ஜெர்மனி போலீசில் இணைந்த புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்!

புதிய ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரை ஜெர்மனி போலீசார் வாங்கியுள்ளனர். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

வெளிநாடுகளில் பெரும் விலை கொண்ட கார்களை வாங்கி போலீஸ் துறையில் பயன்படுத்துவது வழக்கமான செயல்தான். திருடர்களை சேஸ் செய்து பிடிப்பதற்கு சக்திவாய்ந்த கார் மாடல் தேவைப்பட்டதால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது ஒரு வகை பயன்பாடாக இருந்தாலும் இப்போது துபாய், அபுதாபி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் விலை கொண்ட கார்களை வாங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காகவும், சுற்றுலாப் பயணிகளை கவரவும் பயன்படுத்தி வருகின்றனர்.

போலீஸ் கார்

அந்த வகையில், சமீபத்தில் புதிய ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார் மாடலை ஜெர்மனி போலீசார் வாங்கி சேர்த்துள்ளனர். அது எந்த நோக்கத்திற்காக வாங்கப்பட்டது என்பதையும், சிறப்புகளையும் தொடர்ந்து பார்க்கலாம்.

 

புதிய மாடல்

சமீபத்தில் நடந்த எஸ்ஸென் மோட்டார் ஷோவில்தான் இந்த 6ம் தலைமுறை புதிய மஸ்டாங் ஜிடி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை Wolf Wide 5.0 என்ற செல்லப்பெயரில் குறிப்பிடுகின்றனர். இந்த கார் ஃபோர்டு நிறுவனத்தின் டியூனிங் மையத்தின் மூலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரச்சார வாகனம்

இந்த சக்திவாய்ந்த கார் நிச்சயம் திருடர்களை விரட்டிப் பிடிக்க பயன்படுத்தப் போவதில்லையாம். ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களுக்கு இந்த புதிய ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரை பிரச்சார வாகனமாக பயன்படுத்தப் போவதாக ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் உடுப்பு

ஜெர்மனி போலீஸ் கார்களுக்கு உரிய வெளிர் நீலம், சில்வர் என இரட்டை வண்ணக் கலவை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பானட்டிலும், பக்கவாட்டிலும் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன், விளக்குகள், சைரன் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக பம்பர் கிட் மற்றும் விசேஷ புகைபோக்கி அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

இந்த காரில் 20 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை சேர்ப்பது ஜெர்மனி போலீசாரின் வழக்கமாக உள்ளது.

விலை உயர்ந்த கார்கள்

ஏற்கனவே, ஆடி ஆர்8, சி7 கார்வெட், பிராபஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ், பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் மற்றும் எலக்ட்ரிக் மினி கார் மாடல்களை ஜெர்மனி போலீசார் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

விலை உயர்ந்த கார்கள்

புதிய ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரில் 421 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிபட்சமாக மணிக்கு 238 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 100 கிமீ வேகத்தை இந்த கார் 4.3 வினாடிகளிலேயே எட்டிவிடும் வல்லமை கொண்டது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The power output of the car has increased from the stock 5.0-litre V8’s 421bhp to 455bhp and can attain a top speed of 238 km/h.
Please Wait while comments are loading...

Latest Photos