நெடுஞ்சாலையில் கார் ஓட்டுவது எப்படி?... சித்து, ஜேம்ஸுடன் ஓர் பயணம்!

முப்பதை கடந்து கொண்டிருக்கும் சித்தார்த்தும், ஜேம்ஸும் கல்லூரி கால நண்பர்கள். கல்லூரி காலம் முடிந்த பின் இருவரும் தொழில், வேலை காரணமாக வெவ்வேறு திசையில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர். அதன் பிறகு இருவரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது.

சித்தார்த் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவரது நண்பர் ஜேம்ஸ் ஆஸ்திரேலியாவில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், மோட்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் சாகச விளையாட்டுகளிலும், பயணங்களின் மீதும் ஜேம்ஸுக்கு அதீத உண்டு.

இந்த நிலையில், இருவரும் தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்ளும் விதமாக சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி, ஆஸ்திரேலியாவில் இருந்து ஜேம்ஸ் பெங்களூர் வந்தார். இருவரும் தங்களது விடுமுறை கொண்டாட்டத்தை வெளியூரில் கொண்டாட முடிவு செய்தனர்.

கொண்டாட்ட திட்டம்

கொண்டாட்ட திட்டம்

எங்கே செல்வது என தங்களது விடுமுறை கொண்டாட்டத்திற்கான இடங்களை அலசி பார்த்து கடைசியாக பாண்டிச்சேரியை தேர்வு செய்தனர்.

படம்: Raj

கொஞ்சம் ஆக்சிலேட்டரை கொடு சித்து...

கொஞ்சம் ஆக்சிலேட்டரை கொடு சித்து...

காலை 7 மணிக்கு கிளம்புவதாக திட்டமிடப்பட்ட பயணம் ஜேம்ஸின் அசட்டையான தூக்கத்தினால் 2 மணி நேரம் தாமதமாகியது. ஒருவழியாக நகரச்சாலையிலிருந்து ஓசூர் நெடுஞ்சாலையை நெருங்கினர். காரை சித்தார்த் ஓட்ட தூக்க கலையாத முகத்துடன் சக பயணி இருக்கையில் ஜேம்ஸ் அமர்ந்திருந்தார். சர்வீஸ் சாலையிலிருந்து மிக மெதுவாக நெடுஞ்சாலையில் காரை இணைக்க சித்தார்த் முயன்று கொண்டிருந்தார். அதை பார்த்த ஜேம்ஸ், கொஞ்சம் வேகமாக சித்து, கொஞ்சமாவது ஆக்சிலேட்டரை கொடு என்று அன்பு கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்தார்.

ஏன் அவசரப்படுத்துகிறாய் என்று சித்து கேட்க," நெடுஞ்சாலையில் பிற வாகனங்களின் சராசரி வேகத்துடன் இயைந்து போவதுதான் பாதுகாப்பு. நெடுஞ்சாலையில் மிகவும் மெதுவாக சென்று இணைவது ஆபத்து. பின்னால் வரும் வாகனங்கள் மோதும் வாய்ப்பு இருப்பதுடன், தேவையில்லாமல் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக அமையும்," என்று ஜேம்ஸ் பதிலளிக்க சித்து விடவில்லை.

Picture credit: Wiki Commons

Vitor Pamplona

இது இந்தியாப்பா...

இது இந்தியாப்பா...

ஜேம்ஸ், இது ஆஸ்திரேலியா இல்லை, இது இந்தியா. நம்மூரில் கார் ஓட்டுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பது உனக்கு தெரியாதா ஜேம்ஸ். அதையெல்லாம், மறந்துவிட்டாயா ஜேம்ஸ். ஆஸ்திரேலியாவிலும் அதிகம் கார் பயன்படுத்துகிறேன். இந்தியாவிலும் அதிகமாக கார் ஓட்டிய அனுபவம் எனக்கு உண்டு சித்து. அது உனக்கு தெரியாதா என்ன? என்று ஜேம்ஸ் கூற ஒரு சில நிமிடங்கள் மவுனத்துடன் பயணம் தொடர்கிறது.

