அழும் குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க தொட்டில் தயாரித்த ஃபோர்டு நிறுவனம்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி பொக்கிஷமான நமது குழந்தை செல்வத்தை தலாட்டி தூங்வைக்க மார்டன் படுக்கை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

Written By:

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த பழக்கம் பெரும்பாலான குழந்தைகளிடம் உண்டு. இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கான பிரத்யேக படுக்கை ஒன்றை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் பலரிடம் ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. அதில் குழந்தைகளால் பெற்றோர் பலர் இரவில் உறங்க தாமதம் ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டது.

குழந்தையை தூங்கவைக்க இரவில் எந்த நேரம் ஆனாலும், பெற்றோர்கள் குழந்தையுடன் சிறிய பயணம் மேற்கொள்வதும், பிறகு குழந்தை தூங்கிய பிறகு தாமதமாக பெற்றோர்கள் தூங்க செல்வது ஃபோர்டு நிறுவனத்திற்கு தெரியவந்தது. 

தனது இந்த ஆய்வை வைத்து வீட்டில் எந்த இடர்பாடுகளுமின்றி குழந்தைகள் உறங்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை அமைப்பை ஃபோர்டு தயாரித்துள்ளது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் (crib) என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்த தொட்டிலில் பல அசாத்திய தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் பலர் தங்கள் குழந்தையை தூங்கவைக்க, நடுராத்திரி ஆனாலும் கூட, காரில் குழந்தையை வைத்து ஊரை சுற்றி காட்டி, சிறுது நேரத்தில் குழந்தை தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்து குழந்தையை படுக்க வைக்கின்றனர். இதற்கு பிறகே அவர்களும் தூங்க செல்கின்றனர். இதனால் ஏற்படும் சிரமங்களை களையவே ஃபோர்டு நிறுவனம் மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் படுக்கையை உருவாக்கியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான படுக்கை வசதியை போன்ற வடிவமைப்பை கொண்டுள்ள இதில் தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் உள்ளன.

வெறும் குழந்தைகளுக்கான படுக்கையாக மட்டுமில்லாமல், இந்த தொட்டிலை நமது ஸ்மார்ட் ஃபோனில் அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலி உடன் இணைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என்றால், அதற்கான மோடை மாற்றி, இந்த மார்டன் தொட்டிலில் அதற்கேற்ற அசைவை ஏற்படுத்தலாம்.

இதற்கான வடிவமைப்பு பணிகளில் ஃபோர்டு இறங்கிய போது, காரில் தூங்கிக்கொண்டுயிருந்தாலும் குழந்தைகளில் ஆழ்மனது விழித்திருக்கும் என்பதை தெரிந்து மேட் மேக்ஸ் ட்ரீம்ஸ் கிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதனாலேயே நிஜமான ஒரு கார் பயணத்தில் இருப்பது போன்ற உணர்வை மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் கிரிப் குழந்தைகளுக்கு வழங்கும்.

கவனித்தக்க பல அம்சங்களை பெற்றுள்ள மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் கிரிப்பை தற்போது வரை ஃபோர்டு சோதனை முயற்சியில் தான் ஈடுபடுத்தி வருகிறது. இருந்தாலும், அதை வடிவமைக்க மேற்கொண்ட ஆய்வை வைத்து விரைவில் இது மக்களின் பயன்பாட்டிற்கு வரலாம் என ஃபோர்டு நிறுவன வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்துக்கொண்டுள்ளன.

மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் கிர்ப் விற்பனைக்கு வந்தால், நிச்சயம் உலகளவில் இது ஹிட்டடிக்கும். பல நாடுகளில் தேவையும் அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் உழைப்பே பிராதனம் என்றாலும், குடும்பம் குழந்தை ஆகியவற்றின் வளர்ச்சி பணத்தை விட முக்கியம் அல்லவா! அதனால் இதற்கான இந்த மார்டன் தொட்டிலுக்கு பெரியளவிலான வியாபரம் வட்டம் உருவாகும் என்பது ஃபோர்டு நிறுவனத்தின் நம்பிக்கையாக உள்ளது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ford motor company manufacturing baby crib. The crib combines lights, sounds, and movement to mimic a car ride and more...
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK