வெற்றிகரமாக பறந்தது ஹோண்டாவின் முதல் விமானம்... ஆர்டர்கள் குவிகிறது!

By Saravana

கார், மோட்டார்சைக்கிள் மற்றும் ரோபோட் தயாரிப்பு என ஆட்டோமொபைல் துறையின் பல்துறை வித்தகனாக திகழும் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக பறந்தது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரிலிருந்து டோக்கியோவிற்கு தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ஹோண்டாஜெட்.

மேலும், வெற்றிகரமாக முதல் பயணத்தை பதிவு செய்ததைத்தொடர்ந்து, இந்த விமானத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆர்டர்களும், விசாரணைகளும் வந்து கொண்டிருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. கோடீஸ்வரர்கள் ஆர்வமுடன் இந்த விமானத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில் அர்த்தமில்லாமலா இருக்கும். எனவே, இந்த விமானத்தின் முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டாஜெட்

ஹோண்டாஜெட்

கடந்த 30 ஆண்டு கால ஆராய்ச்சியின் பலனாக இந்த முதல் ஹோண்டா விமானம் உருவாகியுள்ளது. ஹோண்டாஜெட் என்று அழைக்கப்படும் இந்த விமானம் தவிர்த்து மேலும் 8 விமானங்களை ஹோண்டா தயாரித்து வருகிறது. ஹோண்டாஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 இடவசதி

இடவசதி

இதே வகை விமானங்களுடன் ஹோண்டாஜெட் விமானத்தை ஒப்பிடும்போது, 20 சதவீதம் கூடுதல் இடவசதியை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

எஞ்சின்

எஞ்சின்

இந்த விமானத்தின் எஞ்சின் இறக்கையின் மேல்புறத்தில் உள்ள தாங்கி மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இறக்கையின் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சிறந்த இடவசதி கொண்டதாக உருவாக்கியுள்ளனர். ஹோண்டாஜெட்டில் ஜிடி ஹோண்டா எச்எஃப்120 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த எஞ்சின் விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft த்ரஸ்ட்டை அளிக்கும்.

 அதிர்வுகள் குறைவு

அதிர்வுகள் குறைவு

இறக்கையின் மேலே உள்ள தாங்கியில் எஞ்சின் பொருத்தப்பட்டிருப்பதால், அதிர்வுகளும், கேபினுக்குள் சப்தமும் மிக குறைவாக இருக்கும். இதனால், சொகுசான, இனிமையான பயண அனுபவத்தை வழங்குமாம். இதுவும் கோடீஸ்வரர்களை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

அதிகபட்ச பறக்கும் வேகம்

அதிகபட்ச பறக்கும் வேகம்

ஹோண்டாஜெட்டில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 780 கிமீ வேகம் வரை விமானத்தை பறக்கச் செய்யும். மேலும், நிமிடத்திற்கு 3,990 அடி உயரம் வரை மேல் எழச்செய்யும். அதிகபட்சமாக 30,000 அடி உயரத்தில் பறக்கும்.

 எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள்கள், கார்கள் போன்றே இந்த விமானமும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியான மாடல்களுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

ஓடுபாதை அளவு

ஓடுபாதை அளவு

இந்த ஹோண்டாஜெட் விமானத்தை 4,000 அடி நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட ஓடுபாதையில் மேலே ஏற்றவும், 3,000 அடி நீளத்துக்கும் குறைவான ஓடுபாதையில் தரையிறக்கவும் முடியும்.

 கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

அலுமினியத்திற்கு பதிலாக கார்பன் ஃபைபரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பும் வெகு சிறப்பானதாகவும், சிறந்த ஏரோடைனமிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இலகு ரக வர்த்தக பிரிவில் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்த இந்த புதிய ஹோண்டாஜெட் விமானத்தில் 2 விமானிகள் உள்பட அதிகபட்சமாக 7 பேர் பயணிக்கலாம்.

வசதிகள்

வசதிகள்

பயணிகளே ஏசி, மியூசிக் சிஸ்டம், விளக்குகளை மொபைல்போன்கள் மூலம் விருப்பம்போல் கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

ஏவியோனிக்ஸ் சிஸ்டம்

ஏவியோனிக்ஸ் சிஸ்டம்

அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விமானி மூலம் அல்லது இரு விமானிகள் மூலமாகவும் இயக்க முடியும்.

 குவியும் ஆர்டர்

குவியும் ஆர்டர்

இதுவரை ஹோண்டாஜெட் விமானத்துக்கு 100 ஆர்டர்களை ஹோண்டா நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமானங்களை டெலிவிரி கொடுக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

விற்பனை நாடுகள்

விற்பனை நாடுகள்

இந்த விமானம் வெற்றிகரமாக பறந்ததையடுத்து, அமெரிக்காவில் இந்த விமானத்தை விற்பனை செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடனே வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை

விலை

ஒரு ஹோண்டாஜெட் விமானம் 4.5 மில்லியன் டாலர் விலை கொண்டது.

Most Read Articles
English summary
Honda Jet made its first maiden flight from Sendai to Tokyo on Thursday. The company is now in talks to obtain final approval from the US Federal Aviation Administration to start deliveries for customers in the US.
Story first published: Monday, April 27, 2015, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X