உலகின் விலை உயர்ந்த கார்களுடன் விற்பனைக்கு வந்த பிரம்மாண்ட மாளிகை!

உலகின் காஸ்ட்லி கார் கலெக்ஷனுடன் அமெரிக்காவின் பிரம்மாண்ட மாளிகை ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

Written By:

பல அரிய வகை கார் மாடல்கள், ஹெலிகாப்டருடன் சேர்த்து பிரம்மாண்டமான மாளிகை ஒன்று அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் கட்டிடப் பணிகள் முடிவடைந்த அந்த மாளிகைதான் தற்போதைக்கு அமெரிக்காவின் மிகவும் விலை உயர்ந்த வீடு இதுதான் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

கலிஃபோர்னியாவில் மிக பரந்த இடத்தில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் அந்த மாளிகையில் முக்கிய சிறப்பாக குறிப்பிடுவது விலை உயர்ந்த கார்களைத்தான். ஆம், அந்த மாளிகை வீட்டில் 10 விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களும், 12 விலை உயர்ந்த கார்களும் வீட்டுக்கான கார் கலெக்ஷன் போல் வைக்கப்பட்டுள்ளன.

38,000 சதுர அடி பரப்பில் பரிந்து விரிந்திருக்கும் அந்த வீட்டில் 12 படுக்கை அறைகள், 21 குளியல் அறைகள், 3 சமையல் அறைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், நீச்சல் குளம், மதுபான பார் வசதி, ஏராளமான அறைகள் இருந்தாலும், அனைவரின் கவனத்தை ஈர்த்திருப்பது விலை உயர்ந்த கார்களும், மோட்டார்சைக்கிள்களுமே. ஆம், அத்துனை கார்களுமே ஒவ்வொரு விதத்தில் மிகவும் தனித்துவமானவை.

இந்த மாளிகையில் புகாட்டி வேரான், ரோல்ஸ்ராய்ஸ் டான், ஃபெராரி 488, பகானி ஹூவைரா போன்ற உலகின் மிக விலை உயர்ந்த கார்கள் வீட்டை வாங்கப்போகும் உரிமையாளர்களுக்காக காத்திருக்கின்றன.

மேலும், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, ஏரியல் ஆட்டம் 3, ஸ்பைக்கர் சி8, புகாட்டி வேரான், மார்கன் 3 வீலர் போன்ற பல கார்கள் இந்த வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, கார் சேகரிப்பு ஆர்வமுடைய பெரும் கோடீஸ்வர்கள், இந்த வீட்டை வாங்குவதற்கு உடனே அச்சாரம் போட்டு விடுவார்கள்.

புதிய கார் மட்டும் என்றில்லை, பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத 1936 மெர்சிடிஸ் பென்ஸ் 540கே கார், அல்லார்டு விண்டேஜ் கார்களும் இந்த மாளிகையின் கராஜை அலங்கரித்து நிற்கின்றன. ஒவ்வொரு காரின் மதிப்பும் மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டதாக இருக்கின்றன.

வீட்டில் மேல்பகுதியில் ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம் உண்டு. இதற்காக, புதிய ஹெலிகாப்டரை வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்த தயாராக அந்த வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி, இந்த வீட்டின் விலை என்ன தெரியுமா? 250 மில்லியன் டாலர்களாம். இந்திய மதிப்பில் ரூ.1,700 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவி படங்கள்!

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில ்கண்டு ரசிக்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Monday, January 23, 2017, 17:44 [IST]
English summary
House comes with its own car collection
Please Wait while comments are loading...

Latest Photos