டேக் டைவர்ஷன் பரிதாபங்கள்.. வழிதவறி 500கிமீ காரில் சென்ற வயதான தாயை விமானத்தில் சென்று மீட்ட மகள்..!

Written By:

வீட்டில் இருந்து காரில் கிளம்பிய மூதாட்டி ஒருவர் நடிகர் விவேக் நடித்த திருமலை பட பாணியில், 'டேக் டைவர்ஷன்' என்ற எச்சரிக்கை பலகை காரணமாக திசைமாறி 500 கிமீ பயணம் செய்துள்ள வினோத சம்பவம் நடந்தேறியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வொர்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த வெலரி ஜான்சன் என்ற 83 வயது மூதாட்டி ஒருவர், சிகிச்சைக்காக தன் வீட்டில் இருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு காரில் தனியாக கிளம்பிச் சென்றுள்ளார்.

விஜய் நடித்த திருமலை படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கும்.. நடிகர் விஜய்யும், விவேக்கும் திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்லும்போது, டேக் டைவர்ஷன்.. டேக் டைவர்ஷன் என்று மாற்றுப் பாதையில் பயணித்து, இறுதியாக திருப்பதிக்கு சென்றுவிடுவர். ஆனால் இங்கு நடந்துள்ள சம்பவம் இந்த சினிமா காட்சியையே மிஞ்சிவிட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு காரில் கிளம்பிய மூதாட்டி, சாலையில் செல்லும் வழியில் "பாதை மாற்றப்பட்டுள்ளது" என்ற எச்சரிக்கை பலகையை கண்டு வேறு பாதையில் சென்ற அவர் ஒரு திருப்பத்தை எடுத்திருக்க வேண்டும், அதனை அவர் கவனிக்காமல் அதே சாலையிலேயே தொடர்ந்து பயணித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து கிளம்பிய அவர் ஸ்காட்லாந்துக்கே சென்றுவிட்டார்.
8 மணிநேர பயணத்தின் இறுதியில் காரில் எரிபொருள் இல்லாமல் சாலையின் நடுவே கார் நின்றுவிட்டது. அருகில் இருந்த வீட்டில் இருந்த தம்பதியர் அவருக்கு உதவி செய்துள்ளனர். ( எரிபொருள் இருந்திருந்தால் இவரை பிடித்திருக்க முடியாது போலயே..!)

அதற்குள் இங்கிலாந்தில் இந்த மூதாட்டியின் மகள் கேரன் மேஸ்கலுக்கு (வயது 49) தன் தாயை காணாத தகவல் பக்கத்து வீட்ட்டுக்காரர் மூலமாக தெரியவந்ததால், உடனடியாக காவல் நிலையத்தில் தன் தாயை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரிகள் காரின் பதிவு எண்ணை கொண்டு தேடிய போது தான், மூதாட்டியின் கார் ஸ்காட்லாந்தில் உள்ளது தெரியவந்தது. ஒரு போக்குவரத்து சிக்னலில் இருந்த சிசிடிவி கேமராவில் அவரின் கார் செல்வதும் பதிவாகியிருந்தது.

இங்கிலாந்து காவல்துறையினர், மூதாட்டியின் கார் நிற்கும் பகுதியில் உள்ள ஸ்காட்லாந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்குமாறு கோரியுள்ளனர்.

இதற்குள் மூதாட்டி வெலரி ஜான்சனின் மகள் விமானம் மூலம் ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றார். அவர் அங்கு சென்று சேரும் முன்பாக ஸ்காட்லாந்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை வரவழைத்து மூதாட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
( 8 மணி நேரப் பயணத்தில் பாவம் களைத்திருப்பார் இல்லயா..!)

பல மணி நேர பரிதவிப்பிற்கு பின்னர் பின்னர் ஒருவழியாக மூதாட்டி இருக்கும் இடத்தை அடைந்த அவருடைய மகள் தன் தாய்க்கு பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்த தம்பதியருக்கும், ஸ்காட்லாந்து காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து மூதாட்டியை கூட்டிச் சென்றார்.

சினிமா கதையை மிஞ்சிய இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழி தெரியவில்லை என்றால் அருகில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதே நல்லது. இல்லையென்றால் இது போல எதாவது விபரீதமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்க..

( கொசுறுத்தகவல்: இந்த மூதாட்டிக்கு கார் ஓட்டுவதே பிடிக்காதாம், இவர் அதிகபட்சமாக 5 கிமீ மேல் கார் ஓட்டியதே இல்லையாம்..)

English summary
Read in Tamil about Old lady drives car accidentally to 500kms as seen in tirumalai film scenes.
Please Wait while comments are loading...

Latest Photos