இந்த முறை 1,200 கார்களை ஊழியர்களுக்கு பரிசளித்த சூரத் வைர வியாபாரி!

இந்த முறை 1,200 கார்களை ஊழியர்களுக்கு பரிசளித்த சூரத் வைர வியாபாரி!

Written By:

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை பரிசாக ஊழியர்களுக்கு கார் மற்றும் வீடுகளை பரிசாக தந்து நாட்டையே வியக்க வைத்து வருகிறார் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜிபாய் தோலக்யா. பணியில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த விலை உயர்ந்த பரிசுகளை அவர் அளித்து வருகிறார்.

இந்த நிலையில், புத்தாண்டு பரிசாக இந்த முறை 1,200 கார்களை பரிசளித்து மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார் தோலக்யா. ஏற்கனவே செவர்லே பீட், ஃபியட் புன்ட்டோ, மாருதி ஆல்ட்டோ உள்ளிட்ட கார்களை பரிசளித்த தோலக்யா இந்த முறைய டட்சன் ரெடிகோ கார்களை பரிசாக தந்து அசத்தி உள்ளார்.

இந்த முறையும் பெரிய மைதானத்தில் அனைத்து கார்களையும் ஒரே சேர கொண்டு வந்து நிறுத்தி, தனது கைகளால் கார் சாவியை ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்துள்ளார் தோலக்யா. அந்த இடம் கார் தயாரிப்பு நிறுவனத்தின் யார்டு போல காட்சி தந்தது.

தனது ஊழியர்களுக்கு இந்தியாவின் மூவர்ண கொடி வண்ணம் தீட்டப்பட்ட டட்சன் ரெடிகோ கார்களை அவர் பரிசாக தந்துள்ளார். இதுவரை பரிசு பெறாத ஊழியர்களில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை தேர்வு செய்து இந்த பரிசுகளை வழங்கி உள்ளார்.

பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து கார்களுக்குமான டவுன்பேமன்ட்டை தோலக்யாவின் வைர நிறுவனம் கட்டியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான மாதத் தவணையும் தோலக்யா நிறுவனம் கட்டும். ஊழியர் நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் மட்டும் மாதத் தவணை கட்டுவது நிறுத்தப்படும்.

தற்போது தோலக்யா வழங்கியிருக்கும் டட்சன் ரெடிகோ கார்கள் ரெனோ க்விட் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் மாடல். வடிவமைப்பில் முற்றிலும் புதிய ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார்.

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 800சிசி எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜ் தரும் என்பதும் இதன் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. குறைவான விலையில் ஸ்டைலான மாடலாக தற்போது வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த காரையே தேர்ந்தெடுத்து தனது ஊழியர்களுக்கு வழங்கி உள்ளார் தோலக்யா. பணியாளர்களால் செல்லமாக ககா என்று குறிப்பிடப்படுகிறார் தோலக்யா. அவரது ஹரே கிருஷ்ணா வைர நிறுவனம் சுமார் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து வருகிறது. ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்கள்!

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Gujarat diamond merchant gifts 1,200 more cars to his employees!
Please Wait while comments are loading...

Latest Photos