புதிய ஃபெராரி காருக்கான 32 அதிர்ஷ்டசாலிகளில் கூகுள் அதிகாரியும் ஒருவர்!

லாஃபெராரி காரின் ரேஸ் டிராக் வெர்ஷனை சமீபத்தில் ஃபெராரி கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே என்ற பெயரில் வந்த இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டவுடனேயே அனைத்து கார்களுக்கான முன்பதிவும் முடிந்துவிட்டதாக ஃபெராரி தெரிவித்தது.

இந்த நிலையில், மொத்தம் விற்பனை செய்யப்பட உள்ள 32 அதிர்ஷ்டசாலிகளில் கூகுள் நிறுவனத்தின் எஞ்சினியரிங் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் ஸ்லாஸும் ஒருவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. பெஞ்சமின் ஒரு கார் ஆர்வலர், கார் சேகரிப்பாளர் என்பதோடு, கார் ஆர்வலர்களுக்கான அமைப்புகளிலும் தீவிர செயல்பாடுகள் கொண்டவர்.

இந்த புதிய ஃபெராரி கார் மட்டுமின்றி, அவரிடம் ஏற்கனவே இரண்டு ஃபெராரி கார்கள், இரண்டு மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்கள் இருக்கின்றன. கார்கள் மீதான அவரது ஆர்வத்தை காண்பதற்கு, அவரது கராஜில் இருக்கும் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியுள்ளோம்.


கார் கலெக்ஷன்

கார் கலெக்ஷன்

கூகுள் அதிகாரி பெஞ்சமின் ஸ்லாஸ் கார் கலெக்ஷனை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே

ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே

அபுதாபியில் வைத்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் ரேஸ் டிராக்குகளில் மட்டுமே ஓட்ட முடியும். மேலும், ஃபெராரி நிறுவனம் நடத்தும் பிரத்யேக பந்தயங்களில் மட்டுமே இந்த கார்களை அதன் உரிமையாளர்கள் ஓட்ட முடியும். இதற்காக உள்ள பிரத்யேக கிளப்பில் தற்போது பெஞ்சமின் ஸ்லாஸ் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ.15 கோடி விலை மதிப்பு கொண்டது ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே மாடல்.

 ஃபெராரி 599எக்ஸ்எக்ஸ் எவோ

ஃபெராரி 599எக்ஸ்எக்ஸ் எவோ

ஃபெராரியின் மற்றுமொரு லிமிடேட் எடிசன் மாடலான இந்த காரை 2012ம் ஆண்டு நடந்த ஏலத்தில் பெஞ்சமின் ஸ்லாஸ் வாங்கினார். இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த ஏலத்தொகை வழங்கப்பட்டது. மஞ்சள் வண்ணத்திலான இந்த காரை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார் பெஞ்சமின். இந்த காரை ரூ.11 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.

ஃபெராரி 458 இட்டாலியா

ஃபெராரி 458 இட்டாலியா

ஃபெராரியின் பெரும் வரவேற்பை பெற்ற மாடலான 458 இட்டாலியா காரும் ஸ்லாஸ் கராஜில் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 562 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0- 97 கிமீ வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக இந்த கார் மணிக்கு 325 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பை கொண்டது. இந்த கார் ரூ.2.50 கோடி விலை மதிப்பு கொண்டது.

மெக்லாரன் 12சி ஸ்பைடர்

மெக்லாரன் 12சி ஸ்பைடர்

மெக்லாரன் 12சி காரின் கன்வெர்ட்டிபிள் மாடலான இந்த காரும் கார் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்த மாடல். இந்த காரில் 593 பிஎச்பி பவரை அளிக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் கொண்டது. 0 -97 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் கடந்துவிடும் மணிக்கு அதிகபட்சமாக 343 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டது.

 மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1 மாடலில் மொத்தம் 375 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட மாடல் இது. இந்த காரில் 3.8 லிட்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எலக்ட்ரிக் மோட்டாரும் கொண்ட இந்த ஹைபிரிட் காரில் 887 எச்பி பவரை அளிக்கும் இந்த கார் மெக்லாரனின் தொழில்நுட்ப வலிமைக்கும், அனுபவத்திற்கும் சான்றாக கூறப்படுகிறது. இந்த கார் ரூ.6.30 கோடி விலை மதிப்பு கொண்டது.

ஃபோர்டு ராப்டர்

ஃபோர்டு ராப்டர்

சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை தவிர்த்து ஃபோர்டு ராப்டர் பிக்கப் டிரக் மாடலும் ஸ்லாஸிடத்தில் உள்ளது. இந்த பிக்கப் டிரக் மாடலில் 365 எச்பி பவரை அளிக்கும் 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த பிக்கப் டிரக் ரூ.15 லட்சம் மதிப்பு கொண்டது.

Most Read Articles
English summary
Google Executive, Benjamin Sloss is the proud owner of one of the latest wonders in automobiles, the track only Ferrari FXX K.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X