இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி 160 ஆண்டுகள் நிறைவு!

இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி இன்றுடன் 160 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக கூகுள் இன்று புதிய டூடுளை வெளியிட்டுள்ளது.

நாட்டின் போக்குவரத்தில் முக்கிய பங்களித்து வரும் ரயில்வே துறை இன்று மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. புல்லட் ரயில் விடுவதற்கான முயற்சிகளும் தற்போது துவங்கியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய ரயில்வே துறையாக திகழும் இந்தியன் ரயில்வேயின் முதல் ரயில் சேவை பற்றிய செய்தித் தொகுப்பினை காணலாம்.

 ஆங்கிலேயர் முயற்சி

ஆங்கிலேயர் முயற்சி

இந்தியாவில் ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்தான்.

முதல் ரயில்

முதல் ரயில்

1853ம் ஆண்டு ஏப்ரல் 16ந் தேதி மும்பை-தாணே இடையில் இந்த முதல் பயணிகள் ரயில் துவங்கப்பட்டது.

பயண நேரம்

பயண நேரம்

மூன்று நீராவி எஞ்சின்களுடன் 34 கிமீ., தூரத்துக்கு அமைக்கப்பட்ட பாதையில் முதல் ரயில் இயக்கப்பட்டது. 57 நிமிடங்களில் இந்த பயணப் பாதையை முதல் ரயில் கடந்தது.

 எஞ்சினுக்கு பெயர்

எஞ்சினுக்கு பெயர்

முதலாவது ரயிலை மூன்று நீராவி எஞ்சின்கள் மூலம் இயக்கினர். அந்த மூன்று எஞ்சின்களுக்கும் சுல்தான், சாஹிப் மற்றும் சிந்த் என பெயரிட்டிருந்தனர்.

 சிறப்பு அழைப்பு

சிறப்பு அழைப்பு

இந்த முதல் ரயிலில் பயணிக்க 400 பேர் மட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். 14 பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்தது.

சிவாஜி டெர்மினஸ்

சிவாஜி டெர்மினஸ்

மும்பையில் முதல் ரயில் சேவை துவங்கிய இடம்தான் தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்(சிஎஸ்டி).

கூகுள் டூடுள்

கூகுள் டூடுள்

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கி 160 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்டிருக்கும் டூடுள்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X