உலகின் மிகப்பெரிய கப்பலை கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் பார்க்கும் இங்கே வாய்ப்பு!

By Saravana

உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான ஆல்யூர் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ உதவியுடன் இந்த வசதியை ராயல் கரிபீயன் க்ரூஸ் லைன்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுவரை புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடிந்த இந்த கப்பல் தற்போது 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது கப்பலுக்குள் நிஜமாகவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.


பிரம்மாண்ட கப்பல்

பிரம்மாண்ட கப்பல்

உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையை ராயல் கரிபீயன் நிறுவனத்தின் ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் மற்றும் ஆலூர் ஆஃப் தி சீஸ் ஆகிய இரு கப்பல்களும் மாறி மாறி வைத்துக் கொண்டுள்ளன. ஏனெனில், வெப்ப நிலையை பொறுத்து இந்த கப்பல்களின் நீளத்தில் வித்தியாசம் ஏற்படுவதே இதற்கு காரணம்.

 மிதக்கும் நகரம்

மிதக்கும் நகரம்

அனைத்து வசதிகளையும் தன்னகத்தே உடைய இந்த கப்பலை மிதக்கும் நகரமாக வர்ணிக்கின்றனர். 362 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 6,296 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கப்பலில் உள்ளன.

அழகை காணலாம்

அழகை காணலாம்

கப்பலில் இருக்கும் தங்கும் அறைகள், நீச்சல் குளம், மலையேற்றப் பகுதி, சினிமா திரையரங்குகள், ஓட்டல்கள், சாப்பாட்டுக்கூடம், விளையாட்டுக் கூடங்கள், பூங்கா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் பார்க்க முடியும்.

 புகைப்படங்கள்

புகைப்படங்கள்

டிஎஸ்எல்ஆர் கேமராவின் ஃபிஷ்-ஐ லென்ஸ் மூலம் பனரோமிக் மோடில் ட்ரைபாட் உதவியுடன் இந்த படங்களை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வர்த்தக நோக்கு

வர்த்தக நோக்கு

இந்த உல்லாச கப்பலுக்கு பயணிகளை கவரும் விதத்திலேயே இந்த வசதியை ராயல் கரீபியன் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பயண செய்யப் போகும் கப்பல் எப்படியிருக்கும் என்பதை நிஜமாகவே உணரும் விதத்தில் இந்த சிறப்பு வசதியை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்திற்கு செல்ல

கூகுள் பக்கத்திற்கு செல்ல

ஆலூர் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலை கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய மற்றொரு கப்பல்

உலகின் மிகப்பெரிய மற்றொரு கப்பல்

உலகின் மிகப்பெரிய கப்பலான ஒயாசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பல் பற்றிய சிறப்புத் தகவல்களையும், படங்களையும் காண இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Royal Caribbean has revealed the world's first, exclusive "access all areas" tour onboard Allure of the Seas, using Google Street View technology. 
Story first published: Wednesday, July 9, 2014, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X