ஹோண்டாவின் முதல் விமானம் பற்றிய சிறப்புத் தகவல்கள்

கார், மோட்டார்சைக்கிள், ஏவிடி வாகனங்கள், எஞ்சின் மற்றும் எந்திர மனிதன் தயாரிப்பு என ஆட்டோமொபைல் துறையில் பல்துறை வித்தகனாக ஜப்பானை சேர்ந்த ஹோண்டா விளங்குகிறது.

இந்த நிலையில், வர்த்தக ரீதியிலான விமான தயாரிப்பையும் ஹோண்டா விரைவில் துவங்குகிறது. தனியார் பயன்பாட்டுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டாஜெட் என்ற அந்த விமானம் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது. உலகிலேயே அழகிய வடிவமைப்பு கொண்ட குட்டி விமானமாக ஹோண்டாஜெட் கூறப்படுகிறது.


பல சிறப்புகள்

பல சிறப்புகள்

பிற விமான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தனது தொழில்நுட்ப திறன்களை காட்டும் விதத்தில் ஹோண்டாஜெட்டில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ளன. படங்களுடன், தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

விமான தயாரிப்பு

விமான தயாரிப்பு

கடந்த 1980களிலிருந்து விமான தயாரிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஹோண்டா மேற்கொண்டு வருகிறது. தற்போது உற்பத்திக்கு செல்லும் முதல் விமானமான ஹோண்டாஜெட்டை வடிவமைக்கும் பணிகள் கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்டது.

 பிற மாடல்கள்

பிற மாடல்கள்

ஹோண்டாஜெட் விமானம் உற்பத்திக்கு செல்வதற்கான பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதுதவிர, மேலும் 8 ஹோண்டா விமானங்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் தற்போது உள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டாஜெட்டில் ஜிடி ஹோண்டா எச்எஃப்120 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த எஞ்சின் விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft த்ரஸ்ட்டை அளிக்கும்.

 இரட்டை எஞ்சின்

இரட்டை எஞ்சின்

ஹோண்டாஜெட்டில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 780 கிமீ வேகம் வரை விமானத்தை பறக்கச் செய்யும். மேலும், நிமிடத்திற்கு 3,990 அடி உயரம் வரை மேல் எழச்செய்யும். அதிகபட்சமாக 30,000 அடி உயரத்தில் பறக்கும்.

ஓடுபாதை அளவு

ஓடுபாதை அளவு

4,000 அடி நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட ஓடுபாதையில் மேலே ஏற்றவும், 3,000 அடி நீளத்துக்கும் குறைவான ஓடுபாதையில் தரையிறக்கவும் முடியும்.

பிரத்யேக அமைப்பு

பிரத்யேக அமைப்பு

இதன் இரண்டு எஞ்சின்களும் இறக்கையின் மேலே இருக்கும் சிறிய பீடத்தின் மீது பொருத்தப்பட்டிருக்கிறது. இது பிற விமானங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இதன் பயன்கள் என்ன என்பதை அடுத்து பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எஞ்சின்கள் இறக்கையின் மீதுள்ள பீடத்தில் பொருத்தப்பட்டிருப்பதன் மூலம், விமானத்திற்குள் அதிக இடவசதி கிடைக்கும். கேபினுக்குள் சப்தம் வெகுவாக குறைக்கப்படுகிறது. அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

பொருட்களுக்கான இடவசதி

பொருட்களுக்கான இடவசதி

எஞ்சின் அமைப்பு இறக்கையின் மேலே சென்றுவிட்டதால், இதன் மூக்குப் பகுதியிலும், பின்புறத்திலும் பொருட்கள் வைப்பதற்கான சிறப்பான இடவசதி கிடைக்கும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

இலகு ரக வர்த்தக ஜெட் விமானங்களில் குறைவான நைட்ரஜன் டை ஆக்சைடை வெளியிடும் தன்மை கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. இதன் ரகத்தில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

அலுமினியத்திற்கு பதிலாக கார்பன் ஃபைபரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பும் வெகு சிறப்பானதாகவும், சிறந்த ஏரோடைனமிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இலகு ரக வர்த்தக பிரிவில் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்த இந்த புதிய ஹோண்டாஜெட் விமானத்தில் 2 விமானிகள் உள்பட அதிகபட்சமாக 7 பேர் பயணிக்கலாம்.

 கேபினில் வசதிகள்

கேபினில் வசதிகள்

கேபினில் பயணிப்போர் ஏசி, மியூசிக் சிஸ்டம், விளக்குகளை மொபைல்போன்கள் மூலம் விருப்பம்போல் கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

 காக்பிட்

காக்பிட்

அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விமானி மூலம் அல்லது இரு விமானிகள் மூலமாகவும் இயக்க முடியும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

இலகு ரக வர்த்தக ஜெட் விமானங்களில் குறைவான நைட்ரஜன் டை ஆக்சைடை வெளியிடும் தன்மை கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. இதன் ரகத்தில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

முதல்முதலாக தயாரிக்கப்பட உள்ள ஹோண்டாஜெட் முன்புறத்தில் கரும்பச்சை, தங்க நிற கோடு கொண்டதாக இருக்கும். இதுதவிர, சில்வர், சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களிலும் கிடைக்கும்.

 சிறப்பான சேவை

சிறப்பான சேவை

விமானம் டெலிவிரி கொடுக்கப்படும் முதல் நாள் முதல் மிகச்சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம். இதற்காக, எங்களது உலகளாவிய டீலர்கள், சப்ளையர்களுடன் ஒருமித்து செயல்பட்டு வருகிறோம்," என்று ஹோண்டா விமான நிறுவனத்தின் தலைவர் மிச்சிமசா ஃபியூஜினோ தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Honda, the manufacturer of affordable and fuel efficient passenger cars, motorcycles, ATVs, lawn mowers, engines and humanoid robots, will soon also be called the manufacturer of jet aircrafts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X