கிட்னி கிரில் இல்லாமல் பிஎம்டபிள்யூ கார்கள் எப்படியிருக்கும்?

By Saravana

பிஎம்டபிள்யூ கார்களின் முகத்திற்கு வசீகரித்தை கொடுக்கும் முத்தாய்ப்பான அம்சம் அதன் சிறுநீரக வடிவ இரட்டை கிரில்கள்தான். அந்த இரட்டை கிரில்கள் இல்லாமல் பிஎம்டபிள்யூ கார்களை நினைத்து பார்க்க முடியாது என்ற மனநிலை வாடிக்கையாளர்களிடமும், பிஎம்டபிள்யூ ரசிகர்களிடமும் இருக்கிறது.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ கார்களில் சிறுநீரக வடிவ கிரில் இல்லாமல் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனையாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட மாதிரி படங்களை பிரபல ஆட்டோமொபைல் தளம் வெளியிட்டுள்ளது. அந்த தளம் வெளியிட்டிருக்கும் படங்களையும், பிஎம்டபிள்யூ சிறுநீரக வடிவ கிரில் பற்றிய சில சுவையான தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.


சுவையான தகவல்கள்

சுவையான தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளிலிருந்து சுவையான தகவல்களையும், படங்களையும் காணலாம்.

 கார் மாடல்கள்

கார் மாடல்கள்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் முதல் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் உள்பட பிஎம்டபிள்யூவின் 16 கார் மாடல்களை தியோபைலஸ் சின் என்ற அந்த தளம் வெளியிட்டிருக்கிறது.

முதல் கார்

முதல் கார்

சிறுநீரக வடிவ இரட்டை கிரில்லுடன் வெளியிடப்பட்ட முதல் கார் பிஎம்டபிள்யூ 303. 1933ம் ஆண்டு ஜெனீவா சர்வதேச ஆட்டோமொபைல் ஷோவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

டிசைனர்

டிசைனர்

ஜெர்மனியின் பதேன் என்ற இடத்தை சேர்ந்த இலே சகோதரர்கள் உருவாக்கிய ரோட்ஸ்டெர் கார் மாடலில்தான் இந்த இரட்டை சிறுநீரக வடிவ கிரில் முதல் முறையாக இருந்தது. அதனை பார்த்து லயித்து போன பிஎம்டபிள்யூவின் டிசைனர் பிர்டிஸ் ஃபீல்டர் என்பவர்தான் பிஎம்டபிள்யூ 303 காரில் இரட்டை சிறுநீரக வடிவ கிரில் டிசைனை கொண்டு வந்தார்.

உற்பத்தி

உற்பத்தி

பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு புதிய முகவரியை கொடுத்த இரட்டை சிறுநீரக வடிவ கிரில்லுடன் வந்த பிஎம்டபிள்யூ 303 கார் 1934 முதல் 1936ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது.

அடிப்படை மாடல்கள்

அடிப்படை மாடல்கள்

பிஎம்டபிள்யூ 303த காரின் அடிப்படையில் பிஎம்டபிள்யூ 315, பிஎம்டபிள்யூ 319 கன்வெர்ட்டிபிள் மற்றும் பிஎம்டபிள்யூ 329 கார்கள் வடிவமைக்கப்பட்டன. அனைத்தும் இரட்டை சிறுநீரக வடிவ கிரில்லுடன் வெளியிடப்பட்டன.

ஹிட்லர் மீசை

ஹிட்லர் மீசை

ஹிட்லர் மீசையை சித்தரிக்கும் விதமாக இரட்டை கிரில் டிசைன் அறிமுகம் செய்யப்பட்டதாக ஒரு கட்டுக்கதையும் உண்டு. ஆனால், பிஎம்டபிள்யூ 303 கார் அறிமுகம் செய்யப்பட்டபோது ஹிட்லரும் பெரிய அளவில் சாதித்துவிடவில்லை என்றும், பிஎம்டபிள்யூவும் ஹிட்லரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெரிய நிறுவனமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

மற்றொரு காரணம்

மற்றொரு காரணம்

முதலில் வெளியிடப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களில் இருந்த படுக்கை வாட்டிலான ஒற்றை கிரில் டிசைன் கார் வேகமெடுக்கும்போது விசில் சப்தத்தை கொடுத்ததாகவும், இப்பிரச்னைக்கு தீர்வு காண நினைத்த பிஎம்டபிள்யூ டிசைனர்கள், அந்த ஒற்றை கிரில்லை இரண்டாக மாற்றி டிசைன் செய்து பொருத்தியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

 டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

பிஎம்டபிள்யூ கார்களின் இரட்டை சிறுநீரக வடிவிலான கிரில் டிசைன் செங்குத்து நிலையிலிருந்து படிப்படியாக தற்போது படுக்கை வாட்டில் மாற்றம் கண்டுள்ளது.

பரிணாம மாற்றம்

பரிணாம மாற்றம்

பாரிஸ் நகரில் உள்ள பிஎம்டபிள்யூ பிராண்டு ஸ்டோர் ஒன்றில் பிஎம்டபிள்யூவின் இரட்டை சிறுநீரக வடிவ கிரில்லின் பரிணாமத்தை விளக்கும் வகையில் வைக்கப்ப்டிருக்கும் காட்சி பொருளை படத்தில் காணலாம்.

Source: theophiluschin.com

Most Read Articles
English summary
A familiar Automobile rendering expert Theophilus Chin has envisioned 16 BMW models without the traditional kidney grille.
Story first published: Wednesday, August 13, 2014, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X