ஹெலிகாப்டரின் எஞ்சினியர் ஹெலிகாப்டர் றெக்கையில் சிக்கி பலி..!! தீவிர விசாரணையில் காவல்துறை...

பக்தர்களுடன் பயணித்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரின் பொறியாளர் கோரமாக மரணமடைந்தார்.

By Azhagar

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் புனித யாத்திரை மேற்கொண்டவர்களை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் உயிரழ்ந்தார்.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹரித்துவார், கேதர்நாத் போன்ற புனித இடங்களுக்கு இந்த காலகட்டங்களில் யாத்ரீகர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

இங்கு பல கோவில்கள் மலைமீதும் மற்றும் மலை முகடுகளில் உள்ளதால், பயணிகளின் வசதிக்காக சுற்றுலா துறை சார்பில், தனியார் நிறுவனங்களில் பங்களிப்பில் பல ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

பயணிகளை பத்திரமாக கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களை இயக்கும் பணிகளில் பல இராணுவ வீரர்களுடன், தனியார் நிறுவன பணியார்களும் விமானிகளாக இங்கு இருந்து வருகின்றனர்.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

இந்நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு 5 யாத்ரீகர்கள், இரண்டு பைலட்டுகள் மற்றும் ஹெலிகாப்டருக்கான பொறியாளர் ஒருவர் ஆகியோரை சுமந்து கொண்டு, தனியார் நிறுவனத்தின் அகஸ்டா 119 என்ற ஹெலிகாப்டர் வானில் பறக்க தொடங்கியது.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

பத்ரிநாத்திலிருந்து கேதர்நாத்திற்கு செல்ல மேலெழும்பிய இந்த ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய சிறுது நேரத்திலேயே நிலை தடுமாறி, கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் பொறியாளரான விக்ரம் லம்பா என்பவர் ஹெலிகாப்டரின் றெக்கையில் சிக்கி பலியானார்.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

பைலட்டுகள் இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டரில் இருந்த மற்ற பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

வானில் குறைந்த காற்றழுத்தம் இருந்ததன் காரணமாக, மேலெழும்பிய ஹெலிகாப்டரால் சமநிலையை அடையமுடியவில்லை.

இதன் காரணமாக மேலும் பறப்பதில் அகஸ்டா 119 ஹெலிகாப்டருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை விமானியாலும் சமாளிக்க முடியவில்லை.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

திடீரென்று ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே ரோலார் பிளேடுகள் சுற்றுவதில் தாமதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழுந்துள்ளதாக உத்தரகாண்டில் சமோளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரிபாதி பட் தெரிவித்துள்ளார்.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

விபத்தில் கீழே விழுந்த அகஸ்டா 119 ஹெலிகாப்டர் மும்பையை தலமையிடமாக கொண்ட 'கெர்ஸ்டெல் ஏவிடேஷன்' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்ததுள்ளது.

றெக்கையில் சிக்கி மரணமடைந்த ஹெலிகாப்டரின் பொறியாளர்..!!

இந்த விபத்து ஏற்பட, வானிலை மாற்றத்தை தவிர ஹெலிகாப்டரின் உற்பத்தி மற்றும் கட்டமைப்பில் வேறு எதுவும் கோளாறு உள்ளதா என உத்தரகாண்டை சேர்ந்த காவல்துறை விசாரித்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helicopter accident in Badrinath kills one, pilots suffer injuries. Click for details...
Story first published: Saturday, June 10, 2017, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X