ஃபிகோவுக்கு ஃபோர்டு இந்தியாவின் சர்ச்சைக்குரிய செக்ஸீ விளம்பரம்!

ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் வலியப் போய் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஃபிகோ காருக்காக ஃபோர்டு வெளியிட்ட சமீபத்திய பத்திரிக்கை விளம்பரம்தான் தற்போது பிரச்னைக்குரியதாக பார்க்கப்படுகிறது. ஃபிகோ காரில் பொருட்கள் வைப்பதற்கு அதிக இடவசதி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக அந்த நிறுவனத்தின் விளம்பர மற்றும் மார்க்கெட்டிங் பார்ட்னரான ஜேடபிள்யூடி நிறுவனம் புதிய விளம்பரத்தை தயாரித்துள்ளது.

அதில், "பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளுங்கள்" என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரத்தில் அரைகுறை ஆடைகளுடன் பெண்களை கைகால்கள் மற்றும் வாயில் கயிறு கட்டி டிக்கியில் போட்டிருப்பது போல படம் எடுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, ஃபிகோ காரில் அவ்வளவு இடவசதி இருக்கிறதாம். இடவசதியை காட்டுவது சரிதான், ஆனால், இப்படியா என்கிற ரீதியில் பிரச்னை எழுந்துள்ளது.

பிரமாதம் பெர்லுஸ்கோனி

பிரமாதம் பெர்லுஸ்கோனி

இந்த படத்தில் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோணி அமைதிக்காக விரல்களில் சைகை காட்டுவது போலவும், பூட் ரூமில் மூன்று பெண்கள் கைகால்களை கட்டிப் போட்டு, வாயிலும் கயிறால் கட்டப்பட்டிருப்பது போலவும் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது படம்

இரண்டாவது படம்

இரண்டாவது படத்தில் பாரிஸ் ஹில்டன் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு கண் அடிப்பது போலவும், பூட் ரூமில் கிம் கர்தஷியான் சகோதரிகள் கட்டிப் போடப்பட்டிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 மூன்றாவது விளம்பரம்

மூன்றாவது விளம்பரம்

மூன்றாவது விளம்பர படத்தில் காரின் பின் இருக்கையில் பார்முலா-1 ஜாம்பவான் மைக்கேல் சூமேக்கர் பெருமிதமாக முகத்தை வைத்திருப்பது போலவும், தற்போதைய பார்முலா-1 சூரர்களாக திகழும், செபாஸ்டியன் வெட்டல், ஃபெர்னான்டோ அலோன்சா மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஆகியோர் கைகால்களையும், வாயில் பேண்டேஜ் போட்டு பூட் ரூமில் அடைக்கப்பட்டிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இப்படியா எடுக்கணும்?

இப்படியா எடுக்கணும்?

ஃபிகோவின் பூட் ரூம் பெருமையை அளப்பதற்கு இப்படியா விளம்பரம் எக்கணும் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

மூன்றாண்டு கொண்டாட்டம்

மூன்றாண்டு கொண்டாட்டம்

ஃபிகோ அறிமுகம் செய்யப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைவடைந்ததைத் தொடர்ந்து இதுபோன்ற புரொமோஷன்களை ஃபோர்டு செய்து வருகிறதாம்.

Most Read Articles
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
English summary
Ford India has landed itself in an unnecessary controversy, which could have been easily avoided had it been a little more sensible. Ford India's advertising and marketing partner JWT India, the Indian arm of the New York based JWT marketing and communications firm, recently created a series of print ads that for obvious reasons, has not gone down well with anyone.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X