ஜெனிவாவில் பார்வையாளர்களை சுண்டியிழுத்த கார்கள் மற்றும் அழகிகள்!

By Saravana

உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மோட்டார் கண்காட்சிகளில் ஒன்றான, ஜெனிவா மோட்டார் ஷோ சீரும், சிறப்புமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து கார் ஆர்வலர்களும், ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களும் இந்த சர்வதேச கண்காட்சியை காண்பதற்கு குவிந்திருக்கின்றனர்.

இந்த சர்வதேச மோட்டார் ஷோவில் ஏராளமான புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், கார்களை மட்டுமே நிறுத்தினால் பார்வையாளர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுவிடுமோ என்று கருதி வழக்கம்போல் அழகிகளையும் தங்களது அரங்கில் நிறுத்தி வைத்து அழகு பார்த்துள்ளன கார் நிறுவனங்கள். இருந்த இடத்தில் இருந்தே ஜெனிவா மோட்டார் ஷோ நிகழ்வுகளை உங்கள் கண் முன் நிறுத்தும் வகையில் இந்த சிறப்புத் தொகுப்பை வழங்குகிறோம்.


மெக்லாரன் பி1 ஜிடிஆர்

மெக்லாரன் பி1 ஜிடிஆர்

மெக்லாரன் நிறுவனத்தின் புதிய ரேஸ் டிராக் மாடல்தான் இந்த பி1 ஜிடிஆர். இந்த கார் மெக்லாரன் நிறுவனத்தின் சிறப்பு ஓட்டுனர் திட்டத்தில் சேர்பவர்கள் மட்டுமே வாங்க முடியும். இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதியில் ஸ்பெயின் நாட்டிலுள்ள கேட்டலூன்யா சர்க்யூட்டில் துவங்க இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் லீ மான்ஸ் ரேஸில் கலக்கிய மெக்லாரன் எஃப்1 ஜிடிஆர் காரின் பெருமையை எடுத்துக்கூறும் விதத்தில். அதே வண்ணத்தை இந்த காருக்கு தற்போது மெக்லாரன் பயன்படுத்தியிருக்கிறது.

மெக்லாரன் பி1 ஜிடிஆர் எஞ்சின்

மெக்லாரன் பி1 ஜிடிஆர் எஞ்சின்

இது ஒரு ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட மாடல். இந்த காரில் 3.8 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயலாற்றுகின்றன. அதிகபட்சமாக 986 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது லிமிடேட் எடிசன் மாடல். மொத்தமாக 35 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்8

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்8

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்8 கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டிசைன் மாற்றங்கள் கண்டிருப்பதோடு, எஞ்சினும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் முன்பு 540 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கியது. ஆனால், தற்போது 610 எச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ஆர்8 காரின் பெர்ஃபார்மென்ஸ்

ஆர்8 காரின் பெர்ஃபார்மென்ஸ்

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய 10 சிலிண்டர் எஞ்சின் கொண்ட கார் 0 -100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 330 கிமீ வேகம் வரை எட்டிபிடிக்கும் வல்லமை கொண்டது. 100 கிமீ தூரம் பயணிப்பதற்கு 11.8 லிட்டர் பெட்ரோலை செலவாகும் என்று ஆடி தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

மெர்சிடிஸ் மேபக் புல்மேன்

மெர்சிடிஸ் மேபக் புல்மேன்

மெர்சிடிஸ் பென்ஸ் காரின் நீட்டிக்கப்பட்ட சேஸீயில் வடிவமைக்கப்பட்ட புதிய லிமோசின் கார் மாடல்தான் மெர்சிடிஸ் மேபக் புல்மேன். 6.5 மீட்டர் நீலம் கொண்ட இந்த காரில் எதிரெதிர் திசையில் இரண்டு வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 4.42 மீட்டர் வீல் பேஸ் கொண்டிருப்பதால் கேபினில் மிக மிக தாராள இடவசதியை அளிக்கிறது. ஓட்டுனர் வரிசை இருக்கைக்கும், பயணிகள் அமரும் பகுதிக்கும் இடையில் தடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரின் எடையை எளிதாக சமாளிக்கும் விதத்தில் திறன்வாய்ந்த 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 523 எச்பி பவரை அதிகபட்சம் அளிக்கும். பர்ம்ஸ்டெர் 3 டி சர்ரவுண்ட் சவுன்ட் சிஸ்டம், 18.5 இன்ச் டிவி திரை என பொழுதுபோக்கு மற்றும் சொகுசு வசதிகள் ஏராளம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் இந்த கார் 5.70 லட்சம் டாலர் விலையில் கிடைக்கும்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

ஃபெராரி 488 ஜிடிபி

ஃபெராரி 488 ஜிடிபி

ஃபெராரி 458 காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடல். சிறப்பான ஏரோடைனமிக் டிசைன் கொண்ட இந்த புதிய காரில் புதிய 3.9 லிட்டர் வி8 எஞ்சினை ஃபெராரி பொருத்தியிருக்கிறது. இந்த கார் எஞ்சின் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்டது. மேலும், முந்தைய மாடலைவிட 50 சதவீதம் கூடுதல் டவுன்ஃபோர்ஸை வழங்கும்.

