நிஜத்தில் சாத்தியமான டிரான்ஸ்ஃபார்மர் கார்: தந்தை மகன் கூட்டணியின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

படங்களில் பார்த்த பிரம்மாண்டமான டிரான்ஸ்ஃபார்மர் கார்களை நிஜத்தில் உருவாக்கி சாதித்து காட்டியுள்ளது ஒரு தந்தை மகன் கூட்டணி.

ரஷ்யாவில் 1966ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட பழைய லாடா காரை நிஜமான ஒரு டிரான்ஸ்ஃபார்மர் காராக மாற்றி அச்சத்தியுள்ளனர் தந்தை மற்றும் மகன்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

2007 தொடங்கி ஹாலிவுட்டில் 10 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் வெளிவரும் திரைப்படப் வரிசை டிரான்ஸ்ஃபார்மர்ஸ்.

இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் இப்படத்தின் புதிய 5வது பாகம் இம்மாதம் வெளிவருகிறது.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

’டிரான்ஸ்ஃபார்மர்ஸ் தி லாஸ்ட் நைட்’ படத்தை பார்க்க உலகமே காத்திருக்கும் நிலையில், ரஷ்யாவில் ஒரு தந்தை மற்றும் மகன் இணைந்து டிரான்ஸ்ஃபார்மர் கார் மாடல் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

கார்கள் பிரம்மாண்ட ரோப்போகளாக மாறி பிரம்மிக்கவைக்கும் பல காரியங்களை செய்வது தான் டிரான்ஸ்ஃபார்மர் படத்தின் கதைக்களம்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

இதே ஐடியாவை, ரஷ்ய நாட்டில் வாழும் ஜென்னாடி கோச்செர்கா என்பவரும், அவருடைய மகன் செர்கேவும் இணைந்து, பழமையான லாடா காரில் செய்து காட்டியுள்ளனர்

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

இவர்கள் தயாரித்த இந்த கார், டிரான்ஸ்ஃபார்மர் படத்தில் வருவது போன்று காராக இருந்து ரோபோ போல மாறுவதோடு மட்டுமில்லாமல்,

படத்தில் டிரான்ஸ்ஃபார்மர் கார்களுக்கு இருப்பது போன்ற ரகசிய உள் அறை மற்றும் தானாக இயங்கக்கூடிய ஆயூதங்கள் ஆகியவற்றையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

நிஜ வாழ்க்கை டிரான்ஸ்ஃபார்மர் காரான இதைப்பற்றி ஜென்னாடி கோச்செர்கா "படத்தில் டிரான்ஸ்ஃபார்மர் கார்களை ஓட்டுவது, அதிலிருக்கும் ஆயூதங்களை பயன்படுத்தி சுடுவது மற்றும் சாகசங்கள் செய்வது போன்ற எல்லா செயல்களையும் இந்த நிஜ வாழ்க்கை டிரான்ஸ்பார்மர் காரிலும் செய்யலாம்" என்று கூறுகிறார்

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

இதே தொழில்நுட்பத்துடன் கூடிய மேலும் இரண்டு கார்களை தயாரிக்கும் முடிவில் இந்த தந்தை மகன் உள்ளனர்.

அவை மேலும் பல திறமைகளை செய்யக்கூடிய கார்களாக இருக்கும் என்றும் இவர்கள் கூறுக்கின்றனர்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

டிரான்ஸ்ஃபார்மர் படத்தில் வரக்கூடிய ’ஆப்டிமஸ் ஜென்னடிசிச்’ என்ற ரோபோவை போல வடிவமைக்க நினைத்ததால் ஜென்னாடி கோச்செர்கா பழைய லாடா காரை தேர்ந்தெடுத்துள்ளார்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

ஸ்விட்ச் தட்டினால் காரிலிருந்து ரோபோவாக மாறும் இந்த டிரான்ஸ்மார்பர் காரை, ரஷ்யாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஜென்னாடி மற்றும் செர்காயி எடுத்து சென்றுள்ளனர்.

நிழலிருந்து நிஜத்திற்கு மாறிய டிரான்ஸ்ஃபார்மர் கார்..!!

பல பகுதிகளில் இந்த அசாத்திய காரியத்தை வியந்து பார்க்கும் பார்வையாளர்கள், இதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு மேலும் போட்டி போட்டுக்கொளவர்களாம்.

லாடா டிரான்ஸ்மார்பர் காருக்கு பிறகு ஜென்னாடி மற்றும் செர்காயி அடுத்து தயாரிக்கவுள்ள இதே பாணியிலான புதிய கார்கள் பற்றி இப்போதே அவர்களது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Father son Make Real Life Transformer Car. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X