அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கால் பந்தாடி அசத்திய ஹோண்டா ரோபோ!

கடந்த வாரம் ஜப்பானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது, டோக்கியோவில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்துக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு சென்ற அவரை ஹோண்டா நிறுவனத்தின் எந்திர மனிதனான அஸிமோ மிகவும் கவர்ந்தது.

தனது திறன்களை ஒபாமாவுக்கு நிகழ்த்தி காட்டி அவரை அசத்தியது. உச்சமாக, ஒபாமாவுடன் கால் பந்தை உதைத்து விளையாடி பரவசப்படுத்தியது. வாகன தயாரிப்பில் மட்டுமின்றி, எந்திர மனிதன் தயாரிப்பிலும் ஹோண்டா மிக முன்னேறிய நிலையை எட்டியுள்ளது. மனிதர்களுக்கு பல் வகையிலும் உதவும் நோக்கத்தோடு, ஹோண்டா உருவாக்கி வரும் இந்த அஸிமோ ரோபோ பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

 அஸிமோ பெயர்

அஸிமோ பெயர்

Advanced Step in Innovative Mobility(ASIMO) என்பதன் ஆங்கில சுருக்கமே அஸிமோ. இது உலகின் மிக நவீன எந்திர மனிதனாக குறிப்பிடப்படுகிறது. இது ஓடுவது மட்டுமின்றி, மாடிப்படிகளில் ஏறவும், பொருட்களை அடையாளம் கண்டுணரவும், முகத்தை வைத்து அடையாளம் காணும் திறன்களை கொண்டதாக ஹோண்டா தெரிவிக்கிறது

 கேமரா கண்கள்

கேமரா கண்கள்

இதன் கேமரா கண்கள் நிலையாக இருக்கும் பொருட்களை தவிர்த்து, நகரும் பொருட்களையும் கண்டுணர்ந்து கொண்டு அதற்கு தக்கபடி செயல்படும்.

தற்போதைய ரோபோ

தற்போதைய ரோபோ

1986ம் ஆண்டில் எந்திர மனித தயாரிப்பில் ஹோண்டா இறங்கியது. இதுவரை 11 ரோபோக்களை தயாரித்துள்ளது. தற்போதைய அஸிமோ 20 ஆண்டு கால தயாரிப்பு நிலைகளை கடந்துள்ளது. இது 4 அடி 3 இஞ்ச் உயரம் கொண்டது. 48 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹோண்டா தயாரித்த ரோபோக்கள் 6 அடி 2 இஞ்ச் உயரமும், 175 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தற்போதைய அஸிமோ மாடல் ரோபோ 2000வது ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005ம் ஆண்டில் மற்றொரு அஸிமோ ரோபோ வெளியிடப்பட்டது.

ஓடும் வேகம்

ஓடும் வேகம்

மணிக்கு 8.8 கிமீ வேகத்தில் ஹோண்டாவின் அஸிமோ ரோபோ ஓடும். ஓடும்போதே திசையை மாற்றிக் கொள்ளும். புதிய மாடல் அஸிமோ ரோபோ குதிக்கவும், ஒரு காலில் பேலன்ஸ் செய்யும் திறனும் கொண்டது.

5.புதிய மாடல்

5.புதிய மாடல்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சந்தித்த புதிய அஸிமோ ரோபோ சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. வட அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய அஸிமோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

அஸிமோ எந்திர மனிதன் பேட்டரியில் இயங்குகிறது. 40 நிமிடங்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்ய வேண்டும்.

4வது தலைமுறை மாடல்

4வது தலைமுறை மாடல்

புதிய 4வது தலைமுறை அஸிமோவை உருவாக்கும் பணிகளில் தற்போது ஹோண்டா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆர்கெஸ்ட்ரா நடத்திய அஸிமோ

ஆர்கெஸ்ட்ரா நடத்திய அஸிமோ

2008ம் ஆண்டு முந்தைய அஸிமோ ரோபோ மாடல் டெட்ராய்ட் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவை வழிநடத்தி அசத்தியது.

சிவப்பு கம்பள வரவேற்பு

சிவப்பு கம்பள வரவேற்பு

2005ம் ஆண்டில் கலிஃபோர்னியாவில் நடந்த ரோபோட்ஸ் அனிமேஷன் சினிமா துவக்க காட்சியில், அஸிமோவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

விற்பனை?!

விற்பனை?!

தற்போது அஸிமோ விற்பனைக்கு கிடைக்காது என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
ASIMO later entertained the United States of America President by showing him some of the skills he has learnt over the years. ASIMO showcased his special moves which, included running, jumping and kicking a ball too.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X