'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னையில் தயாரான முதல் மின்சார ரயில்!!

Written By:

இந்திய ரயில்வேயின் கீழ் சென்னை ஆவடி அருகே செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் "Integral Coach Factory" தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார ரயிலை தயாரித்துள்ளனர். இந்த ரயில் தற்போது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலுக்கு ‘மேதா' என பெயரிட்டுள்ளனர். மும்பை புறநகர் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த மேதா ரயிலை, ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதுவரையில் இந்தியாவில் இயங்கும் மின்சார ரயில்களில், ரயிலை முன்னோக்கி நகர்த்தும் உந்துவிசை அமைப்பு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருந்து வந்துள்ளது.

மின்சார ரயில்களில் உள்ள ப்ரொபல்ஷன் சிஸ்டம் எனப்படும் உந்துவிசை அமைப்பிற்காக இதுவரையில் கனடாவின் பம்பார்டியர் அல்லது ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனங்களையே இந்தியா இதுவரையில் சார்ந்திருந்தது.

தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதால் ரயில் ஒன்றிற்கு 34 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவில் 25% மிச்சப்படுத்தப்படுகிறது.

12 பெட்டிகளைக் கொண்ட ஒரு மேதா ரயிலின் மதிப்பு 43.23 கோடி ரூபாய் ஆகும். மேதா ரயிலுடன் சேர்த்து ‘அந்தியோதயா' எனும் எக்ஸ்பிரஸ் ரயிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது லோக்மான்ய திலக் மற்றும் டாடா நகர்களுக்கு இடையில் சேவை அளிக்கும்.

புதிய மேதா ரயிலில் அதிக ஆற்றல் வாய்ந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 கட்டமான ப்ரொபல்ஷன் சிஸ்டம் உள்ளது. இந்த ப்ரொபல்ஷன் சிஸ்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘மேதா செர்வோ டிரைவ்ஸ்' எனும் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளதால் இந்த ரயிலுக்கு மேதா என பெயரிட்டுள்ளனர்.

இந்த ரயில் பிரேக் டவுன் ஏற்படாமல் தடுக்க உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110கிமீ என்ற வேகத்தில் செல்லும்.

ஐசிஎஃப் தொழிற்சாலையில் உள்நாட்டு ப்ரொபல்ஷன் சிஸ்டத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் குஷன் சீட்களுடனும், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சீட்கள் கொண்டும் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மற்ற ரயில்களில் உள்ளதைப்போன்ற கனமான கதவுகள் இந்த ரயில் பெட்டிகளில் இருக்காது. இதில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்ஈடி விளக்குகள், ஏர் சஸ்பென்ஷனுடன் கூடிய சீட்கள், ஜிபிஎஸ் தகவல் அமைப்பு மற்றும் கூரை வழியே கூடிய காற்றோட்ட வசதி என எண்ணற்ற அம்சங்களும் கொண்டுள்ளது இந்த ‘மேக் இன் இந்தியா' மேதா ரயில்.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

மேம்படுத்தப்பட்ட புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மற்றும் ஹயாத் பைக் அறிமுகம்!

 

 

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான டாடா டிகோர் காரின் படங்களை காணுங்கள்:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான டாடா டிகோர் காரின் படங்களை காணுங்கள்:

Story first published: Monday, March 20, 2017, 17:04 [IST]
English summary
first 'Made In India" train Medha in Mumbai. Read to know all the details about the India-made train.
Please Wait while comments are loading...

Latest Photos