Picture credit: Flickr

Bryangeek

ஒரு காஃபி பிரேக்...

ஒரு காஃபி பிரேக்...

பெங்களூரிலிருந்து 70 கிமீ தூரத்தை தாண்டியிருந்தனர். ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி பெட்ரோல் நிரப்பிக் கொண்டதுடன், ஒரு காஃபியும் குடித்து விட்டு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த முறை காரை ஜேம்ஸ் கையிலெடுத்தார். இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு, ரியர் வியூ கண்ணாடியையும் சரி செய்து கொண்டு காரை கிளப்பினார். சர்வீஸ் சாலையிலிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் நெடுஞ்சாலையை பிடித்த ஜேம்ஸ் காரை 80 கிமீ வேகத்தில் செலுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு டிரக் இடது புற தடத்தில் சென்று கொண்டிருந்தது.

Picture credit: Wiki Commons

Harmishhk

இந்த பழக்கம் உண்டா?

இந்த பழக்கம் உண்டா?

டிரக், பஸ் செல்லும்போது நீ பாஸ் லைட்டை போட்டு எச்சரிக்கை செய்வாயா? என்று ஜேம்ஸ் சித்துவிடன் வினவினார். இல்லை, அவ்வாறு நான் செய்வதில்லை என்று சித்து பதிலளித்தார். பஸ், டிரக் போன்ற கனரக வாகனங்களில் எஞ்சின் இரைச்சல் அதிகம் கேட்கும். இதனால், சில சமயங்களில் அருகில் வரும் வாகனங்களை அவர்கள் கண்டறிவது சிரமம். மேலும், ஹாரன் அடித்தால் கூட அவர்களுக்கு சில சமயங்களில் தெரியாது. எனவே, பாஸ் லைட்டை போட்டுக் காட்டினால் அவர்கள் ரியர் வியூ கண்ணாடியில் எளிதாக கண்டு கொண்டு வழி விடுவர் என்று ஜேம்ஸ் கூற கரெக்ட், என்று கூறி ஆமோதித்தார் சித்து.

Picture credit: Flickr

Falling outside the normal moral

நல்ல வேளை...

நல்ல வேளை...

பேச்சுவாக்கில் வழியில் இருந்த வேகத்தடை தெரியாமல் ஜேம்ஸ் காரை ஓட்ட, வேகத்தடையில் இடித்து ஏதோ ஒரு சப்தம் கேட்டது. உடனே, காரை சாலையோரம் நிறுத்தி இருவரும் இறங்கி பார்த்தனர். பம்பரில் சிறிய சிராய்ப்பு தவிர, நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை. கார் 80 கிமீ வேகத்தில் வந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரிய சேதம் ஏற்படவில்லை. சித்துவிடும் ஜேம்ஸ் ஸாரி கேட்க, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று சித்து கூற, அங்கு சிறிய சிரிப்பலைகளுடன் பயணம் தொடர்ந்தது.

Picture credit: Wiki Commons

Woodennature

இது அவசியமா ஜேம்ஸ்...

இது அவசியமா ஜேம்ஸ்...

