மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதிய போலீஸ் வாகனம்... இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

டெல்லியில், அதிவேகமாக வந்த காவல்துறை வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் இ

By Saravana Rajan

நொய்டாவில் மோட்டார்சைக்கிள் மீது போலீஸ் வாகனம் ஒன்று பயங்கரமாக மோதியதில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். மோதிவிட்டு தப்பிய அந்த வாகனத்தை சிசிவிடி மூலமாக அடையாளம் கண்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நொய்டாவில் உள்ள 11வது செக்டாரில் இந்த சம்பவம் நடந்தது. அதிவேகமாக வந்த காவல்துறைக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா கார் முன்னால் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

இதில், மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டியவரும், பின்னால் அமர்ந்திருந்த சகோதரர்களான இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

விபத்தை ஏற்படுத்திய காவல்துறைக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா கார் ஒரு சில நொடிகளில் அங்கிருந்து தப்பிவிட்டது. அருகில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இளைஞர்கள் இருவரும் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பயங்கர விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில், அந்த டொயோட்டா இன்னோவா கார் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

உண்மையில் இதுபோன்று விபத்தில் சிக்குபவர்களுக்கும் அல்லது அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கும்தான் அந்த இன்னோவா கார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் அவசர உதவிக்காக உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் UP-100 என்ற அவசர உதவித் திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

இந்த திட்டத்தின் கீழ் அவசர உதவி அல்லது விபத்தில் சிக்குவோருக்கு 15 நிமிடத்தில் உதவி கிடைப்பதற்காக காவல்துறைக்கு இன்னோவா கார்களை வழங்கி இருந்தனர். அந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட இன்னோவா கார்தான் தற்போது விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

மேலும், உதவிக்கு செல்ல வேண்டிய காவல்துறையை சேர்ந்தவர்களே விபத்தை ஏற்படுத்திவிட்டு, இதுபோன்று பொறுப்பில்லாமல் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். இந்த நிலையில், காரை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுனர் மற்றும் காரில் இருந்த காவலர் ஆகியோரை சஸ்பென்ட் செய்ய நொய்டா காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் சிங் பரிந்துரை செய்துள்ளார். மேலும், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

இதுபோன்று சாலை விபத்துக்களில் சிக்குவோரை காப்பாற்ற முனைவோருக்கு காவல்துறை சார்பில் எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உளளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு செய்துள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

டெல்லி அரசாங்கம் ஒருபடி மேலே போய், விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுபவர்களுக்கு ரூ.2,000 பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த பொறுப்பை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே இவ்வாறு செய்துள்ளனர். இந்தநிலையில், மோட்டார்சைக்கிளில் செல்வோர் சில விஷயங்களை மனதில் வைத்து செல்வது அவசியம்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

மோட்டார்சைக்கிளில் செல்லும்போது பேசிக்கொண்டே செல்வதை தவிர்க்கவும். சாலையில் முழுக்கவனத்தையும் செலுத்தவும். பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு எளிதில் புலனாகும் உடைகளை அணிந்து செல்வது ஒரு உபாயம்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

கனரக வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களுக்கு வழிவிட்டு விடுங்கள். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க இது உதவும். இருசக்கர வாகனங்களுக்கான தடத்தில் பயணிக்கவும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...!!

அருகில் அல்லது பின்னால் வரும் வாகனங்களை கவனித்து செல்லவும். ரியர் வியூ மிரர்கள் மூலமாக அடிக்கடி பார்த்து ஓட்டவும். இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் ஹெல்மெட் மற்றும் கவச உடைகளை எப்போதுமே அணிந்து செல்லுங்கள். அது உங்கள் உயிரை காக்கும் கவசமாக இருக்கும். அலட்சியம் காட்டாதீர்கள்.

{promotion-urls}

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How to Avoid an Accident on a Two Wheelers. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X