ஃபெராரி நிறுவனம் காருக்கு மட்டும் ஃபேமஸ் இல்லைங்க.. இதுக்கும் தான்..!

Written By:

துபாய் நகரில் திறக்கப்பட்ட உலகின் முதல் ஃபெராரி பொழுதுபோக்கு பூங்காவிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது பிரான்ஸில் தனது 2வது தீம் பார்க்கை நிறுவியுள்ளது ஃபெராரி நிறுவனம்.

இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி, தனது 2வது பொழுதுபோக்கு பூங்காவை "ஃபெராரி லேண்ட்" என்ற பெயரில் ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின் நாட்டில் துவக்கியுள்ளது.

ஸ்பெயினில் திறக்கப்பட்டுள்ள ஃபெராரி லேண்ட் அந்நிறுவனத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பியாரோ ஃபெராரி ரிப்பன் வெட்டி திறப்பதற்கு பதிலாக ஸ்டார்ட் பட்டனை அழுத்தி பூங்காவை திறந்து வைத்தார்.

7,50,00 சதுர அடி நிலப்பரப்பில் திறக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி பூங்காவில் 11 ரைடுகள் உள்ளது.
ஐரோப்பாவின் அதிவேக செங்குத்து ரோலர்கோஸ்டர் இதில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு ரைடுகளிலும் ஃபெராரி ஃஎப்-1 ரக கார்களின் மாதிரி போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது பெராரி கார்களில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தோற்றம் மட்டுமல்ல இந்த ரைடுகளில் பயணிக்கும்போது ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார்களின் உண்மையான வேகத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

இந்த பூங்காவில் குறிப்பிடத்தக்க அம்சமாக ‘ரெட் ஃபோர்ஸ்' என்ற ரைடு உள்ளது. இது 367 அடி உயரம் செல்லும் ரோலர் கோஸ்டர். இது தான் ஐரோப்பாவின் அதிவேக செங்குத்து ரோலர்கோஸ்டர் ஆகும்.

இந்த பூங்காவில் குறிப்பிடத்தக்க அம்சமாக ‘ரெட் ஃபோர்ஸ்' என்ற ரைடு உள்ளது. இது 367 அடி உயரம் செல்லும் ரோலர் கோஸ்டர். இது தான் ஐரோப்பாவின் அதிவேக செங்குத்து ரோலர்கோஸ்டர் ஆகும்.

இந்த பூங்காவில் குறிப்பிடத்தக்க அம்சமாக ‘ரெட் ஃபோர்ஸ்' என்ற ரைடு உள்ளது. இது 367 அடி உயரம் செல்லும் ரோலர் கோஸ்டர். இது தான் ஐரோப்பாவின் அதிவேக செங்குத்து ரோலர்கோஸ்டர் ஆகும்.

மேலும் ஜிடி, ஃஎப்-1, மார்னேலோ பந்தய கார்களை ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தை வழங்க கார் மாதிரிகளை போன்ற ஸ்டிமுலேட்டர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும், பெண்களும் பயன்படுத்தும் வகையில் விஷேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொழுதுபோக்கு பூங்கா முழுக்க ஃபெராரி நிறுவனம் வெளியிட்ட அனைத்து மாடல்களின் மாதிரிகளும் நிறைந்துள்ளது. இது ஃபெராரி ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது.

துபாயில் 2010ஆம் ஆண்டு உலகின் முதல் ஃபெராரி தீம் பார்க் துவங்கப்பட்ட போது, சுற்றுலாப் பயணிகளிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

இதோடு, 2015ல் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் பேர் சென்ற சுற்றுலாத் தளம் என்ற உலக சுற்றுலா விருதுகள் அமைப்பின் விருதையும் ஃபெராரி தீம் பார்க் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Ferrari inaugurates Ferrari Land in Spain after dubai in 2010.
Please Wait while comments are loading...

Latest Photos