ஃபெராரி 488 ஜிடிபி எஞ்சின்

ஃபெராரி 488 ஜிடிபி எஞ்சின்

இந்த ஸ்போர்ட்ஸ் காரில் ஃபெராரி நிறுவனத்தின் புதிய 3.9 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 670 எச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 -100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 330 கிமீ டாப்ஸ்பீடு கொண்டது.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ்

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ்

லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் வெலாஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய சூப்பர் கார் இலகு எடை கொண்டது. சாதாரண அவென்டேடார் மாடலைவிட அதி ஆற்றல் வாய்ந்தது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த சூப்பர் காரில் 739 எச்பி சக்தியை அளிக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 349.22 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.கார்பன் ஃபைபர் பாகங்கள் மூலம் இந்த காரின் எடை 50 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண அவென்டேடார் மாடலைவிட 50 எச்பி கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறியிருக்கிறது. இந்த புதிய லம்போர்கினி 3.27 லட்சம் யூரோ விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

ஃபோக்ஸ்வேகன் ஸ்போர்ட் கூபே கான்செப்ட் ஜிடிஇ

ஃபோக்ஸ்வேகன் ஸ்போர்ட் கூபே கான்செப்ட் ஜிடிஇ

எதிர்காலத்தில் தனது கார்களின் டிசைன் எப்படியிருக்கும் என்பதை காட்டுவதற்கான முன்னோட்டமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய ஸ்போர்ட் கூபே கான்செப்ட் ஜிடிஇ மாடல் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தது. புதிய தலைமுறை பஸாத் சிசி கார் மாடல் இந்த கான்செப்ட் மாடலின் அடிப்படையில்தான் உருவாக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு ஹைபிரிட் கார் மாடல் என்பதுடன், இந்த காரின் மைலேஜும் திகைக்க வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதர விபரங்கள்

இதர விபரங்கள்

ஃபோக்ஸ்வேகன் ஸ்போர்ட்ஸ் கூபே கான்செப்ட் ஜிடிஇ காரில் 400 எச்பி பவரை அளிக்கும் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயலாற்றும். இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் என்பதுடன், ஒரு கிலோமீட்டருக்கு 46 கிராம் கார்பனை மட்டுமே வெளியிடுமாம்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

கடைசி புகாட்டி வேரான் கார்

கடைசி புகாட்டி வேரான் கார்

புகாட்டி வேரான் பிராண்டில் தயாரிக்கப்பட்ட கடைசி கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கடைசி கார் தவிர்த்து முதல் காரும் புகாட்டி அரங்கை அலங்கரித்தது. இந்த இரு கார்களையும் ஒரே இடத்தில் காணும் பாக்கியத்தை பெறுவதற்கு ஏராளமான பார்வையாளர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தனர்.

இதர விபரம்

இதர விபரம்

புகாட்டி வேரான் ஸ்போர்ட் விட்டெஸி லா ஃபினாலே என்ற பெயரில் கடைசி புகாட்டி வேரான் கார் அழைக்கப்படுகிறது. இந்த காரில் 1200 பிஎஸ் பவரையும், 1500என்எம் டார்க்கையும் வழங்கும் 8 லிட்டர் எஞ்சிந் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 408.84 கிமீ வேகத்தில் பறந்து உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையை இந்த கார் பெற்றது நினைவிருக்கலாம்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

அஸ்டன் மார்ட்டின் வல்கன்

அஸ்டன் மார்ட்டின் வல்கன்

ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாடல்களில் ஒன்று அஸ்டன் மார்ட்டின் வல்கன். லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே, போர்ஷே 919 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெக்லாரன் பி1 ஜிடிஆர் கார்களை போன்றே இதுவும் ரேஸ் டிராக் வெர்ஷன் மாடல்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் காரில் 800 எச்பி பவரை அளிக்கும் 7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு சீக்குவன்ஷியல் கியர்பாக்ஸ் உள்ளது. ஆனால், இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

பார்வையாளர்களை வசீகரித்த அழகிகள்.

Most Read Articles
English summary
High-end luxury cars take pride of place at this year's Geneva International Motor Show. Have a look.
Story first published: Friday, March 6, 2015, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X