ஒவ்வொரு முறையும் ஓவர்டேக் செய்யும்போது ஜேம்ஸ் கியரை குறைப்பதை கண்ட சித்து, இதுபோன்று செய்வது தேவையா என்று அடுத்து ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டார். இது தவறு, மைலேஜ் குறையும் என்றும் தனது கேள்விக்கு வலு சேர்த்தார். அதற்கு நம்ம கூல் ஜேம்ஸ், நெடுஞ்சாலையில் செல்லும்போது அதிக மைலேஜை எப்படியும் பெறலாம். ஆனால், அதற்கு முன்னதாக நமது பாதுகாப்பு முக்கியம். கியரை குறைத்து ஓவர்டேக் செய்யும்போது மிக விரைவாகவும், எந்தவித பிரச்னையும் இல்லாமலும் செல்ல முடியும். மேலும், நெடுஞ்சாலையின் அதிவேக தடத்தில் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதையும் தவிர்க்கலாம். முன்னால் செல்லும் கரொல்லா காரை பார். அந்த கார் டிரைவர் கியரை குறைக்காததால், நாம் அனைவரும் அவரை வால் பிடித்து சென்று கொண்டிருக்கிறோம். இதனால், அனைவருக்கும் இடைஞ்சலாக இருக்கும். நெடுஞ்சாலையில் வலது ஓரத்தில் இருக்கும் தடம் அதிவிரைவாக செல்லும் வாகனங்களுக்கானது. எனவே, அதில் செல்லும்போது மிக கவனமாகவும், விரைவாகவும் செல்வது அவசியம் என்று ஒரு பெரிய விளக்கத்தை கொடுக்க சித்து இப்போது கப்சிப்.

Picture credit: Flickr

M J M

கைப்பக்குவம் சூப்பரு...

கைப்பக்குவம் சூப்பரு...

இப்போது ஜேம்ஸின் டிரைவிங் ஆளுமைகளை சித்தார்த் உணர்ந்து கொண்டிருந்தார். டிரைவிங்கில் பல புதிய விஷயங்களையும் கற்றுக்கொண்டிருந்தார். சராசரியாக 100 கிமீ வேகத்தில் கார் சென்றபோதும், பிரேக் பிடிப்பதை கூட உணராத அளவுக்கு மிக பக்குவமான டிரைவிங். பிற வாகனங்களைவிட குறிப்பிட்ட இடைவெளியிலேயே காரை இயக்கியதையும் பார்த்து இப்போது பல புதிய விஷயங்களை சித்து உணர்ந்திருந்தார்.

Picture credit: Flickr

Philozopher

 பிரியாணி பிரமாதம்...

பிரியாணி பிரமாதம்...

செங்கத்தை நெருங்கியிருந்தனர். வயிறு பசி கிள்ளுதப்பா என ஜேம்ஸ் கூற, அங்கிருக்கும் ஒரு பிரபல ஓட்டலின் பிரியாணி சுவையை கூறி பசியை அகோரத்தை கிளப்பினார் சித்து. அடுத்த 10 நிமிடங்களில் அந்த ஓட்டலை அடைந்தனர். சாலை ஓரமாக காரின் வேகத்தை மெதுவாக குறைத்து நிறுத்திவிட்டு, ஹசார்டு லைட்டுகளை ஒளிரச் செய்துவிட்டு டிரைவர் இருக்கையைவிட்டு அகன்றார் ஜேம்ஸ். பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் காரில் பிரியாணி வாசம் குறையாமல் ஏறி கிளம்பினர்.

Picture credit: Flickr

V i p e z

எப்போதும் கூல்...

எப்போதும் கூல்...

அடுத்த 100 கிமீ தூரத்துக்கான பயணம் கொஞ்சம் சவாலானதாக இருந்தது. ஓவர்டேக் செய்வது மிக கடினமாக இருந்ததால், 3 மணி நேரம் பிடித்தது. ஆனால், ஜேம்ஸ் எந்தவொரு சலனமும் இல்லாமல் பாட்டு பாடியபடியே மிக சாவகாசமாக காரை ஓட்டினார். ஹாரன் கூட அதிகமாக தொடவில்லை. இது சித்துவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், கையோடு கேள்வியையும் முன் வைத்தார். இதுபோன்ற சமயங்களில் ஹாரன் அடிப்பதில் எந்த அர்த்தமுமில்லை. ஹாரன் அடித்தாலும் அந்த வாகனங்களால் வழிவிடுவது சிரமம் என்பதோடு, பிற வாகன ஓட்டிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று ஜேம்ஸ் சொன்னதை கேட்டு ஓஹோ என்று தலையாட்டினார் சித்து.

