சகல வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் ஜம்போ விமானம்!

By Saravana

போயிங் 747 ஜம்போ ஜெட் விமானத்தின் இன்டிரியரை சகல வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து டெலிவிரி கொடுத்திருக்கிறது க்ரீன் பாயிண்ட் நிறுவனம். விமானத்தின் உரிமையாளர் பெயரை வெளியிடாத அந்த நிறுவனம், படங்களை மட்டும் வெளியிட்டிருக்கிறது.

பல மணி நேரம் விமான பயணம் மேற்கொள்பவர்களை ஏங்க வைக்கும் விதத்தில், பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மாற்றப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


விமான மாடல்

விமான மாடல்

போயிங் 747- 8 ஜம்போஜெட் விமானத்தின் உள்புறத்தில்தான் தனது கைவண்ணத்தை காட்டி அசத்தியிருக்கிறது க்ரீன் பாயிண்ட் நிறுவனம்.

ஸ்கேல் மாடல்

ஸ்கேல் மாடல்

விமானத்தின் இன்டிரியரை காட்டும் ஸ்கேல் மாடலை பார்வையிடும் அரபு நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்.

இடவசதி

இடவசதி

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்று போயிங் 747- 8 ஜெம்போ ஜெட். இந்த விமானத்தில் 450 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், தனியார் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இந்த விமானத்தை க்ரீன் பாயிண்ட் மாற்றியிருக்கிறது.

ஆடம்பர படகு டிசைன்

ஆடம்பர படகு டிசைன்

பொதுவாக ஆடம்பர படகுகளில்தான் இதுபோன்ற வசதிகள் செய்யப்படும். அதனை விஞ்சும் வகையில், இந்த விமானத்தில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாஸ்டர் பெட்ரூம்

மாஸ்டர் பெட்ரூம்

இந்த விமானத்தில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், இந்த விமானத்தின் மாஸ்டர் பெட்ரூம் பயணிப்பவருக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.

மதிப்பு

மதிப்பு

230 மில்லியன் பவுண்ட் விலை மதிப்பு கொண்ட இந்த விமானத்தில் 160 மில்லியன் பவுண்ட் விலையில் இன்டிரியர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறைகள்

அறைகள்

வரவேற்பு அறை, விருந்தினர் அறை, படுக்கையறை, சாப்பாட்டுக்கூடம், பார், ரெஸ்ட்டாரன்ட், அலுவலக அறை, சினிமா அரங்கம், பணியாளர்களுக்கான இருக்கைகள் கொண்ட அறை என பல்வேறு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

கால அளவு

கால அளவு

மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இந்த விமானத்தை பார்த்து பார்த்து கஸ்டமைஸ் செய்து கொடுத்திருக்கிறது க்ரீன் பாயிண்ட் நிறுவனம்.

ரகசியம்

ரகசியம்

இந்த விமானம் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், உரிமையாளர் பெயரை க்ரீன் பாயிண்ட் நிறுவனம் வெளியிடவில்லை.

கூடுதல் படங்கள்

கூடுதல் படங்கள்

இந்த விமானத்தின் கூடுதல் படங்களை தொடர்ந்து காணலாம்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

சகல வசதிகளுடன் போயிங் ஜம்போ விமானம்

கஸ்டமைஸ் செய்யப்பட்ட போயிங் 747- 8 ஜம்போஜெட் தனிநபர் பயன்பாட்டு விமானத்தின் படங்கள்.

உள்பக்க வடிவமைப்பு

உள்பக்க வடிவமைப்பு

உள்பக்க வடிவமைப்பு மாதிரியை காட்டும் விளக்கப்படம்.

முற்றும்.

Most Read Articles
English summary
For those billionaires fed up of travelling with the great unwashed, or who just fancy a little more room than first class has to offer, there’s this $600 million (£389 million) private jumbo jet.That’s not just any old private jet – it’s a private JUMBO jet – a Boeing 747 to be exact. The aircraft, which usually carries around 450 passengers, has been converted into a personal plaything for one anonymous jet setter.
Story first published: Friday, February 20, 2015, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X