ஃபெராரியின் ஏளனத்தில் உருவான லம்போர்கினி... ஒரு சுவாரஸ்ய வரலாறு

இரண்டாம் உலகப் போருக்கு பின் ராணுவ தளவாடங்களிலிருந்து டிராக்டர் தயாரிக்கும் சிறிய நிறுவனமாக துவங்கப்பட்ட லம்போர்கினி இன்று உலகளாவிய அளவில் பிரபலமான சூப்பர் கார் பிராண்டாக முத்திரை பதித்துள்ளது.

சூப்பர் கார் தயாரிப்பை லம்போர்கினி நிறுவனம் துவங்குவதற்கு காரணம் ஃபெராரிதான். ஆம், டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படிப்படியாக பொருளாதாரத்தில் வளர்ந்த ஃபெருஷியோ லம்போர்கினியிடம் சூப்பர் கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவ்வாறே ஃபெராரி நிறுவனத்தின் 250ஜிடி கார் ஒன்றையும் வைத்திருந்தார். அதில், அவ்வப்போது கிளட்ச் பிரச்னை இருந்து வந்ததால், என்ஸோ ஃபெராரியிடம் புகார் செய்தார். ஆனால், என்ஸோ ஃபெராரி, அது கார் பிரச்னை இல்லை, ஓட்டுபவரின் பிரச்னை என்று ஏளனமாக கூறினார்.

இந்த அவமானத்தை துடைத்துக் கொள்ளவும், ஃபெராரியை விட சிறந்த காரை உருவாக்கவும் முனைப்புடன் களமிறங்கிய ஃபெருஷியோ லம்போர்கினி, ஒரே ஆண்டில் புதிய சூப்பர் காரை ஃபெராரிக்கு போட்டியாக தயாரித்து அறிமுகம் செய்தார். 1963ம் ஆண்டு சான்ட் அகட்டாவில் உருவான லம்போர்கினி நிறுவனம் முதலாவதாக 350ஜிடிவி ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்தது.

லம்போர்கினி பிராண்டு கார்களின் வலிமையை உணர்த்துவதற்காக காளையை சின்னமாக அறிவித்தது. மேலும், பல சூப்பர் கார்களை காளையின் பெயர்களிலேயே லம்போர்கினி அறிமுகம் செய்து வருகிறது. 1973ம் ஆண்டு பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டால் ஸ்போர்ட்ஸ் கார்களின் விற்பனை சரிந்தது.

இதையடுத்து, லம்போர்கினி கார் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் ஃபெருஷியோ விற்றுவிட்டார். பல நிறுவனங்களின் கைகள் மாறி 1990ம் ஆண்டு முதல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வசம் இருந்து வருகிறது. லம்போர்கினியின் கூடுதல் சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் தொடர்ந்து காணலாம்.

எத்தனை மாடல்கள்

எத்தனை மாடல்கள்

1993ம் ஆண்டு தனது 76ம் வயதில் ஃபெருஷியோ லம்போர்கினி மறைந்தார். லம்போர்கினியின் மொத்த பங்குகளையும் விற்றபோதும், அவரது பெயரிலேயே இன்றளவும் பெயர் மாற்றம் இல்லாமல் வழங்கப்படுகிறது.

ஃபெராரியின் ஏளனத்தால் உருவாக்கப்பட்ட லம்போர்கினி பிராண்டில் உருவான கார் மாடல்களை ஸ்லைடரில் தொடர்ந்து காணலாம்.

 லம்போர்கினி மியூரா

லம்போர்கினி மியூரா

1966 முதல் 1973 வரை லம்போர்கினி தயாரித்த கார் மாடல். அப்போது இது உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை கொண்டிருந்தது. இது இரண்டு இருக்கை கொண்ட உயர்ரக ஃபெர்ஃபார்மென்ஸ் கார்களுக்கு முன்னோடியாக அமைந்தது. 1966ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 ஆண்டு கால தயாரிப்பில் மொத்தம் 740 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

லம்போர்கினி எஸ்பாடா

லம்போர்கினி எஸ்பாடா

1967ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இது. 1,217 கார்கள் விற்பனை செய்ப்பட்டன. போர்த்துகீசிய மொழியில் எஸ்பாடா என்றால் வாள் என்று பொருள்படுகிறது. காளைகளை அடக்கும் வீரர்கள் வைத்திருக்கும் வாள் என்ற அர்த்தத்தில் இந்த பெயரை வைத்தனராம்.

