தரையிலும், தண்ணீருக்குள்ளும் ஓட்டும் வசதியுடன் உலகின் முதல் கார்

நிலம், நீர் என இரண்டிலும் செல்லும் உலகின் முதல் கன்வெர்ட்டிபிள் நீர்மூழ்கி காரை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரின்ஸ்பீடு வடிவமைத்துள்ளது. நீர், நிலம் என இரண்டிலும் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள் இந்த காரில் உண்டு.

1977ல் வெளிவந்த தி ஸ்பை ஊ லவ்டு மீ ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் நிலம் மற்றும் நீரில் செல்லும் காரை பார்த்து வடிவமைத்ததாக ரின்ஸ்பீடு சிஇஓ., பிராங்க் எம் ரின்டர்நெக் தெரிவித்துள்ளார். பல சுவாரஸ்யமான கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

நீர்மூழ்கி கப்பலைத் தேடி

நீர்மூழ்கி கப்பலைத் தேடி

அணு ஆயுதங்களுடன் மாயமாகும் நீர்மூழ்கி கப்பல்களை தேடும் ஜேம்ஸ்பாண்ட் கதை இது. எனவே, இதில், நீர்மூழ்கி கப்பலை தேடிச் செல்வதற்கு நீரிலும், நிலத்திலும் செல்லும் காரை பயன்படுத்தியிருப்பர்.

 ஜேம்ஸ்பாண்ட் கார்

ஜேம்ஸ்பாண்ட் கார்

தி ஸ்பை ஊ லவ்டு மீ படத்தில் நிலத்திலும், நீரிலும் செல்லும் காராக பயன்படுத்தப்பட்டிருப்பது லோட்டஸ் எஸ்பிரிட் கார். 1976ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.

படத்தில் சாகசம்

படத்தில் சாகசம்

இந்த படத்திற்காக விசேஷமாக மாற்றப்பட்ட லோட்டஸ் எஸ்பிரிட் கார் பயன்படுத்தப்பட்டது. 140 பிஎச்பி மற்றும் 160 பிஎச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின்களில் விற்பனையானது.

கவனத்தை ஈர்த்த லோட்டஸ்

கவனத்தை ஈர்த்த லோட்டஸ்

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும் வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட இந்த கார் இந்த சினிமாவின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானது.

 ரின்ஸ்பீடு எஸ்கியூபா

ரின்ஸ்பீடு எஸ்கியூபா

ஹோவர்கிராஃப்ட் போன்ற வடிவில் கார்கள் வடிவமைக்கப்பட்டாலும், தண்ணீருக்குள்ளும் டிரைவிங் செய்ய ஏற்ற காராக இதனை குறிப்பிடுகிறது ரின்ஸ்பீடு. லோட்டஸ் எல்லீஸ் சேஸியில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

இது முழுக்க முழுக்க ஓர் எலக்ட்ரிக் கார் என்பது கூடுதல் சிறப்பு. மொத்தம் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மோட்டார் நிலத்தில் செல்லும்போது, தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது இரண்டு மோட்டார்கள் புரொப்பல்லரை இயக்கவும் துணை புரிகிறது..

 லித்தியம் அயான் பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரி

ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

எவ்வளவு ஆழத்திற்கு செல்லும்

எவ்வளவு ஆழத்திற்கு செல்லும்

10 மீட்டர்(33அடி) ஆழம் வரை தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்.

வேகம்

வேகம்

தரையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது மணிக்கு 6 கிமீ வேகத்திலும், தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும்போது மணிக்கு 3 கிமீ வேகத்திலும் இந்த கார் செல்லும்.

 விசேஷ இன்டிரியர்

விசேஷ இன்டிரியர்

இந்த காரின் இன்டிரியர் கடல் நீராலும், அதன் உப்புத் தன்மையால் பாதிக்காத வகையில் விசேஷ பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள்

இந்த கார் கன்வெரிட்டிபிள் என்பதால் கூரை இல்லாமலும் தண்ணீருக்குள் மூழ்கிச் செல்லும். பயணிகள் தண்ணீருக்குள் செல்லும்போது விசேஷ உடைகள் மற்றும் செயற்கை சுவாச கருவிகளுடன் இந்த காரை எப்போதும் போல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஓட்டலாம், அமர்ந்திருக்கலாம்.

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

உலகின் முதல் நீர்மூழ்கி கார்

Most Read Articles
English summary
Swiss based Rinspeed has developed the world's first car that can be driven both land and underwater.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X