மே14ம் தேதி முதல் தமிழகத்தில் ஞாயிறு தோறும் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை..!

Written By:

மே14ம் தேதி முதல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் பெட்ரோல் பங்குகள் செயல்படாது எனவும், மே 15ம் தேதியிலிருந்து நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம் மட்டுமே பங்குகள் இயங்கும் எனவும் பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக பெட்ரோலியம் டீலர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதை அறிவிக்காவிட்டால் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இனி ஞாயிற்று கிழமைகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்குகள் இயங்காது என பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மே 15ம் தேதி முதல் நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம் மட்டுமே பங்குகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிறு தோறும் விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் இதை நடைமுறைபடுத்த உள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 55,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் 95 சதவீத பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கி வருகின்றன. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே தனியார் டீலர்கள் இயக்கும் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.

இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் கீழ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குகளை அடைக்கும் டீலர்களின் முடிவு உறுதியாக நடைமுறைக்கு வரவுள்ளதால், கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Tuesday, April 18, 2017, 15:09 [IST]
English summary
From may 14 every Sunday will be a Holiday for Tamil Nadu and Pudhucherry Petrol Bunks. Petrol Dealer Association announced. click for more details...
Please Wait while comments are loading...

Latest Photos