், நிலம், மண், பணி மற்றும் இதர தன்மை கொண்ட நிலப்பரப்புகளில் பயணிக்கு ஹோவர்கிராப்ட்களிலேயே உலகின் அதிவேக சாதனையை தன்வசம் வைத்திருப்பது பாப் விண்ட் என்ற வானூர்தி பொறியாளர் சுயமாக வடிவமைத்த யுஹச் 19 பி ஹோவர்கிராஃப்ட் தான்.

உலகின் அதிவேக ஹோவர்கிராஃப்ட்: யுஹச் 19 பி

உலகின் அதிவேக ஹோவர்கிராஃப்ட்: யுஹச் 19 பி

சொந்தமுயற்சியில் பாப் உருவாக்கிய யுஹச் 19 பி, 1995ஆம் ஆண்டு போர்சுகலில் நடத்தப்பட்ட உலக ஹோவர்கிராஃப்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் 137.4 கிமீ வேகத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. 2014ல் மார்டின் என்பவர் இந்த சாதனை முறியடிக்க முயன்று தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக படகு: ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா

உலகின் அதிவேக படகு: ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கென் வார்பி என்பவரால் உருவாக்கப்பட்ட ‘ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா' என்ற படகு 1978ஆம் ஆண்டு துமுத் நதியில் (அவரே அதனை இயக்கி) 511.11 கிமீ சென்று அதிகபட்ச வேக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.

உலகின் அதிவேக படகு: ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா

உலகின் அதிவேக படகு: ஸ்பிரிட் ஆஃப் ஆஸ்திரேலியா

கிட்டத்தட்ட 40 வருடங்களாக நீடித்து வரும் இந்த சாதனையை முறியடிக்க பலர் முயன்று அதில் தோற்றுள்ளதோடு, சில மோசமாக விபத்துக்களிலும் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படகு தற்போது அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக கவச வாகனம்: எஃப்வி 101 ஸ்கார்பியன்

உலகின் அதிவேக கவச வாகனம்: எஃப்வி 101 ஸ்கார்பியன்

எதிரில் வரும் எந்த ஒரு வாகனத்தையும் இந்த கவச வாகனம் சுக்கு நூறாக வீழ்த்திவிடும், ஏனெனில் 3000 ரவுண்டுகள் சுடக்கூடிய இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட மிலிட்டரி கவச வாகனம் இது.

உலகின் அதிவேக கவச வாகனம்: எஃப்வி 101 ஸ்கார்பியன்

உலகின் அதிவேக கவச வாகனம்: எஃப்வி 101 ஸ்கார்பியன்

போர்க்களத்தில் உபயோகிக்கப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த ட்ராக் வாகனம் 2002ஆம் ஆண்டு மணிக்கு 82.23 கிமீ வேகத்தில் சென்று உலகின் அதிவேக கவச வாகனம் என்ற சாதனையை தன் வசப்படுத்தியுள்ளது.

உலகின் அதிவேக விமானம்: நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15

உலகின் அதிவேக விமானம்: நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15

அமெரிக்க விமானப்படையை சேர்ந்த நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15, அக்டோபர் 1967ஆம் ஆண்டு மணிக்கு 7,274 கிமீ வேகத்தில் பறந்து உலகின் அதிவேக விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது.

உலகின் அதிவேக விமானம்: நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15

உலகின் அதிவேக விமானம்: நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15

இந்த வேகத்தில் பயணிப்பதால் இதனை குறைந்த பட்சம் 14,000 மீட்டர்கள் உயரத்தில் தான் பறக்கவிடவேண்டுமாம். இவை மொத்தமே 3 என்ற எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்பட்து குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக கப்பல்: ஹச்எஸ்சி ஃபிரான்சிஸ்கோ

உலகின் அதிவேக கப்பல்: ஹச்எஸ்சி ஃபிரான்சிஸ்கோ

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஹச்எஸ்சி ஃபிரான்சிஸ்கோ கப்பலில், போயிங் 747 ஜெட் விமான ரக இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக கப்பல்: ஹச்எஸ்சி ஃபிரான்சிஸ்கோ

உலகின் அதிவேக கப்பல்: ஹச்எஸ்சி ஃபிரான்சிஸ்கோ

ஆடம்பர சொகுசுக் கப்பலான ஃபிரான்சிஸ்கோவில் 59,000 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 108 கிமீ வேகத்தில் சென்று உலகின் அதிவேக கப்பல் என்ற சாதனையை படைத்தது.

உலகின் அதிவேக ஹெலிகாப்டர்: யூரோகாப்டர் எக்ஸ்3

உலகின் அதிவேக ஹெலிகாப்டர்: யூரோகாப்டர் எக்ஸ்3

வழக்கமான ஹெலிகாப்டர் டிசைனில் இருந்து முற்றிலும் மாறுபட்ட டிசைன் கொண்டது யூரோகாப்டர் எக்ஸ்3. டெயில் ரோட்டாருக்கு பதிலாக பக்கவாட்டில் இரண்டு ப்ரொபல்லர்கள் உள்ளது.

உலகின் அதிவேக ஹெலிகாப்டர்: யூரோகாப்டர் எக்ஸ்3

உலகின் அதிவேக ஹெலிகாப்டர்: யூரோகாப்டர் எக்ஸ்3

2013ஆம் ஆண்டு அதிகபட்சமாக 488 கிமீ வேகத்தில் சென்று உலகின் அதிவேக ஹெலிகாப்டர் என்ற சாதனையை படைத்துள்ளது யூரோகாப்டர் எக்ஸ்3.

உலகின் அதிவேக விண்கலம்: அப்போலோ 10

உலகின் அதிவேக விண்கலம்: அப்போலோ 10

இதுவரையிலும் நீர், நிலம், காற்று ஆகிய வழிகளில் பயணிக்கும் உலகின் அதிவேக வாகனங்களை பார்த்தோம். தற்போது நாம் இறுதியாக பார்க்கவிருப்பது இந்த உலகத்தை விட்டு விண்வெளிக்கு செல்லும் அதிவேக விண்வெளி வாகனத்தைப்பற்றித் தான்.

உலகின் அதிவேக விண்கலம்: அப்போலோ 10

உலகின் அதிவேக விண்கலம்: அப்போலோ 10

நாம் இதுவரையிலும் பார்த்த வாகனங்களின் வேகம் இதன் அருகில் சீண்டக்கூட முடியாது. உலகின் எந்த வகையான வாகனங்களைக் காட்டிலும் இதுவே உச்சபட்ச வேகம் கொண்டது.

உலகின் அதிவேக விண்கலம்: அப்போலோ 10

உலகின் அதிவேக விண்கலம்: அப்போலோ 10

மனிதர்களுடன் விண்கலனை அனுப்பும் அமெரிக்க வின்வெளி திட்டத்தில் தயாரிக்கப்பட்ட அப்போலோ 10 என்ற விண்கலம், 24,791 கிமீ வேகத்தில் 3 மனிதர்களுடன் விண்வெளிக்கு சென்றது. இது நடந்தது மே, 1978ஆம் ஆண்டில். தற்போது வரைக்கும் இந்த அதிவேக சாதனையை எந்த வாகனமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil about world's fastest vehicles in land, water, air and space. more details in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X