திருட முடியாத விரக்தியில் சொகுசுக்கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய சைக்கோ திருடர்கள்...!

Written By:

பெண்ட்லி, பிஎம்டபிள்யூ போன்ற காஸ்ட்லி கார்களை திருட முடியாத விரக்திலில் சைக்கோ திருடர்கள் இருவர் அவற்றை தீ வைத்து எரித்து சாம்பலக்கியுள்ள சம்பவம் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் வெளிவந்து அதிர்ச்சியில் உறையவத்துள்ளது.

டெல்லி அருகேயுள்ள குர்கானின் செக்டர்-15 பகுதியில் காஸ்ட்லி கார்கள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளயில் அங்கு சென்றுள்ளனர்.

ஹோண்டா அமேஸ் செடன் காரில் சென்ற கொள்ளையர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காஸ்ட்லி சொகுசுக் கார்களை திருட முயன்றுள்ளனர். எனினும் அவற்றை கொள்ளையடிக்க முடியாத விரக்தியில் கார்களுக்கு தீ வைத்துவைத்து எரித்துள்ளனர் அந்த சைக்கோ திருடர்கள்.

இந்த சம்பவத்தில் ஒரு பெண்ட்லி, ஒரு பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் மற்றும் ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் என மூன்று விலையுயர்ந்த கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த சம்பவம் நடந்தது அதிகாலை 3 மணி என்பதால் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்திருக்கவில்லை, ஆயினும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளூர் காவல் நிலையல் இருக்கிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது திடுக்கிடும் உண்மை அவர்களுக்கு தெரியவந்தது.

சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளை முயற்சி சம்பவம் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில் கார்களின் பூட்டை உடைக்க திருடர்கள் முயன்று அது பலனளிக்காததால் மூன்று கார்களுக்கு தீ வைத்துச் சென்றுள்ளனர்.

திருடர்கள் இருவரும் ஹோண்டா அமேஸ் காரில் வந்திருப்பதும் அதில் பதிவாகியிருந்தது, தாங்கள் வைத்த தீ அணைந்துவிடாமல் எரிந்து கார்கள் முழுவதும் எரிகிறதா என்பதனை உறுதி செய்யும் விதமாக 45 நிமிடங்கள் அந்த பகுதியிலேயே சுற்றித்திரிந்து திருடர்கள் கண்கானித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் அப்போது ஒரு போலீஸ் வாகனம் அந்த பகுதியை கடந்து செல்வதும் நன்றாக பதிவாகி இருந்தது. பாராமுகமாக சென்ற காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் திருடர்கள் தப்பிச் செல்லாமல் தடுத்து கைது செய்யப்பட்டிருக்கலாம்.

தற்போது தலைமறைவாகிவிட்ட சைக்கோ திருடர்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about pscho theives who set cars in fire
Please Wait while comments are loading...

Latest Photos