வின்ஷீல்டை உடைத்துக்கொண்டு காரில் பாய்ந்து ஏசி காற்று வாங்கிய குதிரை: காரணம் இதுதான்..!!

Written By:

பலவிதமான கார் விபத்துகளை பற்றி படித்திருப்போம் அல்லது நேரில் பார்த்திருப்போம். ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விபத்தை பற்றி தான் இங்கே செய்தியாக படிக்க உள்ளீர்கள்.

ஒரு ஊரில் மனிதனும் ஒரு மிருகமும் சந்தித்துக்கொண்ட போது மிகப்பெரிய விபத்து நடக்க இருந்து தடுக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு காரணம் மனிதன் படைத்த ஒரு படைப்பு. ஆனால் அந்த விபத்து நடக்க காரணம் மனிதனால் ஏற்பட்ட இழப்பு.

குழுப்புகிறது அல்லவா. தெளிவு பெற விவரங்கள் பின்வருமாறு...

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் உள்ள சிறிய பகுதி ஹன்சன்பூர். இங்கு குதிரை வளர்க்கும் ஒரு சிலரில் மிக முக்கியமானவர் தங்கவாலா.

ஏற்கனவே ராஜஸ்தானில் வெயில் காட்டு காட்டு என்று காட்டும். தற்போதுள்ள உள்ள சூழ்நிலையில் ராஜஸ்தான் கனன்று கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் தான் ஆசையாக வளர்த்து வரும் குதிரை ஒன்றை தங்கவாலா, ஹன்சன்பூர் சாலை ஓரத்தில் கட்டிவைத்துள்ளார்.

அடிக்கிற வெயிலில், ஓங்குதான அந்த குதிரை, அங்கியிருந்த ஓட அதிக முறை முயற்சித்துள்ளது. ஆனால் கட்டி இருந்ததால் அதனால் முடியவில்லை.

ஒரு கட்டத்தில் வெயில் குதிரையின் மீது சுரீரென்று அடிக்கவே, கயிற்றை அறுத்துக்கொண்டு சரென்ன்று சாலையில் பாய்ந்து ஓடியது.

சாலையில் குதிரை வெயில் தாங்காமல் தறிகெட்டு ஓடியபோது தான் எதிர்பாராமல் மனிதனும் மிருகமும் சந்தித்துக்கொண்டனர்.

வெயிலின் கொடூரத்தை முற்றிலும் அறியாமல் அதே சாலையில் வந்துகொண்டு இருந்த ஏசி கொண்ட ஐ10 கார் மீது குதிரை பாய்ந்து விட்டது.

இதை சற்றும் எதிர்பாராத ஓட்டுநர் நிலைகுலைந்து போனார். காரின் மீது குதிரை பாய்ந்ததால், காரின் வின்ஷீல்டு சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

வின்ஷீல்டை உடைத்துக்கொண்டு பாய்ந்த குதிரையின் கழுத்துப்பகுதி முற்றிலும் காருக்குள் சென்று விட்டது. வயிற்றில் இருந்து வால் வரை வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது.

காரின் உள்ளே மாட்டிக்கொண்ட குதிரை அதிலிருந்து வெளியே வர முட்டி மோதி முயற்சிக்க, கார் மேலும் குலுங்கி சேதமடைந்தது.

காரில் பாயந்த குதிரை இத்தனை சம்பவத்தை அரங்கேற்றிக்கொண்டு இருக்க, ஓட்டுநர் பீதியின் உச்சிக்கே சென்று விட்டார்.

காரின் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அது குதிரை. ஆனால் ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் அவருக்கு அது என்னவென்றே தெரிந்திருக்காது.

அப்போது அவரது நிலைமையை நினைத்துப்பாருங்கள். அந்தோ பரிதாபம். ஆனால் காரில் பாய்ந்த குதிரை சற்று நேரத்தில் ஆட்டத்தை நிறுத்துவிட்டது.

காரணம் ஐ10 காரிலிருந்து வெளியான ஏசி. அதனால் குதிரையை கொஞ்சம் அசுவாசப்படுத்தியது.

இந்த நேரத்தில் குதிரையில் நிலைக்கண்டு அதை காப்பாற்ற அதன் உரிமையாளர் தங்கவாலாவும், பொதுமக்களும் கடுமையாக முயற்சிக்க அது தோல்வியில் முடிந்தது. அதனால் அங்குயிருந்த பொதுமக்கள் பலர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஓடிவந்த வனத்துறையினர், அதிக முயற்சிகள் மேற்கொண்டு குதிரை மற்றும் காரின் ஒட்டுநரை பத்திரமாக மீட்டனர். 

வெளியே வந்த குதிரைக்கு கால் மற்றும் கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழியவே, அதனை தங்கவாலா மருத்துவமனையில் அனுமதித்தார்.

அரவிந்த் மாத்தூர் என்ற மருத்துவர் குதிரையை சோதித்து விட்டு, சில அடிப்படை சிகிச்சைகளை வழங்கினார். பின்னர் சிறிய காயங்கள் தான் குதிரைக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் பயப்படவேண்டிய தேவை இல்லை எனவும் கூறி குதிரையை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஒருசில நேரத்தில் இந்தியாவின் இணையதளங்களில் டிரெண்ட் அடித்த இந்த செய்தியால் குதிரையின் நிலைக்கண்டு பலரும் வருந்தினர்.

வெயில்கொடுமையால் குதிரை இப்படி தறிகெட்டு ஓடுவதற்கு மனிதர்கள் தான் காரணம் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குதிரை ஐ10 கார் மீது மோதி பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் காணொளி

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Tuesday, June 6, 2017, 8:30 [IST]
English summary
Horse Collides With Car In A Freak Accident at Jaipur, Rajasthan. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos