ஹெலிகாப்டர் உள்பட சகல வசதிகளுடன் ஓர் சொகுசு மோட்டார் இல்லம்!

சொந்த ஹெலிகாப்டர் உள்பட சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டார் இல்லம் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

படுக்கை வசதி, குளியல் அறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் கட்டமைக்கப்படும் மோட்டார் இல்லங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் விதவிதமான சொகுசு அம்சங்களுடன் கட்டமைத்து கொடுக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அசத்தும் வசதிகளுடன் புதிய மோட்டார் இல்லம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த பிரம்மாண்ட மோட்டார் இல்லத்தின் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஃப்யூரியான் என்ற நிறுவனம் இந்த உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம் என்ற பெயரில் இந்த மோட்டார் இல்லம் அழைக்கப்படுகிறது. பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா செல்ல விரும்பும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு இது மிகச் சிறப்பான வசதிகளை கொண்டதாக இருக்கிறது.

இந்த மோட்டார் இல்லம் 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சொகுசு அபார்மென்ட் வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகளை கொண்டுள்ளது.

இந்த மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் தரை இறங்கும் ஹெலிபேட் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட ராபின்சன் ஆர்22 ஹெலிகாப்டரும் இந்த மோட்டார் இல்லத்திற்காக வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்தக் கொள்ளலாம்.

மோட்டார் இல்லத்தின் உள்பகுதி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. அத்துடன், ஓய்வாக அமர்வதற்கான பெரிய அளவிலான சோபா கம் பெட், 75 இன்ச் திரையுடன் கூடிய எல்இடி டிவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிவி மிக மோசமான வானிலையிலும் துல்லியமாக இருக்குமாம்.

டிவி.,க்கு அருகிலேயே குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கடுத்து, மைக்ரோஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் கொண்ட சமையல் செய்யும் இடமும் இருக்கிறது. எனவே, எங்கு சென்றாலும், உணவு, தங்குமிடத்தை பற்றிய கவலை இருக்காது.

இந்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் தொடுஉணர் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கொண்டதாக இருக்கிறது. வாகனத்தை இயக்குவது கூட மிக எளிதான காரியமாக இருக்கும். மேலும், அனைத்து வசதிகளையும் ஓட்டுனர் இருக்கை அருகேயுள்ள தொடுதிரை சாதனத்தின் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

வாகனத்தின் பின்புறத்தில் படுக்கையறை தனியாக தடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் தங்குவதற்கான மிக சொகுசான படுக்கை வசதியுடன் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.

மரத்தாலான மாடிப்படிகளில் மேற்புறம் சென்றால், அங்கும் ஏராளமான வசதிகள் உள்ளன. சுடுநீர் குளியல் வழங்குவதற்கான பெரிய நீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. அதன் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் இந்திய மதிப்பில் ரூ.17 கோடி விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை. தங்களது தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ளதாகவும் ஃப்யூரியான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hi-Tech Motor Home Comes With Its Own Helicopter.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK