215 நாடுகள், 26 ஆண்டுகள்... மூச்சு முட்ட வைக்கும் ஓர் உலக சுற்றுப்பயணம்!

By Saravana

ஓரிரு நாள் பயணங்கட்டுவதற்கே இங்கே அலுப்பு, சலுப்புகள் ஆயிரம் ஆயிரம். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த குந்தர் ஹால்டர்ஃப் என்பவர் தனது வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை பயணங்களில் கழித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆம், உலகின் அனைத்து கண்டங்களையும் மிக சாவகாசமாக சுற்றிவிட்டு நாடு திரும்பியுள்ளார் குந்தர் ஹால்டர்ஃப்.

உலகின் 215 நாடுகளை 26 ஆண்டுகளாக சுற்றிய குந்தர் ஹால்டர்ஃப் தனது நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வாரம் பெர்லின் திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் பெரும்பகுதியை தனது மனைவி கிறிஸ்டினும் உடன் இருந்ததாக குறிப்பிடுகிறார்.


வேலையை விட்ட ஹால்டர்ப்

வேலையை விட்ட ஹால்டர்ப்

லூப்தான்ஸா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹால்டர்ப் தனது உலகம் சுற்றும் பயணத்திற்காக தனது வேலையை 1988ல் விட்டுவிட்டார். பின்னர், தனது 4வது மனைவி கிறிஸ்டியனுடன் 1989ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கினார்.

ஒரே வாகனம்

ஒரே வாகனம்

பென்ஸ் ஜி வேகன் எஸ்யூவியில்தான் உலகம் முழுவதும் பயணித்தார். கடந்த 26 ஆண்டுகளாக இந்த எஸ்யூவிதான் அவரின் நடமாடும் இல்லமாக இருந்தது. எனது குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினர் என்று பென்ஸ் ஜி வேகன் எஸ்யூவியை புகழ்கிறார் ஹால்டர்ப்.

 சஹாரா பாலைவனம்

சஹாரா பாலைவனம்

தனது பயணத்தின் முதலாவது இலக்காக சஹாரா பாலைவனத்திற்கு சென்றார். அதைத்தொடர்ந்து, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா சென்றார். இதற்காக, ஹால்டர்ப் மற்றும் அவரது மனைவியும் ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்திருந்தனர்.

சொந்த செலவு

சொந்த செலவு

இந்த பயணம் முழுமைக்கும் தனது சொந்த பணத்தை செலவு செய்தே ஹால்டர்ப் சென்றார். ஸ்பான்சர்கள் வழங்க பலரும் முன்வந்த போதிலும், ஸ்பான்சர்கள் இலவசமாக கிடைக்காது என்பதால் தவிர்த்தேன் என்று பொன்மொழியை உதிர்க்கிறார். ஆனால், வடகொரியாவில் சிலர் உதவியை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்.

 மனைவி மரணம்

மனைவி மரணம்

கடந்த 2003ம் ஆண்டு ஹால்டர்ப்பின் மனைவி கிறிஸ்டியனுக்கு முகத்தில் புற்றுக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைகள் அளித்த போதிலும் 2010ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். தனது மனைவி குறித்து ஹால்டர்ப் குறிப்பிடுகையில்," பயணத்தை தொடருங்கள். ஆனால், என்னை மறந்துவிடாதீர்கள் என்று கூறினார். இதையடுத்து, ஜி வேகனின் கண்ணாடியில் கிறிஸ்டியனின் படத்தை மாட்டி வைத்துள்ளார்.

திருமணம்

திருமணம்

ஹால்ஸ்டர்ப்பும் கிறிஸ்டியனுடன் கணவன் மனைவி போல் வாழ்ந்தாலும், கிறிஸ்டியன் இறப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்.

துணைக்கு வந்த மகன்

துணைக்கு வந்த மகன்

கிறிஸ்டியனின் 30 வயது மகனான மார்ட்டினை 5 ஆண்டுகளுக்கு முன் ஹால்டர்ப் முறைப்படி தத்து எடுத்துக் கொண்டார். இந்த நிலையில், கிறிஸ்டியனின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பின்னர் இரு வாரங்கள் கழித்து தனது சுற்றுப் பயணத்திற்கு துணையாக மார்ட்டின் இணைந்துகொண்டார். இலங்கை, சீனா மற்றும் வடகொரியா நாடுகளில் இருவரும் இணைந்து சுற்றுப் பயணம் செய்துள்ளனர்.

 மற்றொருவர்

மற்றொருவர்

2012ம் ஆண்டிலிருந்து தனியாக சுற்றுப் பயணம் செய்த ஹால்டர்புடன் ஜெர்மனியை சேர்ந்த எல்க் ட்ரூவெக்(45) என்ற பெண்மணி இணைந்துகொண்டார். இருவரும் ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்தனர். கடந்த ஆண்டு எல்க் ட்ரூவெக் நாடு திரும்பிவிட்டார். இந்த நிலையில், தனது 26 ஆண்டு கால உலக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார் குந்தர் ஹால்டர்ப்.

 பயண தூரம்

பயண தூரம்

மொத்தம் 8.84 லட்சம் கிமீ தூரம் தனது பென்ஸ் ஜி வேகனில் குந்தர் ஹால்டர்ஃப் பயணம் செய்துள்ளார். இதுவே வாகனத்தில் சென்ற உலகின் மிக நீண்ட சுற்றுப் பயணமாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

Most Read Articles
English summary
76 year old Gunther Holtorf from Germany decided to leave everything behind 26 years ago. He quit his job at Lufthansa and hit the road in a journey that took him around the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X