குடியை கெடுத்த குடி... மரத்தில் மோதி அப்பளமாகிய ஹோண்டா சிட்டி கார்!

Written By:

குடி போதை டிரைவிங்கால் ஏற்படும் விளைவுகள் படு பயங்கரமானதாக இருக்கிறது. அதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டாலும், சிலர் அதனை பொருட்படுத்தாமல் செல்வதால் உயிரை விலையாக கொடுக்கின்றனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், மீண்டும் ஒரு பயங்கர விபத்து பஞ்சாப் மாநிலம், லூதியான நகரில் நடந்துள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் ஹோண்டா சிட்டி காரில் ஜாலி ட்ரிப் சென்றுள்ளனர். அதிவேகத்தில் பறந்து சென்ற அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கல் ஒன்றில் மோதியிருக்கிறது.

மோதிய வேகத்தில் 8 அடி உயரம் வரை பறந்த அந்த கார் சாலை இறக்கத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், அந்த கார் அப்பளமாக நொறுங்கி உருக்குலைந்தது. காரில் இருந்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் மருத்துமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு மாணவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த விபத்தில் சிக்குவதற்கு முன்னர் அந்த மாணவர்கள் சேர்ந்து சமூக வலைதளம் ஒன்றில் குழு படத்தை வெளியிட்டுள்ளனர். அதன்பின்னர் ஜாலியாக டிரிப் அடுத்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

மணிக்கு 150 கிமீ வேகத்தில் அந்த கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த காரில் இருந்த அனைவரும் குடி போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

குடிபோதை வாகன ஓட்டிகளால் இதுபோன்ற மரணங்கள் தொடர்கதையாகி உள்ளன. இது குடிபோதை டிரைவர்களுக்கு மட்டுமில்லாமல், சாலையில் செல்லும் அனைவரின் உயிருடன் விளையாடும் விஷயமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கணிசமான அபாரதத்தையும், கடும் சிறைத் தண்டனையையும் விதிக்கும் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த சட்டம் அமலுக்கு வந்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்படும் என்று நம்பலாம்.

விபத்தில் சிக்கிய ஹோண்டா சிட்டி கார் வாங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்தாலாவது, இனி குடிபோதை டிரைவிங்கை தவிர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...!!

தற்போது விபத்தில் சிக்கியவர்களின் விபரம் தெரிய வந்துள்ளது.  கவுரிஷ் வர்மா[21, ]சன்யம் அரோரா[20], ரிஷிகா பாஸி[19] மற்றும் இஷானி ஜிந்தால்[19] ஆகிய நால்வரும் விபத்தில் உயிரிழந்தவர்கள். பின் இருக்கையில் பயணித்த அக்ஷித் க்ரோவர் என்ற மாணவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

ஆடி க்யூ8 கான்செப்ட் காரின் படங்கள்!

மிக உயர் வகை சொகுசு எஸ்யூவி மாடல் கான்செப்ட் ஒன்றை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ படங்களை இந்த செய்தியில் காணலாம்.

Via- Bhaskar

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Tuesday, January 10, 2017, 14:08 [IST]
English summary
Four Students Killed in car crash at Punjab.
Please Wait while comments are loading...

Latest Photos