உலகின் அதிக சம்பளம் பெறும் டாப் 10 ஃபார்முலா- 1 கார் பந்தய வீரர்கள்!!

By Saravana

உலகின் பணக்கார விளையாட்டான ஃபார்முலா- 1 கார் பந்தயங்களில் பங்கேற்பதை, கார் பந்தய வீரர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. பணம், புகழ் என இரண்டையும் தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களுக்கான பந்தய களமாக ஃபார்முலா-1 போன்ற மோட்டார் பந்தயங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், உயிரையும் துச்சமென மதித்து, தங்களது அணிக்கு பெருமை சேர்க்க போராடும் கார் பந்தய வீரர்களுக்காகவும், அணி நிர்வாகங்கள் மில்லியன் டாலர்களை கொட்டி கொடுக்கின்றன. இந்த ஆண்டில் அதிக சம்பளம் பெறும் டாப் 10 ஃபார்முலா பந்தய வீரர்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 12. வால்டெரி போட்டாஸ்

12. வால்டெரி போட்டாஸ்

இந்த ஆண்டின் அதிக சம்பளம் பெறும் ஃபார்முலா- 1 வீரர்களின் பட்டியலில் பலர் 4.36 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெறுகின்றனர். அதற்கடுத்த இடத்திலும், மில்லியன் டாலரிலும் சம்பளமாக பெறும் ஃபார்முலா-1 வீரர்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வால்டெரியையும் இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். பின்லாந்து நாட்டை சேர்ந்த இவர் வில்லியம்ஸ் அணிக்காக பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு வால்டெரிக்கு 2.18 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது.

11. பாஸ்டர் மல்டோனாடோ

11. பாஸ்டர் மல்டோனாடோ

இந்த பட்டியலில் 9வது இடத்தை மூவர் பங்கிட்டு கொண்டுள்ளனர். அதில், ஒருவர் வெனிசுலா நாட்டை சேர்ந்த பாஸ்டர் மல்டோனாடோ. கடந்த 2011ம் ஆண்டு வில்லியஸ் அணிக்காக ஃபார்முலா-1 ரேஸில் களம் புகுந்தார். தற்போது லோட்டஸ் அணிக்காக பங்கேற்று வருகிறார். இவருக்கு இந்த சீசனுக்காக பேசப்பட்டிருக்கும் சம்பளம் 4.36 மில்லியன் டாலர்கள்.

10. ரொமெயின் குரோஸ்ஜீன்

10. ரொமெயின் குரோஸ்ஜீன்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்தவர். 2009ம் ஆண்டு ரெனோ அணிக்காக ஃபார்முலா- 1 போட்டியில் களம் புகுந்தார். ஆனால், இவரை ரெனோ கழற்றி விட்டது. இதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டு மீண்டும் ஃபார்முலா -1 போட்டியில் களமிறங்கிய இவர், தற்போது லோட்டஸ் அணி சார்பில் பங்கேற்று வருகிறார். இவருக்கும் 4.36 மில்லியன் டாலர்கள் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

9. செர்ஜியோ பெரிஸ்

9. செர்ஜியோ பெரிஸ்

ஃபோர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் வீரர்தான் செர்ஜியோ பெரிஸ். மெக்சிகோ நாட்டை சேர்ந்த இவர் ஃபெராரி டிரைவர் அகடமியின் மூலமாக அடையாலம் காணப்பட்ட சிறந்த இளம் வீரர் என்ற பெருமைக்குரியவர். 2013ல் மெக்லாரன் அணிக்காக பங்கேற்று, தற்போது ஃபோர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு சீசனுக்காக 4.36 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது.

08. நிகோ ஹல்கென்பர்க்

08. நிகோ ஹல்கென்பர்க்

ஜெர்மனியை சேர்ந்த இவர் தற்போது ஃபோர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வருகிறார். 2015ம் ஆண்டு 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் முதல் முயற்சியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கும் 4.36 மில்லியன் டாலர்கள்தான் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது.

07. பிலிப் மாஸா

07. பிலிப் மாஸா

வில்லியம்ஸ்- மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்று வரும் பிலிப் மாஸா பிரேசில் நாட்டை சேர்ந்தவர். கோ கார்ட் ரேஸில் தொடர்ச்சியாக 8 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர். இந்த ஆண்டு இவருக்கும் 4.36 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது.

 06. ஜென்சன் பட்டன்

06. ஜென்சன் பட்டன்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஃபார்முலா-1 பந்தய வீரரான ஜென்சன் பட்டன் 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர். மெக்லான்- ஹோண்டா அணிக்காக பங்கேற்று வருகிறார். இவருக்கு 10.9 மில்லியன் டாலர்கள் சம்பளம் தர ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

05. நிகோ ரோஸ்பெர்க்

05. நிகோ ரோஸ்பெர்க்

இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் நிகோ ரோஸ்பெர்க் இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்துக்காக போராடி வரும் வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மெர்சிடிஸ் அணி சார்பில் பங்கேற்று வரும் இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். 6 வயதிலிருந்து கோ கார்ட் பந்தயங்களில் பங்கேற்று அசத்தி வரும் இவருக்கு இந்த ஆண்டு 14.7 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது.

04. கிமி ரெய்கோனன்

04. கிமி ரெய்கோனன்

இந்த ஆண்டு சாம்பியனுக்கான போட்டியில் 5வது இடத்தில் இருக்கும் இவர் ஃபெராரி அணிக்காக பங்கேற்று வருகிறார். பின்லாந்து நாட்டை சேர்ந்த இவர், ராலி ரேஸ் பந்தயங்களில் சாதனைகள் புரிந்தவர். இந்த ஆண்டு இவருக்கு 19.6 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

03. லூயிஸ் ஹாமில்டன்

03. லூயிஸ் ஹாமில்டன்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் இந்த ஆண்டுக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் நிகோ ரோஸ்பெர்க்கைவிட 17 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் இவர் 2007ல் ஃபார்முலா-1 போட்டியில் களமிறங்கினார். மொத்தம் பங்கேற்றிருக்கும் 157 போட்டிகளில் 79 முறை போடியம் ஏறிய பெருமைக்குரிய இவர் மெர்சிடிஸ் அணி சார்பில் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டுக்கான சம்பளமாக 27.3 மில்லியன் டாலர்கள் பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

02. செபாஸ்டியன் வெட்டல்

02. செபாஸ்டியன் வெட்டல்

இந்தியாவில் நடந்த மூன்று ஃபார்முலா- 1 பந்தயங்களிலும் ரெனோ அணி சார்பில் பங்கேற்று ஹாட்ரிக் அடித்து, அதிக இந்தியர்கள் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஃபெராரி அணிக்காக களமிறங்கியுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த இவருக்கு 30.5 மில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுத்து, தன் பக்கம் இழுத்ததுள்ளது.

01. ஃபெர்னான்டோ அலான்சோ

01. ஃபெர்னான்டோ அலான்சோ

உலகின் அதிக சம்பளம் பெறும் ஃபார்முலா-1 வீரர் ஃபெர்னான்டோ அலான்சோதான். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவர் சம்பளத்தில் முந்தியிருந்தாலும், போட்டி களத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறார். இரண்டு முறை ஃபார்முலா- 1 சாம்பியன் பட்டத்தை வென்ற இவருக்கு 38 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது.

Via- Automobilemag.com

Most Read Articles
English summary
Here's a look at the highest-paid drivers in Formula 1 for the 2015 season.
Story first published: Thursday, August 27, 2015, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X