 லம்போர்கினி உராகோ

லம்போர்கினி உராகோ

1960களில் காம்பெக்ட் சூப்பர் காரை உருவாக்க வேண்டும் எத்தனித்த லம்போர்கினியின் கனவில் உருவானது. ஃபெராரி டினோ 246ஜிடி மற்றும் போர்ஷே 911 மாடல்களுக்கு போட்டியானது. இது 2+2 இருக்கை அமைப்பு கொண்டது. ஆனால், இது லம்போர்கினி எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை.

லம்போர்கினி கவுன்டாக்

லம்போர்கினி கவுன்டாக்

1980களில் பிரபலமான மாடலாக வலம் வந்தது இந்த கார். வெறும் 40 உயரத்துடன் சிசர் வகை கதவுகளுடன் பார்ப்போரையும், வாடிக்கையாளர்களையும் வசீகரித்தது. இந்த காரில் 455 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 1971ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 லம்போர்கினி ஜால்பா

லம்போர்கினி ஜால்பா

லம்போர்கினி ஜால்பா லம்போர்கினி சில்ஹவுட்டி மாடலை அடிப்படையாக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. லம்போர்கினிக்கு பெயர் வாங்கி கொடுத்த மாடல்களில் இதுவும் ஒன்று.

லம்போர்கினி எல்எம்002

லம்போர்கினி எல்எம்002

உரஸ் எஸ்யூவி கான்செப்ட்தான் லம்போர்கினியின் முதல் எஸ்யூவியாக குறிப்பிடுகிறோம். ஆனால், ராம்போ லாம்போ என்ற முதல் 4 வீல் டிரைவ் மாடலை உற்பத்தி செய்தது. எல்எம்002 எஸ்யூவி சீட்டா புரோட்டோடைப் அடிப்படையில் உருவானது. இது முதலில் ராணுவ பயன்பாட்டு வாகனமாக உற்பத்தி செய்யப்பட்டது. இதிலும் வி12 எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருந்தது.

Picture credit: Wiki Commons -

Detectandpreserve

லம்போர்கினி டயாப்லோ

லம்போர்கினி டயாப்லோ

1990 முதல் 2001ம் ஆண்டு வரை லம்போர்கினி தயாரித்த கார் மாடல்தான் இது. மணிக்கு 200 மைல்களுக்கு அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய முதல் லம்போர்கினி மாடலும் இதுவே. டயாப்லோ என்றால் ஸ்பானிய மொழியில் பேய் என்று அர்த்தமாம். மார்செல்லோ காந்தினி என்ற லம்போர்கினியின் ஆஸ்தான டிசைனர் உருவாக்கிய மாடலில் இதுவும் ஒன்று.

 லம்போர்கினி மூர்சிலாகோ

லம்போர்கினி மூர்சிலாகோ

இதுதான் லம்போர்கினி நிறுவனத்தின் புதிய டிசைன் தாத்பரியத்தில் உருவான முதல் கார். மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் வந்த பிறகு உருவான முதல் காரும் கூட.

 லம்போர்கினி கல்லார்டோ

லம்போர்கினி கல்லார்டோ

லம்போர்கினியிம் மிக வெற்றிகரமான மாடல். மொத்தம் 14,022 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 5.0 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2003ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்பைடர் மாடல் 2006ல் வெளியிடப்பட்டது.

லம்போ அவென்டேடார்

லம்போ அவென்டேடார்

கடந்த 2011ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. மூர்சிலாகாவுக்கு மாற்றாக வெளிவந்தது. இந்த காரில் 690 பிஎச்பி ஆற்றல் கொண்ட 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளி்ல எட்டிவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

சவால்

சவால்

ஏளனத்தை சவாலாக எதிர்கொண்டு ஃபெருஷியோ லம்போர்கினி உருவாக்கிய சூப்பர் கார் பிராண்டு லம்போர்கினி. அவர் மறைந்தாலும் அவரது பெயரை உலகம் முழுக்க பரைசாற்றி வருகிறது. ஏளனத்தையும் தோல்வியையும் கண்டு துவளாமல் வாழ்க்கை எதிர்கொள்வதற்கு ஃபெருஷியோ லம்போர்கினியும் ஒருவர் என்பதை அவரது பிறந்த தினத்தில் நினைவுகூர்வோம்.

Most Read Articles
English summary
Ferrucio Lamborghini, the famous Italian industrialist was born on this 28th day of April, and would have been 98 today. Post-World War II, he founded a little company that made tractors from surplus military vehicles, and a little later moved into manufacturing air-conditioning and heating systems. These businesses grew extremely successful, making Lamborghini an extremely wealthy man.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X