Picture credit: Flickr

Snikrap

 ஷிஃப்ட் முடித்த சூரியன்

ஷிஃப்ட் முடித்த சூரியன்

ஷிஃப்ட் முடிந்த பணியாளன் போல் சூரியன் தன் கதிர்களை சுருக்கிக் கொண்டு கிளம்பியது. இன்னும் ஒரு மணி நேர பயணத்தில் பாண்டிச்சேரியை அடைந்துவிடலாம். ஓரளவு வெளிச்சம் இருந்தபோதே ஜேம்ஸ் காரின் பார்க்கிங் லைட்டுகளையும், டெயில் லைட்டுகளையும் ஆன் செய்துவிட்டார். இன்னும் கொஞ்சம் இருட்டியவுடன் லைட்டை ஆன் செய்யலாமே என்று சித்து கேட்க, நம் நாட்டில் வாகன டிரைவர்கள் செய்யும் பெரிய தவறுகளில் ஒன்று இது. இருட்டும் வரை காத்திருந்து லைட்டுகளை ஒளிர விடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தை விட அந்திசந்தி நேரத்தில் பார்வை திறன் போதுமானதாக இருக்காது. எனவே, வெளிச்சம் குறையத் துவங்கியவுடன் பார்க்கிங் மற்றும் டெயில் லைட்டுகளை ஆன் செய்து விடுவது பாதுகாப்பானது என்று கூறினார். அடுத்த சிறிது நேரத்தில் எதிரில் வரும் வாகனங்கள் ஹை பீம் லைட்டை ஒளிரவிட்டுக் கொண்டு பறந்தது. இருள் நேரத்தில் டிரைவிங் செய்யும்போது எதிரில் வரும் வாகன வெளிச்சத்தை முழுமையான பார்வையை செலுத்தால் இடது ஓரத்தை கவனித்து ஓட்டுவது சிறந்தது என்று போனஸ் பாயிண்ட் ஒன்றை சித்துவுக்கு ஜேம்ஸ் வழங்கினார். இதனால், கண்கூச்சத்தை தவிர்த்து பாதுகாப்பாக செல்லலாம் என்று ஜேம்ஸ் கூறியதை கேட்டு தலையாட்டினார் சித்து.

Picture credit: Flickr

MC =)

அந்த பழக்கம் இல்லையே...

அந்த பழக்கம் இல்லையே...

ஒருவழியாக பாண்டிச்சேரியை அடைந்தனர். உள்ளூர் வாசிகளிடம் வழியை கேட்டுக் கொண்டே தங்க திட்டமிட்டிருந்த ஓட்டலுக்கு சென்றடைந்தனர். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாண்டிச்சேரியின் அழகிய தெருக்களில் கொஞ்சம் காலாற நடந்தனர். பேச்சுவாக்கில் ஜேம்ஸ் டிரைவிங்கை சித்து சிலாகித்தார். அதனை கேட்ட ஜேம்ஸ், ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கும், சாதாரண சாலையில் ஓட்டுவதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. எனவே, பொது சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது அனைவரின் பாதுகாப்பையும் மனதில் நிறுத்தி பயணிக்க வேண்டும் என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டே, அருகிலிருந்து மதுபான சோலைகளுக்குள் புகுந்தனர். அப்புறம்...

Picture credit: Flickr

Shashi.kallada

ஜேம்ஸை விடுவோமா என்ன?

ஜேம்ஸை விடுவோமா என்ன?

நமக்கு 'அந்த' பழக்கமில்லாததால், உள்ளே செல்லவில்லை. அங்கே சென்றிருந்தால் கொஞ்சம் கூடுதல் டிரைவிங் டிப்ஸ்களை பெற்றிருக்கலாமோ? பரவாயில்லை... அடுத்த பயணத்தில் பிடித்துவிடுவோம்...!!

Picture credit: Flickr

UrvishJ

Most Read Articles
English summary
Highway Driving Tips.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X